உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தெவிட்டாத திருக்குறள் 10.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Q ந்துழில் ஆமத்தில் களவியல் - குறிப்பறிதல் 2. பொதுநோக்கு நோக்குதல் (தெளிவுரை) தொடர்பில்லாத அயலாரைப் போலப் பொதுவாகப் பார்க்கும் போக்கு, புதிதாகக் காதல் கொள் வோரிடம் உண்டு. " ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே யுள ” (பதவுரை) ஏதிலார் போல = (முன்பின் தொடர்பில் லாத) அயலாரைப்போல, பொது நோக்கு நோக்குதல்= பொதுவான பார்வையுடன் ஒருவரை யொருவர் பார்ப்பது, காதலார் கண்ணே உள = (புதிதாகக்) காதல் கொள்பவரிடம் உண்டு. (ஏதிலார் = அயலார்). (மணக்குடவர் உரை) அயலார்போலப் பொதுநோக்கத் தால் நோக்குதல் காதலித்தார் மாட்டே யுளதாம். ( பரிமேலழகர் உரை ) முன்னறியாதார் போல ஒருவரை யொருவர் பொதுநோக்கத்தா னேக்குதல், இக் காதலை யுடையார் கண்ணே யுளவாகா கின்றன(தோழி சொல்லியது) . (விளக்கவுரை) நாம் வெளியே தெருவே போய்க் கொண்டிருக்கும்போது பலரைப் பார்க்கிருேம்- அறிமுக மானவரையும் பார்க்கிருேம்-அயலாரையும் iர்க்கிருேம். அறிமுகமானவரைப் பார்க்கும் பார்வைக்கும் அயலாரைப் பார்க்கும் பார்வைக்கும் வேற்றும்ையுண்டு. அயலார் எல்லோரையும் பொதுவில் பார்க்கிருேம். அறிமுகமான வரைச் சிறப்பாய் நோக்குகிருேம். எனவே, நோக்கிலே, பொது நோக்கு, சிறப்பு நோக்கு என இருவகை யுண்டு