உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

'பழுதின்றி நிலத்தில் பாடு
பட்டவன், பயிருக் காக வுழுதொன்ற இட்ட நல்ல வுரமதைத் திருடும் புல்தான், வழுதுன்று மாறு வைத்து வணங்கவே செய்வ தற்காய் விழுதொன்று மாலுக் கின்று வேதனை விளைத்த' தென்னும்

'பல்வேறு விதமிங் குள்ள பறவைபட் சிகளுக் கெல்லாம் இல்வேறு கிடையா திந்த
எழில் மர மன்றி; யென்றும் சொல்வேறு செயல்வே றான சுயநல அறுகின் சூழ்ச்சி வில்வேறின் றம்பைத் தொட்டு விடுமாற யுள்ள தெ’ என்னும் .

உடல்தனை மண்ணிற் குள்ளே ஒப்பமா யொளித்துக் கொண்டு படல்போன்று படர்ந்து யர்ந்து பசுமையாய் வாழும் புல்லைக் குடல்பசி யாற்ற வந்தக் குதிரையே குறைத்தால் கூட நடல்செய்த தென்ன நான்கு நாட்களில் நீளு'மென்னும்.

'நீரையும் நிலத்தை யும்தான் நெறியின்றித்தனதாய்க்கொள்ளக்
கோரையின் குடிகெ டுக்கும்; கொள்ளெள்ளைக் கொல்லும் : துன்றி
ஏரையும் எதிர்க்கும் ; ஈர்க்கும் எருதின்கால் மிதியில் சிக்கிச் சீரையே இழந்த போதும் செயல்திறன்குறையாதெ'ன்னும்!