51
15. நினைவுறுத்தல்
மடுவது கமழக் காண
மதுரித மங்கை யல்லி,
முடிவது கமழக் காண
முத்தமிழ் பயின்றும், மோகம்
விடிவது கமழக் காண ,
விதமாகப் பகலில் ‘பச்சி’
சுடுவது கமழக் காணச்
சோர்ந்தமர்ந் திருந்தா ளங்கே !
“பாசமாய்க் குளத்தில் பூத்தும்
பகலோனைப் பார்த்தற் கஞ்சி
வாசமாய் வழங்க லற்று
வாய்மூடும் வருத்தம் தீர்க்க
நேசமாய் நீல வான்கண்
நிறைமதி பூத்து நின்றும்
மோசமா யல்லிப் பூவேன்
முகங்குவிந் துள்ள” தென்றேன்.
“பழுத்தது, பருவம் முற்றிப்
பலங்கெட்ட பசுவைப் பற்றிக்
கழுத்தினில் நுகத்தைக் கட்டிக்
கலப்பையைப் பூட்டிக் காட்டில்
உழத்தொடங் கிடவே, ஒம்பா
வுடலோய்ந்து படுக்க வோங்கி
‘அழத்தெரி யாத’ தென்றே
அடித்தன னதைக்கண்” டென்றள்.
“பொதுமையைப் புரிந்து கொண்டு
போற்றத புத்துார் வாசி
முதுமையைப் புரிந்து கொண்டு
முறைசெய்யான் ; மூக னகிப்
பதுமையைப் பரிந்து கொண்டு
பக்திசெய் வான்;நான் காதல்
புதுமையைப் புரிந்து கொண்டு
புளகிக்கப் போந்தே” னென்றேன்.