பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

செந்தமிழ் பெட்டகம்

குறிக்கின்றார் முருகன் உள்ள பிற இடங்கனையும் சுட்டிக் காட்டுகின்றார்

திருச்சீரலைவாயில் (திருச்செந்துார்) வேழத்தின் மேல் முருகன் விளங்குவதாகப் பாடுகின்றார் விலங்குலகையும், சட உலகையும் கடவுளானவர் அறிவு இன்பமாக ஆளுகிற காட்சி இது பொதுமையறத்தில் அனைத்தும் ஒன்றாகத் தோன்றும் காட்சியைக் காண்கின்றோம்

முருகனது முடியிலே பலவகை வடிவங்களும் ஒன்றாக இணைந்து விளங்குவது இதனையே குறிக்கின்றது உலகிலுள்ள மக்கள் காதல், போர், ஞானம், விஞ்ஞானம், சட்டம் என்று பலப்பல துறையில் முயல்கின்ற முயற்சியை எல்லாம் ஆறு பிரிவாகப் பகுத்து, அவற்றையே ஆண்டவரின் ஆறு முகங்களாக்கி, அவற்றின் இயக்கநிலையைக் குறிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவனவாகப் பன்னிரண்டு கைகளையும் புகழ்ந்து, இவ்வாறு அனைத்துலகையும் முருகனது வடிவாக்கி, அங்கே இயற்கையும், அந்தப் பெருங்காட்சியில் ஈடுபடுவதால் மூங்கில்கள் குழல் ஊத, சங்குகள் ஒலிக்க, இடியே முழவாக ஒலிக்க, ஆண்டவனது பிரபஞ்ச விரிவின் வடிவான மயிலே கொடியாக வெற்றி முழக்கம் செய்ய, அடியார்க்கருள முருகன் விரைந்து வருவதனைத் திருச்சீரலைவாயின் பெருமையாகப் பாடுகின்றார் புலவர் திருஆவிநன்குடி அவர் கூறும் அடுத்த இடம் அங்குச் சிறந்ததோர் ஒவியத்தினைத் தீட்டுகின்றார் புலவர் மில்ட்டன், முன்னோர் வழிபட்ட கடவுள்களை யெல்லாம் நரகத்தில் சாத்தானது தலைமையிலே நிறுத்திக் கண்டுகளிக்கின்றார்

நக்கீரரோ கடவுளர்களை யெல்லாம் குழவியைக் காணவரும் பெருமக்களாக வைத்து, முருகன் எதிரே நிறுத்திக் காண்கின்றார் இங்கு ஒர் ஊர்வலம் வருகிறது இதன் முன்னணியில் நிற்பவர்கள் எலும்பும் தோலுமாய்,