H 47 "அவருக்குச் சாதி மதம் உயர்வு தாழ்வு என்ற பேதமே இல்லையப்பா!' என்று உறுதியாகச் சொன்னுள் செல்லம்மாள். கிழவன் ஊருக்குத் திரும்பவில்லை. மகளிடமே உட்கார்ந்து விட்டான். அவனது மனத்திலே பெரும் போராட்டம் எழுந்தது. புதுமையில் பற்றிருந்தாலும், அவனது நினைவெல்லாம் தாழ்ந் திருந்தது. மேல்மாடிக்குப் போவதற்கு, ஒவ்வொரு படியாகத் தானே கடந்து செல்ல வேண்டும். இவ்வளவு காலமாக, வேறு எதைப் பற்றியும் நினைவற்றவனுக, அரும்பாடுபட்டு வளர்த்த மகள், இன்றைக்கு பெற்றவனிடமே, எவனைப் பற்றியோ சொல்லுகிருளே! கிழவனுக்கு நெஞ்சு வலித்தது. இளவயதின் வேகத்தில், ஆழம் தெரியாமல் இறங்கிவிட்டு, பின்னல் மகள் கண்கலங்கி நிற்கக்கூடாதே என்ற கவலையும் ஏற்பட்டது. அவனது குணத்தை யெல்லாம் - இந்த அறியாப் பெண் எப்படி எடை போட்டிருக்க முடியும்? இன்றைக்கு இனிக்கப் பேசுகிறவன்.--கடைசிவரை காப்பாற்றுவான் என்பது என்ன நிச்சயம் ? நீ சுடலையான் பெத்த பிள்ளைதானே என்ற சொல் இடையிலே வந்துவிட்டால், எல்லாமே சீரழிந்து போகுமே! கிழவன் தனியாகவே யோசித்துக் கொண்டேதான் இருந் தான். பிறகு மனத்தில் இருப்பதை யெல்லாம் மேரியம்மாளிடம் சொல்லவும் செய்தான். மேரியம்மாள் - காலம் மாறிக் கொண்டு வருவதைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்துவிட்டாள். இடையிலே கண்கலங்கி நிற்கும் மகள் கிழவன் தலையசைக்க வேண்டிய நிலையே ஏற்பட்டது. செல்லம்மாளின் காதலன் கிழவனே வந்து பார்த்தான். மகளுக்குப் பொருத்தமான மாப்பிள்ளைதான். ஆனல் அவன் உயர்ந்த சாதிக்காரன் என்ற திகிலும் கிழவனுக்குக் கூடவே ஏற்பட்டது. அவன் தன்னையே பார்த்துக் கொண்டான். அதன் பிறகுதான், வாழ்க்கையிலே முதன் முதலாகத் தன் உடம்பிற்கும் ஒரு சட்டை தைத்துப் போட்டுக் கொண்டான். ஒரே வாரத்திற்குள் செல்லம்மாளின் திருமணம் அங்கேயே நடந்தது.
பக்கம்:பிள்ளைக்கலி.pdf/145
Appearance