சாவின் முத்தம்/கூதிரை யாமம்

விக்கிமூலம் இலிருந்து
கூதிரை யாமம்


கருநீல வானத்து அரங்கில் கூத்திடும்
துளிதூங்கு முகில்கள், சித்திரக் குளிரை.
மலையில் ஊற்றின! வாழைக் குருத்து
வடிவம் போல வளரும் அருவி:
விரைந்து தன்னிடம் வருகின்ற நீரை
மடியில் வாரிச் செழித்தது!

கோடை வளர்த்த, தடுப்பை எல்லாம்
மழையின் வளத்தால் கழித்து; பனியில்
எடுப்பாய்ச் சிரிக்கும் அரசிலை மேலே
அலையும் நரம்புகள் போலக் காட்டு
ஆறு நடந்தது! அருவியும் தன்கை
நீட்டி அழைத்தது! சிவந்த வெள்ளத்து
முகமெலாம் திருமணம்! அகத்தில் பளிச்சிடும்
தோட்டத்துச் சிரிப்பால் தொட்டு, மேனியைக்
கூட்டி முடிந்து குதித்து ஓடின.

சுழிந்தபச் சாப்பைத் திருகி, புழுதியை
மிச்சம் இடாமல் உரித்து; விரைவாய்த்
தக்க நேரத்தில் சகாயங் தேட
கொக்கிக் காற்று குனிந்தது! பழுப்புகள்
அக்கரையாக அதன்மேல் குதித் தன!

அதிரும் உலகில் நெறிதேய்ந்த மக்களின்
ஆணை போல் வைர மின்னல் ஆடிற்று!
வடுவை நிறுத்தும் மரகதக் கொப்பில்
குங்குமம் இழுக்கும் கொழுந்துகள்; இடியால்
கொதும்பின! ஊதலால், கூட்டுப் பறவைகள்
அதுங்கின/ காதல் எச்சரிக் கும் இதழ்,
பதுங்கிற்று வஞ்சியின் பவளக் கரைகளில்

சிக்காறக் கிடந்த நீண்ட உலகம்
ஒடுங்கி ரணத்தில் உறங்கிற்று!
மணிக்கூரை வேய்ந்த வீடும், மாட்டமும்,
அணிலின் முதுகு போல் ஆயின அன்று!

பொன் தாழ் அருவிப் புனல் அசை கின்ற
பாதையில் ஓர்குடில்! ஊதையால் நடுங்கும்
பிரேதச் சாவடி! பிள்ளை வண்டின்
சித்திரக் கூடு தேன் கலந்த உடனே
பொத்தல் காட்டுதல் போல, அந்தக்
குடிசையின் அங்கம் காணப்பட்டது.

ஒழுக்கு. அறிந்து பழுதுகள் துவட்டி,
குழந்தைக் குவியலைக் கோலி, சூடு
அமைத்துத் தானும், கொடிக்கும் இமைகளைக்
குவித்து முடிந்து தூக்கம் பெய்தாள்!

மூச்சு விடாமல் வழியுங் குளிரில்
சில்லரிச் சிலம்பு புலம்புதல் போல,
காசுகே ளாதே கத்தும் தவளையின்
ஆட்சி நீண்டது! அந்நேரத்தில்
கூரையின் மூக்கில் குளிர்ந்த முத்தை
வார்த்து நேரம் வளர்த்தது அந்தரம்!

ஊதை திரும்பும் வீட்டில் மூச்சை
வேது பிடிக்க விரைவான் பையன்.
கூடல்வாய் வள்ர்க்கும் வாடாச் சொட்டுகள்
ஓலையில் தடுக்கி மேலே உதிர்ந்ததால்
தூக்கம் எழும்பித் துணைவிழி இரண்டையும்
தாக்கிற்று இல்லமே சிலிர்த்தது

தேம்பிற்று இளமை சிறுமி தரைஉத்தி
வறுத்த மொச்சையின் வாயைப் போலக்
குளிரிதழ் நீவிக் கொட்டாவி அனுப்பினாள்.

மீண்டும் அமைத்த தூக்கம் பார்வைக்
கூண்டில் நுழைந்து குளித்தது!
கொச்சிப் பூ உதிர் கபில வண்ணத்துச்
சுருளும் இருட்டில், முடங்கிக் கிடந்தன
பச்சைக் குழந்தைகள்! தீய கனவின்
வரிகளை உதடு வரைந்திட அன்னை
பொருந்தாது கொஞ்சம் புரண்டாள், மூலையில்
கிடந்த விளக்குத் தண்டில் முகம்விழ,
உலராத காயம் நனைந்தது அழகில்!
இந்தத் தீங்கை இழைத்தது எதுவென
கைவிளக் கேற்றிக் காணுவ தற்குத்
தேடினாள் தீபம் திரும்பினள். வாயின்
நுனியில் முளைத்த அசதி, அவளைக்
கவிழ்த்தது கீழே கூடல் முகட்டின்
மேலோர் சத்தம் விரிந்தது! மெதுவாய்க்
காதை அழைத்தாள். கண்கள் ஒடின!
"சரசர" என்னும் சத்தம், முடுக்கில்
புடை புடைத்து-நகர்ந்தது! கோதையின்

உள்ளம் இறுதி, உதட்டின் உச்சி,
தள்ளாட் டத்தில் கட்டுத் தளர்ந்திட,
விளக்கைத் தேடும் வஞ்சியின் கரங்கள்
துடைப்பக் கட்டையின் இடுப்பைக் கெளவின!
சிறுசிறு அசைவுகள் பெருக, நினைவுகள்
பலப்பல் விதமாய்ப் படையெடுத் தாடின!
இழைவிளக் கின்றி இடிந்தாள்! குழந்தைகள்
மழையில் நனைந்ததை நெஞ்சில் முடிந்தாள்.


மின்னல் விரிந்தால் விளக்கே வேண்டாம்!
அப்போது வீட்டிற் கதுவும் இல்லை.

மெதுவாய்க் கதவின் வாய்நீக்கி, திண்ணை
விளக்கு மாடத்தில் விழுந்தது அவள்கரம்!
கண்கள் புழங்கின கூண்டில். நெஞ்சம்
எண்ணெய் வர்த்தியில் எழுந்தது! கீழே
கவனிக்க வில்லை. கால்தடு மாறி,
கணவன் மேலே கவிழ்ந்தாள். கணவன்
முணுமுணுத் தெழுந்து “மூதேவி. என்னடி
ஆள்படுத் திருக்கிறேன் அணைந்ததா உன்விழி”
என்று, எரிந்து கொண்டே எழுந்தான்.

“நீங்களா இங்கே நித்திரை இடுவது?
இந்த மழையில் எப்படி வந்து
சேர முடிந்தது? சேற்றில் ஊறிய
எருமைப் பத்தைப்போல் ஒருவண்டி சகதி
இருந்திட மாடுபோல் வருமா தூக்கம்!
எழுங்கள் உடனே! முழுநெருப் பெட்டி
இன்றுதான் வாங்கி எங்கோ தொலைத்தேன்.

வெளிச்சம் வேண்ரும். வீட்டின் உள்ளே
‘சரசர’ வென்று வந்த ஓசையை
மின்போல் எழுந்து என்ன என்று
பார்க்க வேண்டாமா? பச்சைக் குழந்தை
என்ன ஆனதோ? எழுங்கள் எழுங்கள்”
என்றாள் மனைவி.
-ஒய்யாரம் குறித்து,

“ஒன்று மில்லை! உன்மன் திப்படி
அச்சத் தாலே அதிரலாம் கண்ணே!
சற்று முன்னே,சுண்டெலி ஒன்று
என்மேல் தாவி எழுந்தது! வீட்டின்
உள்ளே வந்து சள்ளை வைத்து
இருக்கலாம்! இந்த வருத்துங் குளிரில்
தனியாய்ப் படுத்தல் தகுமா கரும்பே?
ஊர் உறைந்து ஒடுங்கிக் கிடக்கும்
இந்த வேளைதான் இனிப்புக் குரியது!”
என்றான்.

- அந்த இளந் தமிழச்சி

பேச்செடுக் காமல்; பின்நடப் பவைகளைத்
தன்பொறுப் பாக்க, களைந்த அமைதி
அழகு பிரிக்க, அரும்பாய்ச் சிரித்து;
தாண்டாத வில்விழிச் செங்கண் பாண்டியன்
தாழைமோத் தைத் தோளில் பூத்து;
வெட்சிப்பூ மேலே விளையாடும் அலரிபோல்
வரவுபார்த் திருக்கும் திருவாள் இதயத்துக்
குளிர்ந்த உதட்டில் மணிவாய் பாய்ச்சி
"சஞ்சரிக்கும் இன்பச் சரக்கே!” என்று
வாரினாள் அவனை வாழ்த்தி!



பசலே வானத்து நிசியில் வடிந்த
கண்பனி எடுத்துக் களிப்பில் வைத்துச்
" சீதப் புனலின் சுளேயோ " என்று
சந்தனச் சுவடிக் கன்னத்தை இதழ்கள்
உழுதிட, சித்திரப் பழச்சாற்றுப் பரப்பில்
ஊன்றினான் இன்பம் விளைந்தாள்! இருமுகம்
இரண்டு நிலவு ஈரைந்து பூக்கள்!
பாகு பொதிந்த பவளவாய்க் கிழிசல்
மணிநீர் அள்ளும் தாமரைக்காடு!
மைதான விழிகள் மலர்ந்தன விழுதுக்
கையில் மெய்யேறக் கலந்தனர் கொஞ்சம்
வையத் தொடங்கிற்று மனப்பேச்சு குடும்பம்
செய்து கொண்டன திருவிழா 'இச்சுகள்!"


பூத்து,அமையாத பூவொன்று சொல்லி
சாத்துவான் வாயை கங்கை சிரித்து
'நல்ல தமிழன் இசைக்கும் பாடல்
வெல்லம்! இதழின் மணிச்சுளை!' என்பாள்.
தேன்வரை கின்ற சிங்கார உலகின்
அசையா நெஞ்சம் அமுதின் தேக்கம்!
சுருண்ட நினைவுகள் மதத்தின் பிரசவம்!
இல்லையா கண்ணே!” என்பான். ஒப்புவாள்.
செவ்வை கொடுக்கும் சங்கக் கவிைதை
ஒவ்வொரு கத்தாய் விழுந்தது -
திரும்படி” என்று சிரிப்பான். குங்குமக்
கரும்பின் தெளிவே வாழ்க என்று
வாழ்த்து நகர்த்தி மகிழும் பூங்கோதையின்
பலாப் பழத் திமுகப் படையலின் குவிரிதழ்
வதங்கலில் லாத வாதாம் பழங்கள்.

“இதழ்கள் எங்கே?” என்பாள் வஞ்சி
வரவு கொடுக்க எழும்பும் பாண்டியன்
இரண்டு உதடும் இரத்தினச் சீவல்!

திருநாள் செய்து திரும்பும் செங்கதிர்
வரிவரி யாகச் சிரித்து; தங்கம்,
'முத்துக் கூளம், மரகதக் குப்பை,
பதும ராகப் பட்டுடை, எல்லாம்
வையத் திற்கு வழங்கும் பரிசுகள்"
என்று தெரிந்தும், இப்படிக் கதிரை',
துன்பம் அடைத்துச் சிறையில் இட்டது
தன் குறை என்று நொந்து, மேகம்,
செம்மைச் சுவட்டில் மாறிக் கொள்ள,
ஒருதரம் நினைவைத் திருத்தி, சூட்டில்
காந்தும் நிறத்துச் சேலை உரித்து
வங்கப் பருத்தி, உடுத்து,
வானில் துள்ளி. மன் றல் கொடுத்தது!

தொய்யா உலகத்து நுணுக்கம் பெய்து
மெய்யறம் வகுத்து வாழ்ந்தமூ வேந்தரின்
சிங்க ஆதனத்துத் தமிழரசு போல;
தங்கப் புழுதி நிரவலில், செங்கதிர்
கதிர்க்கை ஊன்றி உதித்தான் கிழக்கில்!

கடலின் இடுப்புபோல் கிடந்த, இல்லத்து
மணியிருட் டரசு மாண்டது! இளமை
இறக்கை தெளித்தது! குழந்தைகள் என்னும்
நீலப் புறாக்கள் கூவின மகிழ்ந்து!
நினைப்பைக் கலைத்து, புறாவின் தொகுதியைத்

தங்கமே என்று தழுவிடப் பெற்றோர்
ஓடினர்! இதய வெளியில் புரட்சி
அமைத்தது குளுமை! அமைந்தது நிலவு!
பனிப்பிடித்தேறும் உதய வர்ணத்தைப்
பார்த்தது கருக்கல்! பார்த்த இளைஞரின்,
கக்கரிச் சதையால் கழுவிய சிரிப்பு
தூற்றல் கொடுத்தது! சிட்டுக் குருவிபோல்
ஓசை பறித்து, ஆசை பிழிந்து,
அம்மா வென்று அழைத்தனர்! பெற்றோர்
சும்மா இருப்பரா? தாவினர்! புறாக்கள்
ஓவிய மாயின! உலகமும் நகைத்ததே!


விரைவில் வெளிவரும்

1. ‘ஜீவா’ - கதைகள்
2. ‘உலக அரங்கு’ - புதுமைப்பித்தன்
3. ‘காமினி -ஸ்ரீ யோகியார்
4. ‘முல்லைக்கொடியாள் - விந்தன்
5. ‘அருணோதயம்’ - கிட்டு
6. அன்னை -மாக்ஸிம் கார்க்கி
7. சஞ்சலா - M.S. கமலா
8. மாயக் குயில் - சாரி
9. ‘தரும பூஷணம்‘ - ஜீவா?
10. “பலி” - புதுமைப்பித்தன்
11. LAUGHTER OF BEAU’
Rendered into English
BY V. R. M. CHETTIAR B
[From the Poet Barathi Das “அழகின் சிரிப்பு” ]


STAR PUBLICATIONS
 Palakarai – Trichinopoly