பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

423 கால்டுவெல்


கோட்டில் தங்கியது; பின்னர் கொச்சியை அடைந்தது. நடு இரவில் மெக் காலேவிற்குத் தீ வைத்தான். துப்பாக்கிப் படையின் அறிவிப்பால் வியப் புற்ற மெக்காலே தனது உதவியாளுடன் சமாளித்துக் கொண்டார். செஞ்சு கிருஷ்ண மேனனும் காயமுறாமல் தப்பித்து மெக்காலேவுடன் கப்பலில் சேர்ந்து விட்டார். திருவாங்கூர் சிப்பாய்கள் வீட்டிற்குள் நுழைந்து காவலர்களையும் பிறரையும் கொன்றனர். பொருள் நாசத்தைச் செய்த பின்னர் மெக்காலேவையும் மேனனையும் கண்டு கொள்ள முடியாமல் திரும்பினர்.

மெக்காலேயைக் கொலை செய்யும் முயற்சி தோல்வியுற்றதன் விளைவால் பிற அதிகாரிகளிடமும் பேரச்சம் தோன்றியது. அவர்கள் தங் களைக் காத்துக் கொள்ள முன்னெச்சரிக்கையுடன் இருந்தனர். அவர்கள் கொள்ளையிட்ட பின் மறுநாள் திருவாங்கூருக்குத் திரும்பி வந்தனர். வேலுத்தம்பி இவ்விளைவை முன்னரே அறிந்து ஆலப்புழையை விட்டு விட்டுக் கொல்லம் வந்துவிட்டார். மூன்று ஐரோப்பியப் படை அதி காரிகள், சர்ஜன் ஹியூம், ஒரு பெண் ஆகியோர் இணைந்த ஒரு குழுவும், 12 ஐரோப்பிய வீரர்கள், 33 சிப்பாய்கள் இணைந்த குழுவும் கொல்லத்தினின்றும் கொச்சி சென்று கொண்டிருந்தனர். பாரச் சாலை அருகே வரும் போது அங்கு கம்பெனியாருக்கு எதிரான படைவீரர்கள் பலர் மறைந்திருந்தனர். வேலுத்தம்பிக்குச் செய்தியை அனுப்பித் தாக்குதலுக்கு அனுமதி கேட்டனர். பின்னர் பலவீனமான ஒரு பெண்ணைத் தவிர ஏனையோரை அழித்தொழித்தனர்.

அரசுக்கு ஆளுநரின் அறிக்கை

உடனே அறிக்கையொன்று அரசுக்கு அனுப்ப நேரமில்லாததால் 15 ஜனவரி 1809இல் ஒரு பொது அறிக்கையை அனுப்பி வைத்தார், பாலார்ட்.

"சில நாட்களுக்கு முன்னர், நான் திவானுடன் பேரம் பேசினேன். அவரது விருப்பப்படியே முடிவுகள் அமைந்தன. அவர் ஆலப்புழையில் இருந்து திரும்புவதை விரும்பினர். அவரது பாதுகாப்புக்காகக் கட்சியைப் பலவீனப்படுத்தும்படி வேண்டினார். அவரைப் பாதுகாக்க எனது படகு களிலும் பல்லக்குகளிலும் பல்வேறு இடங்களுக்கு எடுத்துச்சென்றேன். ஒரு நடு இரவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாயர்களின் கூட்டம் திவானின் நண்பரான பத்பநாபப்பிள்ளையின் தலைமையில் எனது வீட்டை முற்றுகையிட்டனர்; தப்பிச் செல்ல தடையிட்டனர்; மாளிகையைத் தீயிட்டனர். எதிர்த் தலைவர்களைக் கொலை செய்தனர்; என்னையும் அழிக்க முயன்றனர். ஆனால், வியக்கும்படி தோல் வியுற்றனர்.விடியுமுன்திரும்பிவிட்டனர்.பல ஆவணங்களும் நூல்களும்