பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்த் தொண்டு :

பிற சிறப்புகள்

சிறப்பு

தமிழறிஞர்களுடன் தொடர்பு கொண்டு தமிழறிவை வளப்படுத்தியமை.

சங்க இலக்கியங்கள் அனைத்துக்கும் எளிய உரை எழுதி மலிவுப் பதிப்பில் விற்று இலக்கியங்களை அனைவர் மத்தியிலும் எளிமைப்படுத்திப் புரிய வைத்தமை. மனோ சக்தி, எண்களின் இரகசியம், எண்களும் எதிர் காலமும், தியானம் போன்ற நூல்கள் பல்வேறு நாடுகளில் புகழ் தேடித்தந்தன.

சிறந்த கவிஞர், படிதிருத்துநர், பதிப்பாசிரியர், எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர், சோதிடர், எண் கணித வல்லுநர், ஆவிகள் பற்றிய ஆராய்ச்சியாளர்.

பல்கலைக்கழகச் சொற்பொழிவாளராகவும் கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் இலக்கிய விழாக்களில் தலைமை ஏற்றும் சிறப்பித்தவர்.

வானொலியில் உரையாற்றியவர். குமுதம், குங்குமம், தாய், இதயம், விகடன், ஞானபூமி, முத்தாரம், அமுத சுரபி, கல்கண்டு போன்ற இதழ்களில் இவர் படைப்புகள் வந்துள்ளன.

நந்தி வாக்கு, சோதிட நண்பன் போன்ற பல இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.

தென்னிந்திய இரயில்வே முத்தமிழ் மன்றம், ஸ்ரீராம் நிறுவனம், கம்பன் கழகம், திருவள்ளுவர் இலக்கிய மன்றம், பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் போன்ற பல்வேறு அமைப்புகள் பாராட்டிச் சிறப்பித்துள்ளன. இவரது அறநெறிச் செல்வர், புகழ்பெற்ற பேரூர்கள், புலவரும் புரவலரும் போன்ற நூல்கள் பாட நூல்களாக வைக்கப் பட்டிருந்தன. இவரது படைப்புகளை ஆய்வாளர்கள் ஆய்வு செய்து பட்டம் பெற்றுள்ளனர்.