பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

அணியறுபது

உலகப் புலேகளில் உழலாமல் புலன்களை அடக்கி உள்ளம் தூயராய மேலோரே பரமானந்த வெள்ளத்தில் தோய நேர்ந்துள்ளனர். அந்த உண்மையை இங்கே ஒர்ந்து உணர்ந்து கொள்கிருேம்.

50. ஒர்தற் கணிகம்பன் ஒண்கவியே; உள்ளுணர்ந்து தேர்தற் கணிநம் திருக்குறளே;-சேர்தற்குச் செவ்வேள் திருவடியே செய்யஅணி; சேர்ந்தவர்க்கு எவ்வேளை யும் அணியே. (ருo)

இ-ள் கம்பர் பெருமான் இன்பக் கவியே ஒர்ந்து உணர்தற்கு அழகு: திருவள்ளுவ தேவரின் திருக் குறளே தேர்ந்து தெளிதற்கு அழகு செவ்வேள் அமலன் திருவடியே சிவகோடிகள் சேர்ந்து உய்தற்கு அழகு. அவ்வாறு சேர்ந்த முத்தர்களுக்கு எவ்வேளையும் அரியஇன்பமும் பெரிய அழகும் ஆம்.

ஏகாரங்கள் தெளிவும் தேற்றமும் தெரியகின்றன. அறிவும் ஞானமும் ஆ ன் ம இன்பங்களும் இங்கே உரிமையாய் நன்கு உணர வந்துள்ளன.

கம்பரது காவியம் அறிவுக்கு அரிய பெரிய ஒர் இன்ப நிலையம். அதனை இனிய சுவர்க்கலோகம் என்றும் சொல்லலாம்; அங்கே எல்லா இந்திர போகங்களையும் எவ்வழியும் செவ்வையாக அனுபவிக்கலாம். உள்ளம் உவகையுற, உணர்வு ஒளிபெற. உயிர் உயர்ந்து உவந்து திகழச் சிறந்த இன்ப நலன்கள் அதில் எங்கணும் நன்கு கிறைந்துள்ளன.