54
"இவன் பணக்காரன்!”
ஒரு கணம் அவள் அமைதியாயிருந்தவாறே, கோப்பையிலிருந்த டீயைத் தனது உதடுகளால் உறிஞ்சினாள். பிறகு ரொம்பப் பழகிப் போனவள் மாதிரி என்னைத் திரும்பிப் பார்த்தாள்.
"இப்படித்தான் நானும் அவனும் -நாங்கள் இருவர் மட்டும்- வாழ்கிறோம். அக்கம்பக்கத்தில் என்னை ஒழுங்குமுறை யற்றவள் என்று தூற்றுகிறார்கள். ஆனால் நான் யார் முன்னும் வெட்கப்படுவதில்லை. நான் எவ்வளவு அவலக்ஷணமானவள்-இருந்தாலும், நான் எதற்கு நல்லவள் என்றுதான் ஒவ்வொருத்தரும் : பார்க்கிறார்கள். ஆம். என் மகன் தூங்குகிறான். எனக்கு இவன் நல்ல பிள்ளைதானே-ம்"
"ஆமாம், ஆமாம்”
“ஆனால், நான் அவனைச் சரியாகக் கவனிக்க முடியவில்லை. அவனுடைய மூளையைத்தான் பாருங்களேன்!"
"ஆமாம், ரொம்பக் கெட்டிக்காரன்தான்
'வாஸ்தவம். அவன் தந்தை ஒரு பெரிய மனுஷர்; கிழவர். அவரை நீங்கள் என்ன சொல்லுவீர்கள்?- அவர்களுக்குப் பல ஆபீஸ்களும் உண்டு. அப்பா! எப்போதும் பேப்பர்களோடு தான் மாரடிப்பு!
என்ன சொல்கிறாய்?-அவர் ஒரு பிரமுகர் என்கிறாயா?"
"ஆமாம். அவர் அன்பானவர்; வயதானவர். ரொம்ப அன்புடையவர். அவர் என்னைக் காதலித்தார். நான் அவர் வீட்டில் வேலைக்காரியாயிருந்தேன்.
பிறகு அவர் திடீரென்று இறந்து போய் விட்டார்.. அப்போது இரா வேளை, அவர் தரையில் சாய்ந்து உயிர் வீட்டவுடனேயே நான் அங்கிருந்து வந்து விட்டேன். ம்... நீங்கள் 'க்வாஸ்' பீர் விற்கிறீர்களா?
"ஆமாம்"
“சொந்த வியாபாரமா?”