118
பாண்டிய மன்னர்
நெருங்கி, “ஐய, அரசன் தேவிக்கு ஆவதொரு சிலம்பை விலை மதித்தற்கு நீ வல்லையோ?" என்று கேட்டனன்.
அதற்கு அப்பொற் கொல்லன், அடியேன் இச்சிலம்பை விலை மதித்தற்கு அரியேனாயினும், வேந்தர்க்குரிய முடி முதலிய அருங்கலன்கள் சமைக்கும் ஆற்றல் உடையேன், என்று கை தொழுது கூறினன். கோவலன் அப்பொற் கொல்லனே தன் உயிர்க்கு யமதூதனாம் என்பதை உணரலாகாமையால் எவராலும் புகழ்தற்கரிய சிலம்பைப் பொதிந்து வைத்திருந்த சிறு முடியை அவிழ்த்தனன். நாகத்தின் சிரோ மணியோடு வயிரமும் சேர்த்துக் கட்டிய மணிகள் அழுத்துங் குழிகளையுடைய பசும் பொன்னாற் செய்த சித்திரத் தொழில் சிறந்த சிலம்பின் செய் வினையைப் பொய்த் தொழிற் கொல்லன் விருப்பத்தோடு பார்த்தனன். அவன் கண் சிலம்பின் திறத்தை நோக்கியதாயினும், மனம் குற்ற மில்லான்மேற் குற்றத்தையேற்றும் வழியை ஆராய்ந்து கொண்டிருந்தது. சிறிது நேரம் மௌனமாயிருந்து, பிறகு அவன் கோவலனைப் பார்த்து, ஐய, இச்சிலம்பு, கோப்பெருந்தேவிக்கல்லது, பிறர் எவர்க்கும் பொருந்தாது. யான் போய் அரசர் பிரானிடம் இச்செய்தியைச் சொல்லித் திரும்பி வருங்காறும், என் புன் குடிலுக்கு அருகுள்ள இவ்விடத்தில் நீர் இரும்," என்று அரண்மனைக்குச் சென்றான். கோவலன் அக்கீழ் மகன் இருப்பிடத்துக்கு அயலதாகிய ஒரு தேவ கோட்டத்தினுள் ஒதுங்கி யிருந்தான்.
இங்கு இவன் இவ்வாறிருக்க, அரண்மனை நோக்கிப் புறப்பட்ட பொற்கொல்லன், “யான் முன்னர்