இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
X
அறிவு சால் புலவர் பெருமக்களே! இந்த அறுகம்புல்தான் என்னை இந்த நூல் எழுதத் துாண்டியது. அறுகம் புல்லும் ஆலா மரமும் தெய்வங்களல்ல; பஞ்சபூதங்களும் தெய்வங்களல்ல; அவற்றிலிருந்து வெளிப்படும் சக்திகளும் தெய்வங்களல்ல; ‘தத்வமஸி’ அதுவே நாமான-அவைகளின் சாரமாயுள்ள மனிதனின் இருதயத்தில் அடங்கிய சத்தியமே தெய்வம் என்பதை விளக்கவே ‘பரிசு’ என்ற இந்நூல் எழுதியுள்ளேன்.
படித்துக் குறைகளையாவது சுட்டிக் காட்டுங்கள் எக் காரணம் கொண்டும் இருட்டடிப்பு செய்யாதீர்கள், தயவு செய்து! ஆம் சத்தியமே தெய்வம்.
வணக்கம்.
-- ஆக்கியோன்