இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பெற்றீர்; மகிழ்ந்தீர்; பெயரிட்டீர்; பீடுதமிழ் கற்று மகிழநறுங் கல்விதந்தீர்; வற்ருத அன்புமிகக் காட்டினிர்; அன்றன்றும் பாராட்டி என்பும் நெகிழ எனவளர்த்தீர்; பின்பு:தமிழ்த் தொண்டுசெயக் கண்டுந் துணைநின்றீர்; தூயவுளங் கொண்ட துரைசாமி, குஞ்சம்மாள் உங்கட்கே பூப்படையல் வாடிவிடும்; பொன்படையல் மங்குமென்று பாப்படையல் செய்தேன் பணிந்து!