பக்கம்:விந்தன், மு. பரமசிவம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40 விந்தன் இத்தகைய சுயமரியாதை சிந்தனையோடமைந்த கதைதான் 'அவன் ஏன் திருடவில்லை' ஒரு ஜவுளிக் கடையின் முன் அமாந்து கூடை, முறம் பின்னிக கொண்டிருந்தான் வெறும் கோவணத்துடன் ஒரு கிழவன் அவன் மேல் பச்சாதாபப்பட்டு அந்த ஜவுளிக் கடை ஊழியன் கிழவனுக்கு ஒரு போர்வை இருந்தால் நன்றாயிருக்குமே என்று கருதி சக ஊழியனுடன் ஜவுளிக்கடையில் இரண்டு போர்வையைத் திருடி கிழவனுக்கு ஒரு போர்வையைக் கொடுத்தான் அதைப் பார்த்த கிழவன் சிரித்தான் "ஏன் சிரிக்கிறீர்கள்?' என்றான் அவன 'ஒன்றும் இல்லை எனக்குப் போர்வை இல்லை என்று நீ சொன்னாயே, அதற்காகச் சிரித்தேன்' என்றான் கிழவன் "அப்படியானால் உங்களிடம் போர்வை இருக்கிறதா? என்ன?” "இருக்கிறது தம்பி, இருக்கிறது ஆனால் அதை உன்னால் பார்க்க முடியாது அந்தக் கணபதியாலும் பார்க்க முடியாது' 'அது என்ன போர்வை தாத்தா அப்படிப் பட்ட போர்வை' என்றான் அவன் "அதுதான் மானம், தம்பி மானம், அந்த போர்வை உள்ளவன் இந்த போர்வையை விரும்பமாட்டான்' என்றான் கிழவன் திருந்தியவன் கதை திருடன் திருந்தி வாழ நினைத்தால் அவனை நம்ப மறுக்கும் சமூகம், பணக்காரன் போடும் பகல் வேஷங்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது போலீஸ்காரன் திருந்தியவனை மீண்டும் திருடத் தூண்டுகிறான் உழைப்பவனுக்கு காலணா கொடுக்க மறுப்பவன் நானூறு ரூபாயைப் பறிகொடுக்கிறான் எல்லாம் ஏமாந்துதான் கொடுப்பார்களா ஆம் என்கிறது 'சிறைப் பறவை என்ற கதை ஏமாந்து கொண்டிருக்கும் வர்க்கத்தை மேலும் ஏமாற்றிக் காலங்காலமாக ஏமாந்து கொண்டிருக்கிறது ஒரு வர்க்கம் அந்த வர்க்கத்தை மேலும் மேலும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது மற்றொரு வர்க்கம் இந்த இரு வேறு வர்க்கத்துக்கிடையே நடை பெறும் போராட்டத்தில் உணர்ச்சி வசப்பட்டு சிறைசெல்வோரும், செத்து மடிவோரும் ஏழை எளிய அப்பாவிகளே அவர்கள் திருந்தி வாழ வழியில்லையா? என்றும் அவர்கள் சிறைப் பறவைகள்தாமா? மூடப்பழக்கங்களே மூலதனம் ஏழை எளியவர்களின் மூலதனம், பெருஞ்சொத்து மூடப்பழக்க வழக்கங்களே, தலையெழுத்து என்னும் தத்துவமே