உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான்

பொன்னொளி வீசிக் கதிரவன் தோன்றுமுன்
புன்னகை பூத்துடனே - என்றும்
என்னுயி ருக்குயி ராகித் திகழ்ந்திடும்
இன்பத் தமிழ் மொழியே
உன்னையு மென்னையு முய்விக்க வுள்ள
உயர்ந்த சுவைக்கவிதைக் - கலை
தன்னை வளர்க்கத் தலைநிமிர்ந் தேயெழு
தாரணி யோங்கிடவே!

136