பக்கம்:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

இவ்வித் மெல்லாம்‌ சொல்ல எண்ணினா னிதயம்‌ வேறாய்ச்‌
செவ்விதன்‌ றண்ணன்‌ கேட்டுச்‌ சிந்தையும்‌ நோவான்‌" சேர,
தவ்வியை யொத்த அண்ணி நகைமுகம்‌ கூம்பு மென்றே,
நொவ்விய தாக வொட்டி நோகாது நுவன்றான்‌ நொந்தே!

சுருக்கமான விடை



"நிலமில்லை; நீரு மில்லை; நேர்த்தியா யில்லை பெண்ணும்‌;
குலமில்லை; யெனம றுத்துக்‌ கூறவா யில்லை அண்ணா!
நலமில்லை உடலில்‌; மேலும்‌ நன்குயோ சிக்கத்‌ தக்க
பலமில்லை மனத்தி" லென்றே, பகர்ந்துவிட்‌ டெழுந்தான்‌ தம்பி!

மாணிக்கம்‌ பரிவின்றிச்‌ சிரித்தல்‌



பொக்கென எழுந்து தம்பி போவதைப்‌ பார்த்த அண்ணன்‌,
திக்கென நெஞ்சில்‌ யாதும்‌ தேராது திகைத்து நிற்கப்‌
பக்கென மாணிக்‌ கம்தான்‌ பரிவின்றிச்‌ சிரிக்க, வேணி
கொக்கென மறைந்தி ருந்தாள்‌, குறுநகை புரிந்து சென்றாள்‌.

நட்டுத்தா னிருந்தான்‌, நெஞ்சு நனிநொந்து நாணி னோனாய்க்‌
"கெட்டுத்தான்‌ போனான்‌ தம்பி; கெடுத்துத்தான்‌ வைத்தாள்‌ வேணி!
கட்டுத்தான்‌ குலைந்த தென்றால்‌, கதைகட்டிச்‌ சிரிக்கு மிவ்வூர்‌;
விட்டுத்தான்‌ பிடிக்க வேண்டும்‌ வேறென்ன செய்வ தென்றான்‌.

பிணக்கும்‌ இணக்கும்‌



வெய்யவன்‌ விண்ணை விட்டே வேறிடம்‌ சென்றாற்‌ போலும்‌,
வையகத்‌ திருள்தான்‌ நீங்கும்‌ வகைகெட்டு விட்டாற்‌ போலும்‌,
"உய்யுமா ரொன்றுண்‌ டோயிவ்‌ வுலகி'லென்‌ றுணறு மாறாய்‌
"ஐயகோ! எனவே சத்யன்‌ அவலமா யமர்ந்தி ருந்தான்‌.

அலையென்னு மிதயத்‌ தோடங்‌ கலுங்காம லிருந்த சத்யன்‌,
சிலையென்னும்‌ வடிவுச்‌ செல்வி சிரித்தது செரிக்கா னாகித்‌
"தலையுன்னு மாறு நொந்தும்‌ தன்கையே தடவ வாரா
நிலையென்ன? நிகழ்ச்சி யெல்லாம்‌ நேர்மாறா யுள்ள திங்கே.