நெருப்புத் தடயங்கள்/அத்தியாயம் 12
12
இக்கட்டான சமயத்தில், நமக்கு நாமே வழிகாட்டிப் போவதுண்டு. இதற்கு, மனதுள் புதையுண்டு கிடக்கும் மனேசக்தி தான் காரணம் என்பார்கள்.
மயானத்தில், பதி இழந்தனம், பாலனை இழந்தனம்’ என்று அரிச்சந்திரன் புலம்பியதாக, நல்லூர். வீரை. ஆசுகவிராயர் எழுதிய வரிகளே நினைத்து, அந்த அனதரவு அரிச்சந்திரனுடன் தன்னை ஐக்கியப்படுத்தி, பேதலித்து நின்ற தமிழரசி, அந்த பொய்யாமை மன்னன், அடுத்துக் கூறிய கதி இழக்கினும் கட்டுரை இழக்கோம்’ என்ற வரிகளை நினைத்து, புடவையை வரிந்து கட்டிக் கொண்டாள்.
இலக்கிய வரிகள், சில சமயம், சிக்கலில் தவிப் போருக்கு, தெய்வ வரிகளாகி, அசரீரி குரலாய் ஒலித்து, அடிமனுேசக்தியை, அணுசக்தியாக்கும் என்பதை எடுத்துக் காட்டுவது போல், தமிழரசி தனக்குத்தானே வழிகாட்டி யாகி மீண்டும் வீராங்கனே யாளுள். குனிந்த தலையோடு நின்றவள், நிமிர்ந்த தலையோடு நடந்தாள். அவளுள் ஒரு அசைக்க முடியாத முடிவு ஏற்பட்டது. இனி, யார் தடுத்தாலும் தனது மனமே, அதற்கு எதிராய் வாதிட் டாலும் மசியப் போவதில்லை என்ற தீர்க்கத்துடன் வீட்டை நோக்கி நடந்தாள்.
அக்கம் பக்கம் நின்று, தன்னையே அதிசயமாய் பார்த்தவர்களை, கண்டும் காணுமலும் நடந்தவள், அனிச்சையாக, வீட்டிற்குள் வந்த பிறகுதான் அது, தான் பிறந்து வளர்ந்த வீடு என்பதை உணர்ந்தாள். வீட்டின் மூன்று மூலைகளிலும், சொல்லி வைத்ததுபோல், பெற்றாேரும், அண்ணனும், தமக்குத் தாமே துணை என்பது போல் சாய்ந்திருந்தார்கள். பகவதியம்மா, வாய்க்குள் சயாடுவது தெரியாமலும், அருணுசலம் அசைவற்றும், ராஜ
துரை, அடியற்ற மரம் போலவும் சோர்ந்து கிடந்தார்கள் தமிழரசியைப் பார்த்தாலும், அவளை ஏறெடுத்தும் பார்க்க வில்லை. என்ன ஆச்சு என்று கேட்கவும் இல்லை.
தமிழரசி, உள்ளறைக்குள் போய், கொடியில் தொங்கிய புடவைகளை மடித்து, சூட்கேஸிற்குள் திணித் தாள். அப்போது, தாமோதரனும் அப்படிச் செய்தது, அவளுக்கு நினைவுக்கு வந்தது. இந்நேரம் புறப்பட்டாலும் புறப்பட்டிருப்பார்! இரண்டாக மடித்த புடவை ஒன்றை, நான்காக மடிக்காமல், விரித்த கரத்தை சுருக்காமல், பிரித்த வாயை மூடாமல், கண்களை மூடி, அவற்றை தானகப் பார்த்துக் கொண்டாள்.
மூடப்பட்ட கண்களுக்குள் காசியாபிள்ளை கிணற்று மேடும், தாமோதரன் தன் முகத்தை கரங்களில் ஏந்தியதும், கலாவதி பதனீர் கொண்டு வந்ததும் நிழல் படங்களாய் வந்தன. முதலில் கருப்புக் கருப்பாய் வந்த காட்சிகள்-அப்புறம் சிவப்புச் சிவப்பாய், நீலமாய், பச்சையாய், பவள மாய், பல்வேறு வண்ணக் கலவையாகி, மீண்டும் கருப்புக் கருப்பாய் மாறி, கண்ணிருட்டில். கரைந்தன.
தமிழரசி, கண்களைத் திறந்தாள். எல்லாமே சூன்ய: மாய், வெட்ட வெளியாய் தோன்றின. திறந்த கண்களில், தோன்றாத காட்சிகள், மூடிய கண்களில் எப்படி கலர் கலராய் வருகின்றன? இதல்ைதான் மனக்கண் புறக் கண்ணை விட மகத்தானது என்று யோகிகள் சொல் கிறார்களோ... இந்தச் சமயத்தில், இப்படிப்பட்ட ஒரு நினைப்பு வருகிறதே என்று தன்னைத்தானே எள்ளி, நகை யாடியவள்போல், வெறுமையாகச் சிரித்தாள். மீண்டும் இனந்தெரியாத சோக சுகப் போதையில் மூழ்குவதற்காக கண்களை மூடப்போனவள், அவற்றைப் பலவந்தமாகத் திறந்து வைத்துக் கொண்டாள். தன்னைத்தானே நிர்த்தர்ட்சண்யமாகக் கேட்டுக் கொண்டாள். ‘இந்த தாமோதரன், ஒரு அபலைப்பெண்ணையும், அவள் தந்தையையும், உத்தியோக பலத்தை வைத்துத் தாக்கிய மனிதர். என்னை, அவர் வீட்டார் இழிவு செய்தபோதும், ஒப்புக்குக் கூட தலையிடாத மனிதர். அப்படி இருந்தும், அவரை மறக்க முடியவில்லையே. அவர் செய்த அல்லது செய்யத் தவறிய ஒவ்வொரு காரியத்திற்கும், என் மனம் ஏன் வக்காலத்து வாங்குகிறது? இந்த நினைப்பிற்குப் பேரென்ன? ‘காதலுக்கு, கொடுக்கத்தான் தெரியும்; வாங்கத் தெரியாது’ என்று சொல்வது இதனால்தானோ...’
தமிழரசிக்கு, தான் படித்த-மாணவிகளுக்குப் பயிற்றுவித்த, ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான, மணிமேகலை நினைவுக்கு வந்தது. அந்த மாதவிக் குட்டியை, அரசகுமாரனான உதயகுமாரன், ஆணவத்தாலும், அளவற்ற காதலாலும் உவவனத்தில் கைப்பற்றப் போகிருன். அவனுக்குப் பயந்து ஒளிந்து கொண்ட மணிமேகலையோ, அவன் போனதும் புதியோண்பிள்ளை போனது என் நெஞ்சே... ஈதோ அன்றய’ என்று காதல் சிலிர்க்கப் புலம்புகிறாள்!
அந்த நிலைதான் என்றன் நிலை. இந்த மணிமேகலை, பெண்மையாலும், சக்தி வீரியத்தாலும், பாத்திரப் படைப்பாலும், கண்ணகியைவிடப் பெரிதும் வளர்ந்தவள். தமிழ் இலக்கியத்தில், பாட்டாளி வர்க்கப் படைப்பாலும், அவர்களுள் ஒருவராய் வாழ்ந்த நெறியாலும், எந்த எழுத்தாளனும் தொடாத இலக்கியச் சிகரத்தை தொட்ட வீச்சாலும், தக்காரும் மிக்காரும் இல்லாத தனிப்பொருள் படைப்பாளியான விந்தன், திறனாய்வாளர்களாலும், முட்டாள் வாசகப் பரப்பாலும், ‘அமுக்கப்பட்டதுபோல்’ இந்த மணிமேகலையையும், இலக்கியப் பேச்சாளர்கள் அமுக்கி விட்டார்கள். இவளின் பாத்திரப் படைப்பை, கண்ணகிதாசர்களுக்கு முதலில் விளக்கியாக வேண்டும்...! தமிழரசி, சிந்தனையில் இருந்து கலைந்து செயல்பட்டாள். மனதுள் இருந்த எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக எடுத்து வெளியே போடுவதுபோல், சூட்கேஸிற்குள் எல்லாத்துணிகளையும் எறிந்தாள். பின்னர் சூட்கேஸும் கையுமாக முற்றத்திற்கு வந்தாள். அப்பாவையும் அம்மாவையும், அண்ணனையும் ஒட்டு மொத்தமாகவும், தனித் தனியாகவும் பார்த்தாள். பார்த்துக் கொண்டே நின்றாள்.
இதோ இந்த இடம், அவள் தந்தையும், தாயும் கொஞ்சிக்குலாவி அவளைப் பிறப்பித்த இடம். பள்ளிக் காலத்திலேயே, தாமோதரன் நினைப்போடு வலம் வந்த பூமி. அண்ணன் ராஜதுரையுடன் ரயில் விளையாட்டும், கலாவதியுடன் கிளித்தட்டும் ஆடிய வீடு. இனிமேல், இந்த வீட்டிற்கு, என்னால் வர முடியுமோ முடியாதோ? எப்படியோ, நான் இந்த வீட்டில் இருந்து போனால்தான் ஒருவேளை ராஜதுரையோடு வாழ்க்கை நடத்த விஜயா வர முடியும்.
சூட்கேஸை கையில் தூக்கியபடி, தன்னையே தாபமாகப் பார்த்த தமிழரசியை, அவள் அம்மா பகவதியம்மா, மலங்க மலங்கப் பார்த்தாள். பிறகு கையை தரையில் ஊன்றி எழுந்திருக்கப் போனாள்.
அது முடியாமல் போகவே “போடி, போ! வெனை தீர்த்தான் பயல் வீட்டுக்கா போறே? பெத்துப் போட்டவளை விட்டுட்டு, வெத்து வேட்டுக்காரிக்கிட்டேயே போறியா? போ. என் இழவுக்காவது வந்து தலையைக் காட்டு. ஒன்னை சொல்லி குற்றமில்லடி அந்தப் பாவி முண்டை, பச்சிலை தட்டியிருக்காள். நீ எங்கே இருந்தாலும் நான்தாண்டி ஒனக்குத் தாய்! இதை எந்த பச்சிலையாலும் மாற்ற முடியாது” என்று புலம்பினாள்.
தமிழரசி ஒடிப்போய், அம்மாவின் முகத்தை நிமிர்த்தினாள். பிறகு, அவளோடு அவளாக உட்கார்ந்தபடியே அம்மாவை கட்டியணைத்துக் கூவினாள். “அப்டில்லாம் யாரையும் மனம் நோக பேசாதம்மா. நான் மெட்ராசுக்குப் போறேன். இங்கே இதுக்கு மேலயும் நான் இருந்தால், நல்லதுக்குப் பதிலாய் கெட்டதுதான் நடக்கும். அண்ணனுடைய கல்யாணம் நின்னுடப் படாதுன்னு, நான் ஒரேயடியாய் போறேம்மா. அதனால நீ பெற்ற குழந்தை ... ஒன் மடியில புரண்ட நான் போறேம்மா. கலாவதியை திட்டாதம்மா. அண்ணன் கல்யாணத்தை முடிச்சுடும்மா. அப்பாவை நல்லா பார்த்துக்கம்மா. அப்புறம்...”
தமிழரசியால் பேச்சைத் தொடர முடியவில்லை. அந்த பேச்சுத் தொடர்ச்சிக்கு விம்மல்கள், ‘கமாக்களாயின’, கேவல் ஒலிகள் ஆச்சரியக் குறிகளாயின. இறுதியில் அழுகை அதற்கு முற்றுப்புள்ளியாகியது. பேசிய வாய்க்கு அம்மாவின் தோள் அடைக்கலமாகியது.
குழந்தையாய் கேவிய மகளைக் கட்டியணைத்து, உச்சி மோர்ந்து தாய்க்காரி, சக்திக்கு மீறிய குரலில் அழுதாள். பிறகு மகளின் முகத்தை நிமிர்த்தி “நீ எதுக்கம்மா போகணும்? அண்ணனுக்கு நல்லது செய்யுறதாய் நெனைச்சு, நீ போகாண்டாம்மா. அதோ பாரு, அண்ணன் கூட அழுகிறான் பாரு” என்றாள்.
தமிழரசி அண்ணனை, ஆசை மிஞ்சப் பார்த்தபோது, அவனே “நான்... யாரும் போகப்படாதுன்னு அழல.” என்று சொல்லியபடியே அழுதான். ஒரு வேளை, தமிழரசியை, சென்னைக்குக் கொடுத்து, விஜயாவை வீட்டிற்குள் வாங்கிக் கொள்ளலாம் என்ற நினைப்போ... என்னவோ.
அப்பட்டமான சுயநலம், அண்ணனின் முகத்தில் ரேகைகளாய், சுழிப்புக்களால் தோன்றியிருப்பதைக் கண்ட தமிழரசி, அம்மாவை பலவந்தமாக உதறியபடி எழுந்தாள். கீழே கிடந்த சூட்கேஸை எடுத்துக் கொண்டு, தந்தையைப் பார்த்தாள். அவரோ, சிறிது நேரம் பேச்சற்றுப் போனார். மகளை தற்செயலாய் பார்த்த கண்களை விலக்கி, அவற்றை மனைவி மீது வீசியபடியே இவளை கண்டபடி திட்டுனாலாவது, முத்துலிங்கம் மனசு மாறுமுன்னு நினைச்சேன். அவனும் ஒரேயடியாய் குதிக்கான்” என்றார்.
தமிழரசி புரிந்து கொண்டாள். தந்தை, மறைமுகமாக தன்னிடம் வருத்தம் தெரிவிப்பதைக் கண்டு கொண்டாள். அவள் மனம், உடம்புள் அனல் காற்றை வீசியது. கல்லூரிக்கு வெளியேயும் உள்ளேயும் தன்னை தவம் செய்வது போல் காத்துக் கிடந்து பார்த்துக் களித்த தந்தையை, மனம் பொங்க, கண் பொங்கப் பார்த்தாள். பிரியப்பட்டவளைக் கூட, தன் அனுமதியுடன் கை பிடிக்க நினைத்த அண்ணனை மருவி மருவிப் பார்த்தாள்.
ஒரு வேளை, அவரோ அவனோ ‘ஏன் போறே’ என்று கேட்டிருந்தால் தமிழரசி, தோற்றிருக்கலாம். பகவதியம்மாதான், “அவளை போகாண்டாமுன்னு சொல்லுங்க... சொல்லுங்க” என்று சொன்னபடியே எழுந்தாள்.
தமிழரசி, தன்னிடம் தானே தோற்க விரும்பாதது போல், வாசலை நோக்கி நடந்தாள். அப்பா, போகாண்டாம் என்று சொல்வதற்கு முன்பே புறப்பட்டாக வேண்டும் என்று எண்ணி, வாசலுக்கு வந்தவள், அங்கிருந்தபடி, அண்ணனை ஒரு தடவையும், அப்பாவை இரு தடவையும், அம்மாவைப் பல தடவையும் பார்த்துக் கொண்டாள்.
“ஒரு தடவையாவது என் கையால சாப்பிட்டுட்டுப் போம்மா. நீ திரும்பி வரும்போது, நான் இருக்கேனே இல்லியோ” என்று அம்மா அழுதபோது தமிழரசி, வீட்டிற்கு வெளியே ஒடி வந்தாள். அம்மா, பாசக் கயிற்றால் கட்டிப் போட்டு விடுவாள் என்ற பயம். கடவுளே... கடவுளே... அம்மா சொல்வது மாதிரி, இது தான் அவளை நான் பார்க்கும் கடைசித் தடவையோ? அம்மாவுக்கு எதுவும் ஆயிடுமோ? ஆகாது. அண்ணன் இருக்கான், அப்பா இருக்கார். நான் தான் இருக்கப்படாது
தெருவில் நின்றபடி, தன் வீட்டையே வெறித்துப் பார்த்த தமிழரசி, சித்தப்பா வீட்டிற்குள் நுழைந்தாள். மாடக்கண்ணு, லத்திக் காய முத்திரைகளுடன், அசந்து தூங்கிக் கொண்டிருந்தாலும், இன்னமும் ரத்தம் உலராத அந்தக் காயங்களைக் கடித்த கொசுக்களையும், ஈக்களையும் தூங்கியபடியே கைகளால் அவ்வப்போது துரத்தினார். உடம்பை நெளித்தார்.
அதைப் பார்க்கப் பார்க்க தமிழரசிக்கு மீண்டும் ரத்தம் கொதித்தது. பெற்றோர் மீதும், தனக்கு முன்னால் பிறந்தவன் மீதும் மீண்டும் வெறுப்பேற்பட்டது. வீட்டிற்குள், மகளின் பிரிவுத்துயரைக் கண்ணீரால் கழுவிக் கரைப்பது போல் சத்தம் போட்டு அழும் அம்மா, அப்போது அவளுக்கு ஒரு பழிகாரியாகத் தோன்றினாள்.
இளமைக் காலத்தில், தன்னை ஒரு தோளிலும், கலாவதியை இன்னொரு தோளிலும் சுமந்தபடி, ராமலட்சுமணரைச் சுமந்த அனுமான் போல, தங்களை கோவில் குளங்களுக்குக் கொண்டு சென்ற அந்த ‘பைத்தியார’த் தர்மரையே பார்த்தபடி நின்றாள். பிறகு, அவர் கால் மாட்டில் பதினைந்து பத்து ரூபாய் நோட்டுக்களை வைத்து விட்டு, நிமிர்ந்தபோது, அடுப்பங்கரையில் முடங்கிக் கிடந்த கலாவதி, அவளையே பார்த்தபடி இருந்தாள். தமிழரசிக்கு, மனம் வியர்த்தது. குரல் கனத்தது. கண் பனித்தது. அவளைப் பார்க்காமல், ஆகாயத்தைக் காட்டிய கூரை மேட்டையே பார்த்தபடி பேசினாள்.
“நான் இப்பவே மெட்ராஸ் போறேன் கலா, இந்தச் சமயத்துல நான் இங்கே இருக்கது நல்லதல்ல. அப்பாவை ஜாக்கிரதையாய் பார்த்துக்கோ. எனக்கு அடிக்கடி லட்டர் போடு. வினை தீர்த்தானையும், பொன்மணியையும் தேடிப் பிடிச்சு, இங்கே அனுப்பி வைக்கேன், ரூபாய்... அதோ வச்சிருக்கேன். அப்பாவும் நீயும் டாக்டர் கிட்டே காயத்தைக் காட்டுங்க. ஒரு வேளை ஊமைக் காயம் இருக்கலாம். அது ரத்தக் காயத்தைவிட... உயிர்ல முடிக்கிற காயம்... ஏன் கலா பேச மாட்டக்கே?"
கலாவதி, கண்ணீர் விட்டாள். காயத்தை ஆற்றிவிடலாம். ஆனால் ஊர் கண் முன்னால் அடிபட்ட மானத்தை எப்படி ஆற்றுவது என்று கேட்க நினைத்தாளோ? இந்த நிலையில், எங்களை நிர்க்கதியாய் விட்டுட்டுப் போவது நியாயமான்னு சொல்ல நினைத்தாளோ? ஒரு வேளை, எதுவும் கேட்கத் தோன்றாததால் தான் கண்ணீர் சிந்துகிறாளோ?
தமிழரசி, கலாவதியை தூக்கி நிறுத்தினாள். அவள், தலையைக் கோதியபடி பரிவோடு பேசினாள்.
"ஏண்டி கலங்குறே? என் உடம்பு எங்கே இருந்தாலும், என் மனம் இந்த ஊர்ல தான் சுத்திக்கிட்டு இருக்கும். வடக்குத் தெருவுல இல்லை... அதோ அழுகிறாளே... அந்த வீட்ல இல்லே... இந்த வீட்லயே சுற்றும்... நான் இருக்கேன்... பயப்படாதே... ஏண்டி இன்னும் அழுவுறே? 'போயிட்டு வா தமிழு'ன்னு ஒரு வார்த்தை சொல்லேண்டி. ஒனக்குக் கூடவா என் மனசு புரியல?"
கலாவதி, தமிழரசியை இறுகக் கட்டினாள். உடம்பில் ஏதாவது ஒரு இடத்தில் அடிபட்டால், அடிபட்ட பகுதியில் வலியெடுக்காமல், அது வெள்ளை வெளேரென்று தோன்றி, அதில் இடியுடன் கூடிய மழைபோல், வலியுடன் கூடிய செம்மழை பீறிடுவதுபோல், முதலில் பேதலித்து நின்ற கலாவதி, தமிழரசியை அழுந்தப் பிடித்தபடி ஒரேயடியாய் அரற்றினாள்.
"எங்களைப் பிடிச்ச கெட்ட காலம், ஒன்னையும் பிடிச்சுட்டே தமிளு. நாங்க அடிபட்டதுகூட பெரிசில்ல. நீயும் ஒன் வாழ்க்கையில அடிபட்டு, ஊமைக்கரயத்துல தவிச்சதைப் பார்க்க என்னால தாங்கமுடியலியே தமிளு. இந்த ஊரு, நீ இருக்கதுக்கு தகுதியில்லாத ஊரு. போம்மா. நீ எங்கெல்லாம் போறீயோ, அங்கெல்லாம் இந்த கலாவதியோட உயிரு சுத்தும். எய்யா...எய்யா... நம்ம ராசாத்தி மெட்ராசுக்கு போறாள், எழுந்திரும்."
"அப்பாவை எழுப்பாதடி, அவரைப் பார்த்துட்டு என்னால போக முடியாது. நான் வரட்டுமா? நீ கூட வரப்படாது வழியனுப்ப. வாசலுக்குக்கூட வராண்டாம். இல்லன்னா, அதோ, அங்கே ஒப்பாரி வைக்கிற எங்கம்மா... நீதான் என்னைக் கடத்திட்டேன்னு பழி போடுவாள். வினை தீர்த்தானை தேடிப் பிடிச்சு அனுப்பி வைக்கேன்."
"அந்த நொறுங்குவான் எக்கேடாவது கெடட்டும். ஊர்ல எல்லாம் ஆடி அடங்குனதும், நீ இங்கே வந்து, ஒரு தடவையாவது மொகத்தைக் காட்டிட்டுப் போ."
தமிழரசி, கலாவதியிடம் இருந்து விடுபட்டு, சித்தப்பாவைப் பார்த்தாள்; அவர் காயங்களில் மொய்த்த ஈக்களை, தன் முந்தானையால் வீசினாள். அதைச் செய்யும்படி, கலாவதிக்கு கண்களால் ஆணையிட்டு விட்டு, ஸ்தம்பித்து நின்றாள். பிறகு, மடமடவென்று வீதிக்கு வந்து, விதி காட்டிய வழியில் நடப்பவள் போல் நடந்தாள்.
ஊர் கிணற்றில், தோண்டிப் பட்டைகளில், தண்ணீர் மொண்டு கொண்டிருந்த பெண்கள் நீரை ஊற்றாமல், தமிழரசியையே பார்த்தார்கள். ஆங்காங்கே பேசிக் கொண்டிருந்த உள்ளூர் பெரிய மனிதர்கள், அவளை ஏளனமாகப் பார்ப்பது போலிருந்தது. அவர்களைக் கடந்து, சற்று நகர்ந்தபோது "பொன்மணிய கடத்துனதே இவள் தான், இப்போ அவங்களை ஒளிச்சு வச்சுருக்கிற இடத்துக்குப் போகிறாளாக்கும்”"என்று சொல்வது காதில் விழுந்தது.
தமிழரசி, உதடுகளை வெறுமையாய் கடித்தபடி, வெறித்துப் பார்த்தபடி தன் பாட்டுக்கு நடந்து கொண்டிருந்தாள்.முன்பெல்லாம் இப்படி சென்னைக்குப் புறப்படும்போது பெற்றோர், ராஜதுரை, வினை தீர்த்தான், கலாவதி முதல் முத்து மாரிப் பாட்டிவரை ஊரில் கால்வாசிப்பேர் அவள் பின்னால் நடப்பார்கள்.
அவள், டீக்கடைப் பக்கம்' வந்தபோது "நான் சொல்றத இப்பவாவது நம்புங்கப்பா, இதெல்லாம் 'நான் அடிக்கிறது மாதிரி அடிக்கிறேன்...நீ அழுகுறது மாதிரி' என்கிற நாடகம். இல்லன்னா, இவள் ஏன் இன்ஸ்பெக்டர் வீட்டுக்குப் போகணும்? கடைசில மாட்டிக்கிட்டது அந்த அப்பாவிப் பயல் வினை தீர்த்தான் தான். ஏல மண்டையா! சொல்றது மண்டையில உறைக்குதாடா?" என்று 'கில்லாடியார்' கேட்பதும், "செறுக்கிமவனுக்கு நல்லா வேணும். என்னை எப்டில்லாம் அடிச்சான்" என்று 'மண்டையன்' சொல்வதும், அவனுக்குக் கேட்டது.
தமிழரசி, தன்னை நிமிர்த்திக் கொண்டாள். நல்லதைச் செய்து விட்டு, 'அல்லதை' வாங்கிக் கொண்ட கம்பீரத்துடன், தன்னைப் புரிந்து கொள்ளாத ஊரைத் தான் புரிந்து கொண்ட தெளிவோடு பெருமிதமாய் நடந்தாள். வாய் வம்பர்களைப் புழுவாய் நோக்கி, தன்னை புனிதம்போல் நோக்கிய ஆசாரிப் பெண்களையும், அப்பாவிக் குயவர்களையும் சோகமாய் பார்த்தபடியே, சுதேசியாய் நடந்தாள்.
ஊரைத் தாண்டி, பனந்தோப்புப் பக்கம் நடந்தபோது பழக்கப்பட்ட உருவம் ஒன்று, கையில் கற்களோடும், வாயில் சொற்களோடும், பனைமரங்களுக்குள் சுற்றிச்சுற்றி வருவதைப் பார்த்தாள்! முத்துமாரிப் பாட்டி!
தமிழரசி, பனந்தோப்பிற்குள் பாட்டியைப் பார்த்து ஓடினாள். "பாட்டி... பாட்டி" என்று பதறியபடியே ஓடி, முத்துமாரிப் பாட்டியின் கைகளைத் திருகி, கற்களைக் கீழே போட்டாள். ஆனால் தலைமுடியும், சேலையும் அலங்கோல மாய்த் தோன்ற, திரிசூலி போல் தோன்றிய முத்துமாரிப் பாட்டி, அவளை அடையாளம் கண்டு கொள்ளவில்லை.தரையில் விழுந்த கற்களைப் பொறுக்கிக் கொண்டாள்.. நாக்கை, வாய்க்கு வெளியே துருத்திக் கொண்டாள். பிறகு, அந்தக் கற்களால், ஒரு பனைமரத்தை குறிபார்த்து எறிந்தபடியே, பாட்டி புலம்பினாள். அங்குமிங்குமாகக் குதித்தாள். அப்புறம் அழுதாள். பற்களைக் கடித்தாள். வட்டவட்டமாய் ஓடிக் காட்டினாள். பிறகு சோர்ந்து! போய், புலம்பினாள்.
"ஊருக்குச் சொல்லுமாம் பல்லி .. காடிப்பானைக்குள்ளே விழுமாம் துள்ளி... அடேய் முத்துலிங்கம், வினை தீர்த்தான் பொன்மணியக் கூட்டிக்கிட்டு ஓடலடா.. பொன்மணிதான் அவனைக் கூட்டிட்டு ஓடிட்டாள்.. இவ்வளவு குதிக்கியே, நீ யாருடா? பத்து வருஷத்துக்கு. முன்னால், ஒன்னையே சதமுன்னு நம்புன 'காலனிப்" பொண்ண என்ன பாடுபடுத்துனே? கடைசில அவள் அரளி விதையில் உயிரை முடிச்சாள். சின்னஞ்சிறுசுக ஓடுனால் ஓடட்டேண்டா... ஒன் பெண்டாட்டி கூடத்தான் ஓடுனாளாம், வினை தீர்த்தானை கொல்லுவேன்னு சொல்றியே; அவனைக் கொன்னுட்டாலும், அவன் தொட்டது தொட்டது தானடா, இந்த பைத்தியாரத், தர்மர் சின்ன வயசுல, இப்படியா இருந்தான்? இந்த அருணாசலம் பண்ணின ஒரு அந்தரங்கமான துரோகம் தெரியுமா? அந்தக் கதை நாளைக்கு... இப்போ ... இது போதும்... என் தங்கம் தமிழு மட்டும் இல்லன்னா, நாங்க, போலீஸ் அனுப்புற இடத்துக்குப் போய், இந்நேரம் புல்லு முளைச்சிருக்கும். இந்த ஊரில் தமிழரசி ஒருத்திதான் சேலை கட்டலாம்..."
பைத்தியமாய் போன முத்துமாரிப் பாட்டியை, தமிழரசி, கண்குலுங்கப் பார்த்து, வாய் குலுங்கக் கேட்டாள்:
"பாட்டி! நான் தான் அந்த தமிழு! நீ சொல்ற தமிழரசி! நான்தான் பாட்டி.... என்னைப் பாரு பாட்டி.... மெட்ராஸ் போறேன் பாட்டி..."முத்துமாரிப் பாட்டி, தமிழரசியை ஏறெடுத்துப் பார்க்கவில்லை. மீண்டும் கற்களை எடுத்து, அதே பனை மரத்தில் எறிந்தாள். குறுக்கே போன தமிழரசியை கோபமாகத் தள்ளினாள்.
பாட்டியையே பார்த்துக் கொண்டு நின்ற தமிழரசியை, ரயிலின் விசில் சத்தம் ஊடுருவியது. உடனே, தனது ரயிலுக்கும் நேரமானதைப் புரிந்துக் கொண்டாள். போலீஸ் அடியாலோ அல்லது சித்தப்பாவும், கலாவதியும் அனுபவித்த கொடுமையைப் பார்த்ததாலோ, மீண்டும் பைத்தியமான முத்துமாரிப் பாட்டி முகத்தில், உலகத்துக் கொடுமைகள் அத்தனையையும் கண்டு விட்டு ஆவேசத்துள் துடித்து நின்ற தமிழரசி, பாட்டியை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு, பயணத்தைத் தொடர்ந்தாள்.
ரயில் நிலையம் வந்ததும், அவசர அவசரமாக டிக்கெட் எடுக்க, கியூவில் நின்றாள். அப்போது, ஒரு போலீஸ்காரர் அவளை அதட்டிக் கேட்டார்:
“ஒன்ன சப்-இன்ஸ்பெக்டர் கையோட ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வரச் சொன்னர். ஸ்டேஷனுக்கு நடம்மா.”