பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 O == ஜீவனமாக கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம், அப்பொழுது உழவுத்தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள். 100-க்கு 51 லிருந்து 70 பேராக உயர்ந்ததை அந்த நூற்ருண்டு தொழிற் புள்ளி விபரங்கள் காண்பிக் கின்றன. உழவுத் தொழிலுக்கும் பல இடர்ப்பாடு கள். பருவ மழை தவறியது. பாசன வசதி குறைவு வரிச்சுமை, மகசூலில் பங்கு என்ற பெயரில் கொள்ளை, நிலச்சுவான்தாரின் கொடுமைகள். மற்றும் தமிழ்ச் சமுதாயத்தில் வாழையடி வாழையாக வளர்ந்து மக்களிடையே முன்னேற்றத்தையும் ஒற்றுமையையும் உருக்குலைத்து வந்த சாதிக் கொடுமைகள். o - wo இவைகளுக்கெல்லாம் சிகர்மர்க, சோளுடு சோறு டைத்து என புலவர்கள் போற்றிய சோற்றுக் களஞ்சியமான தஞ்சை மாவட்டத்திலும், அதனை ஒட்டிய பகுதிகளிலும் 1859, 1871, 1872ஆம் ஆண் டுகளில் சூறையாடிய புயலும், பிற மாநிலங்களில் 1875, 1876, 1895-இல் ஏற்பட்ட பெரும் பஞ்சங் களும் இந்திய மக்கட் சமுதாயத்தை சிதைத்து சின்னபின்னமாக்கியது. இந்த காலக்கட்டத்தில் இரண்டு கோடிக்கும் மிகுதியான மக்களை பஞ்சங்கள் விழுங்கி ஏப்பமிட்டதாக அரசாங்க அறிக்கையில் குறிக்கப் பட்டிருக்கிறது. எஞ்சியிருந்தவர்களில் ஒரு பிரிவினர் பிறந்த நாட்டை விட்டே ஒடிப்பிழைக்க வேண்டிய கூலிகளாக மாறினர். அன்று பரங்கிகளின் பேச்சு வழக்கிற்கு வந்த பதம் தான் 'இந்தியக் கூலிகள்'" என்பது. நாடாண்ட பரம்பரை : நாகரீகத்தின் முன்னேடிகள், நுண் கலைகளில் வல்ல வர்கள்; வேதமும்; வியாகரணமும் கண்டவர்கள்: விஞ்ஞானமும் மெய்ஞானமும் வளர்த்தவர்கள்: வானியலும் வேதியலும் அறிந்தவர்கள்; இவர்