உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

பாண்டிய மன்னர்

வாழ்வில் வேண்டிய வாழ்வெல்லாம் பெற்றுள்ள உனக்கு மேலுலக வாழ்வில் நாட்டம் உண்டாய் இருப்பது பொருத்தமே. அரசருள் உலகு மதிக்கத்தக்க புகழ் படைத்த நினக்கு. இராஜ சூயமும் அசுவமேதமுமே இயற்றவுரிய வேள்விகளாம். அவற்றை முறைப்படி நிறைவேற்றி வைக்க அறிந்த பெரியார் பலரை அயல் நாடுகளிலிருந்தும் நம் நாட்டின் உட்பகுதிகளிலிருந்தும் வரவழைத்து வேண்டுமாறு செய்யலாம்.”

புரோகிதர் தலைவர் பேசிய பேச்சுக்களைக் கேட்ட முதுகுடுமிப் பெருவழுதி அகமிக மகிழ்ந்து, “அந்தணர் தலைவரே, நீர் கூறியது பொருத்தமே. சில நாட்களாக என் மனத்தில் ஒரு கவலை யிருந்ததுண்மையே. என் முன்னோர் பொருட்டும் என் நாட்டின் க்ஷேமத்தின் பொருட்டும், வேதங்களில் விதித்த வண்ணம் இனி நான் செயற்குரிய யாகங்கள் எவையேனும் உளவோவென நான் எண்ணியதுண்டு. தேவரைத்திருப்தி செய்விப்பது அரசர் கடமைகளுட் சிறந்ததென்பதை யான் அறிவேன். நீவிர் கூறியது போல இராசசூயமும் அசுவமேத மும் இயற்ற முயல்வேன். அவ்வேள்விகள் இயற்று விக்கும் நெறி அறிந்தாரை இன்னாரென அறிந்துள்ள உம்மைக் கொண்டே நன்கு நடத்திக் கொள்வேன்,” என்று கூறினன்.

புரோகிதர் தலைவர் உடனே அரசனிடம் விடை பெற்று, அரண்மனையின் புறத்தே வந்து, அமைச்சரது மாளிகை யடைந்து, அமைச்சர் தலைவரிடம் அரசன் கருத்தைத் தெரிவித்தார். அவரும் சில நாளாக அவ்வுண்மையை ஒருவாறு அறிந்திருந்தாராகையால், அம் முயற்சி நிறைவேறுதற்கு வேண்டுவன செய்யத்-