உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான்

குறையென்று கூற எதுவொன்று மற்ற
குவலயத்தில் படுத்தால் - கோல
நிறைமதி யென்னுள் மின்புறப் போர்த்த
நிலவை விரிக்கிறது!

தென்ற லிறுதியாய் வந்துநன் றென்னவே
தேகம் தனைத்தழுவி - கருத்
தொன்ற விரவிக் கவிதை யியற்றி
உதவியும் செய்கிறதே!

140