உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாண்டியன் பல்யாகசாலை...பெருவழுதி

23

புலவர் பலர் அவனருகடைந்து அவனைப் புகழ்வாராயினர். நெட்டிமையார் என்ற பெரும்புலவர், பின்வரும் கருத்தமைந்த பெரும்பாடல் ஒன்று பாடினர்:

“விரைவாகச் செல்கின்ற தேர்கள் குழித்த தெருவின் கண்ணே, வெள்வாய்க் கழுதைகளை ஏரிற் பூட்டி யுழுது பகைவர்களது அகன்ற இடமுள்ள, அரண்களைப் பாழ்படுத் தினை. நின் பகை நாட்டில் புள்ளினம் ஒலிக்கும் விளை வயல்களில் வெண்ணிறமான் தலையாட்டம் அணிந்த செருக்குமிக்க குதிரைகளின் கவிந்த குளம்புகள் பதியத் தேர் செலுத்தினை. அசையும் இயல்பும் பெரிய கழுத்தும் பரந்த அடியும் கோபமுள்ள பார்வையும் விளங்கிய கொம்பும் உடைய களிற்றை அப்பகைவரது காவல்மிக்க குளங்களிலே படிவித்தனை. அத் தன்மையுள்ள சினமும் அதற்கேற்ற செய்கையும் உடையாய். ஆகையால், ஒளிமிக்க இரும்பாற் செய்த ஆணியும் பட்டமும் அறைந்த கேடகத்துடனே பிரகாச மிக்க நெடுவேல் ஏந்திப் பகைவரது ஒளி மிக்க படைக்கலங்களைத் தாங்கி முன்னே விரைந்து செல்லும் உனது முன்னணியின் வலிமையைக் கெடுத்தல் வேண்டித் தம் ஆசை தூண்ட முன்வந்த பகைஞர்கள், அவ்வாசை பின் ஒழிய வசை பெற்று வாழ்ந்தோராயினர் பலரோ? குற்றமற்ற நல்ல தரும நூலிலும், நால்வேதத்திலும் சொல்லப்பட்ட அடைதற்கு அருமையான புகழ் மிக்க சமிதையும் பொரியும் கொண்டு நெய் மிக்க புகை மேல் எழும்பப் பலவகையாகிய சிறப்பு மிக்க யாகங்களை முடிக்கத் தூண் நடப்பட்ட அகன்ற வேள்விச் சாலைகள் பலவோ? இவற்றுள் யாவையோ பல? பெரும, புகல்வாயாக.”

செய்யுள்

கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்
வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப்