உள்ளடக்கத்துக்குச் செல்

அந்தி நிலாச் சதுரங்கம்/பொருள் பொதிந்த பொருள்

விக்கிமூலம் இலிருந்து

அந்தி நிலாச் சதுரங்கம்

1. பொருள் பொதிந்த பொருள்

!....

ரஞ்சனியைக் காணவில்லையே?...

எங்கே போய்விட்டாள்?.

இருப்புக் கொள்ளாமல் தவித்தார் ரஞ்சித். ‘சொல்லி வச்ச மாதிரி, சரியாகப் பத்து நிமிஷம் ரஞ்சனி என்னோட கண்களிலே தென்படவே இல்லே!’ நெஞ்சை என்னவோ செய்தது. தடவிக் கொடுத்தார். எதிர்ப்புறத்தில் மீண்டும் அவரது பார்வை நிலைத்தது.

கூடத்தில் பிஞ்சுக் கதிர்கள் கூடிப் பிடித்துக் கண்ணா மூச்சி ஆடிக் கொண்டிருக்கின்றன.

டெலிஃபோன் மணி நிற்கவில்லை; நிலைக்கவில்லை; இன்னமும் அடித்துக்கொண்டே யிருக்கிறது.

‘ரஞ்...!’-பாங்கருக்கு ஏனோ திகீரென்றது. சாந்தி முகூர்த்த இரவில் லயித்துச் சிலிர்த்து மெய்ம் மறந்திருந்த மனநிலையில், ஊதா டைரியின் ஏடுகளைப் புரட்டிக் குறிப்பிட்டதொரு பக்கத்தைப் பரபரப்போடு படித்துக் கொண்டிருந்தவரை, சமய சந்தர்ப்பம் புரியாமல் தொலைபேசி சோதிப்பதை அவரால் அனுமதிக்க முடியவில்.ை அந்த நாட் குறிப்பை ஊதுவத்தி மணம் தேங்கிய மேஜையின் ட்ராயரில் நிதானமாகத் திணித்து மூடிவிட்டு, பேனாவில் பொன்வண்ண மூடியைச் செருகுவதற்குள், ரஞ்சித் பதற்றம் அடைந்தார். சோதனை மிகுந்த இப்படிப்பட்ட நேரங்களிலே, அவர் ரஞ்சனியை அன்போடும் ஆவலோடும் எதிர்பார்ப்பது உண்டு. அவள் அன்புடனும் அக்கறையுடனும் உதவுவதும் உண்டுதான்!-ரஞ்சனியின் நேர்மையான சாதுர்யமும் முறையான நிதானமும் யாருக்கு வரும்?-- பெருமிதம் தாங்கவில்லை; பெருமை பிடிபடவில்லை; பெருமிதமும் பெருமையும் கலத்த புன்சிரிப்பு கண்களிலும் உதடுகளிலும் நிழலாட, அந்தரங்க அறையிலிருந்து வெளியேறி, நடைக் கூடத்தை அடைந்தார்.

கண்பொத்தி ஆட்டம் தொடர்கிறது.

தொலைபேசியின் கூப்பாடும் தொடர்கிறது.

ரஞ்சித் ரிஸீவரைக் கைப்பற்றினார;, என்னவோ ஒரு திகில்; ஏதோ ஒரு தவிப்பு; வேர்த்துக் கொட்டுகிறது. யார் அழைப்பதாம்? ஒருவேளை,. இங்கே ராமகிருஷ்ணா மிஷன் ஹாஸ்டலிலிருந்து பாபு அழைத்தாலும் அழைப்பான்! இன்றைக்கு லீவ்; ஞாயிற்றுக்கிழமை அல்லவா?

ஹபிபுல்லா சாலையிலே, நெரிசல்களும் சந்தடிகளும் வரவர அதிகமாகிவிட்டன.

ரஞ்சித் சுழல் நாற்காலியில் அமர்ந்த நேரத்தில் அவர் மனம் தெளிவாகவே இருந்தது; “ஹெல்லோ!“...“என்று குரல் கொடுத்தார். எதிர்முனையில் ஒலித்த குரல் சரிவர விளங்காததால், மீண்டும் சத்தம் போட்டு “ஹெல்லோ! என்றார். இப்பொழுது கேட்ட தொனியில் சற்றே தெளிவு இருந்தது. “எஸ்.ப்ளீஸ்...நந்தினி விலாசம் ஹியர்!”

எதிர்முனையிலிருந்து சன்னமாக இழைந்து வந்த குரலில் சுருதி கூடிற்று.

ஓ!...மகேஷ்!..

ரஞ்சித் சலனம் அடைந்தார்; மூச்சு அடைத்தது. சூறைக் காற்றில் சிக்கிக்கொண்டாரா, என்ன? வேர்வை பெருகியது; பெருக்கெடுத்தது. கண்ணாடி ஜன்னல் மூடிக்கொண்ட மாதிரி திறந்துகொள்ளவே, தென்புறக் காற்று வீசியது; நிலைமை சீரடைந்திருக்கவேண்டும். மகேஷ் கொச்சியிலிருந்து பேசுகிறாரா?-“ஆமாங்க, நல்ல சுகந்தான்! நீங்க நல்லா இருக்கீங்களா?...ம்...ம்...சந்தோஷம். ரஞ்சனிதானே?.. ஊம்; ஷி இஸ் ஆல் ரைட் நெள!--நெஞ்சு வலி இப்பவெல்லாம் வாரதில்லேங்க, நந்தினி,பாபு எல்லோருமே செளக்கியம்தான்! ஓ!--- இங்கே மெட்ராஸிலேருந்துதான் பேசறீங்களா?...ஆபீஸ் ஜோலியாக்கும்! . . சரி. . ம். . சரி! . . இப்பவே புறப்பட்டு வர்றீங்களா?--பேஷா வாங்களேன்! உங்க வீட்டுக்கு நீங்க வாரதுக்கு யாரைக் கேட்கணும்? உங்களை வரவேற்கக் காத்துக்கிட்டிருக்கோம்!. . ம். . என்ன . . ?” தொடர்ந்த பேச்சைத் தொடர வாய்ப்பு இல்லை; தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டது.

சுகமான காற்று சுகமாக வீசியது.

நெஞ்சிலே படரத் தொடங்கிய பூங்காற்று, நெஞ்சின் சுமையைக் குறைக்க முயற்சி செய்ததை உணர்ந்தபோது, ரஞ்சித் ஆறுதல் அடைந்தார்; சுயப் பிரக்கினையின் ஆதிக்கத்திற்குத் திரும்பிய அவருக்குக் கூடைநாற்காலியின் இனிய சுகம் இனிமையாகவே புரிகிறது; என்றாலும், உள்மனத்தின் அடிவாரத்திலே சலனமும் சாந்தியும் விளையாடிக்கொண்டுதான் இருக்கின்றன: “ரஞ்..மை டியர்!..”

‘ஒமேகா’ குருவி அந்தம் சேர்த்துச் சந்தமும் சேர்த்துக் கூவுகிறது: கூவிக்கொண்டிருக்கிறது.

மணி எட்டு.

ரஞ்சனி இப்படியும் இருப்பாளா, என்ன?

தலையை நிமிர்த்தினார் ரஞ்சித்; நிமிர்ந்து நின்ற நிலைக் கண்ணாடியில் பளிச்சிட்ட கண்ணீரைத் தரிசித்ததும், ஓர் அரைக்கணம் தியான நிலையில் கண்களை மூடிக்கொண்டார். அரைக்கணம் கழித்து, கண்களைத் திறந்தபொழுது, மனச்சலனம் கட்டுப்பட்டதை, கட்டுப்படுத்தப்பட்டதை அவரால் உணர முடிந்தது; அவசரம் அவசரமாகக் கண்ணீரை வழித்துவிட்டார்!- ரஞ்சனி பார்த்துவிடப் போகிறாள்! அவள் வருவதும் போவதும் தெரியாது!

இரண்டாங் கட்டில் காலடி ஓசை கேட்கிறது.

நிலைக்கண்ணாடி புன்னகை செய்தது.

ஆர்வத் துடிப்புடன், “ரஞ்..” என்று விளித்தார் பாங்கர்,.

ஆனால்---

வந்தவளோ நத்தினி. “டாடி...” என்று குழைந்தாள்: மாக்ஸியில் எடுப்பாகவே தோன்றினாள்; தூக்கத்தின் கலக்கத்தை மூடி மறைத்திட, ‘இமாமி’ பவுடரைக் கொஞ்சம் கூடுதலாகவே அள்ளித் தெளித்துக்கொண்டு வந்திருக்க வேண்டும். “என்னங்க, அப்பா?” என்றாள்.

"அம்மா எங்கே?" ஆர்வமும் துடிப்பும் பொங்க, பாசமும் நேசமும் பொங்கி வழியக் கேட்டார் ரஞ்சித்.

"அம்மா பூஜைக்கு ரெடி பண்றாங்க, உங்க கையிலே சொல்லலீங்களா, அப்பா?”

அப்போதுதான் பனி முத்தம் கலைந்து மலர்ந்த புத்தம் புதிதான ரோஜாப்பூவாகப் புன்னகை செய்கிறாள் நந்தினி; குறும்புத்தனம் அழகான இதழ்களில் மாத்திரமல்ல, அழகான விழிகளிலும் விளையாடுகிறது; விளையாட்டுக் காட்டுகிறது.

பூஜை அறையில் பாத்திரம் பண்டங்கள் புழங்கப்படும் சத்தத்தை இப்போது அவரால் துல்லிதமாக உணர முடிந்தது. மகளை அன்போடும் பாசத்தோடும் ஏறிட்டுப் பார்த்தார். “அம்மா பூஜைக்கு ரெடி பண்ருங்க; உங்க கையிலே சொல்லவீங்களா, அப்பா? நந்தினியின் கேள்வியிலே குரல் கொடுத்த நமட்டுச் சிரிப்பு அவரைச் சிரிக்க வைத் திருக்கலாம். எவ்வளவு நுட்பமாகக் கேட்டுவிட்டாள்!-- சுட்டிப் பெண் 1- என்கிட்.ே சொல்லாமலும் உன் அம்மா காரியங்கள் செய்வது இல்லையா என்ன?” இருதயத்திலே எங்கேயோ ஒர் இடத்தில் வலிக்கத் தொடங்கியிருந்தது. பெருந்தன்மையோடு பொறுத்துக் கொண்டார்; சகித்துக்கொண்டார். “ஊம், பதில் சொல்லேன், நந்தினி. என்று துண்டுதல் செய்தார்; மனிதர் மகா கெட்டிக்காரர்!.

“ஊஹூம்" என்று பதில் சொன்னுள்நந்திணிப்பெண்.

‘இஸ் இட்...?’ என்று கேட்டார் அப்பா. வியப்பில் விழிகள் கீறல் பட்ட மாதிரி விரிந்தன. நெகிழ்ச்சியுடன் விரிந்தன. புத ல் வி யி ன் பேச்சில் தா னி த் த அழுத்தமும் இறுக்கமும் மென்மையான அவரது மன உணர்வுகளைச் சுண்டி விட்டிருக்கக்கூடும். இதயம் கசிந்தது; கண்களும் கசிந்தன. "ரஞ்...!” என்று அன்பைக் கட்டுப்படுத்திக் கொள்ளமுடியாத அ வ ச ர த் து ட ன் கூப்பிட்டார் ரஞ்சித், அன்புச் சுமையால் அவருடைய உள்ளம் கனத்துக் கிடந்தது போலும்! சுமையை இறக்கி வைக்கவோ என்னவோ, மீண்டும் அழைப்புக் கொடுத்தார்.

அன்பின் மகிமையை அன்புதான் உணர முடியும்: அடுத்த இரண்டாவது நிமிஷத்திலே, ஜாதிமல்லிப்பூ மணக்கத் தொடங்கிவிட்டது.

இளங்காலைப் பொழுதின் இனிமையான புனிதத்துக்கு மத்தியில், பரிசுத்தம் நிரம்பின சுகமான பொலிவோடு வந்து தின்றாள் ரஞ்சனி’ "அத்தான்!” என்றாள்; பாசமும் தேசமும் பொங்கின; வழிந்தன; ‘’ வாங்க அத்தான் , சீக்கிரம்...மணியடிக்கப் போறேன்!” என்று அன்பின் மகிமையை உணர்ந்த நெகிழ்வுடன் தொடர்ந்தாள்.

"மணியடிக்கப் போறது சாப்பாட்டுக்குத்தானே?”

"ஊகூம், இல்லேங்க: பூஜைக்கு!’

“ஓஹோ, அப்படியா?”

“ஆமாம்; அப்படியேதான்!”

பூஞ்சிரிப்பும் புன்சிரிப்பும் சந்தித்துக் கொண்டன.

கண்சிமிட்டலும் கண்ணடித்தலும் கண்பொத்தி விளையாடின.

பெருமூச்செறிந்த மயில் டாலரை மோதிர விரலால் நெருடிக்கொண்டிருக்கிருள் குமாரி நந்தினி, அவள் செய்கை சிந்தனை வசப்பட்டிருந்தது: அ ப் பா வு ம் அம்மாவும் பரிவர்த்தனே செய்துகொண்ட கேள்வி-பதிலைக் கேட்டது தான் தாமதம் உடனடியாக ரசிக்கவே செய்தாள்: அந்த ரசிப்புத்தன்மையை வெளிப்படுத்த எண்ணிச் சிரிப்பை, உதிர்க்கவும் நினைத்திருந்தாள்.

ஆனால்---

அதற்குள், தந்தையும் தாயும் முந்திக்கொண்டு விட்டார்களே?-அவர்களின் ஜோடிச் சிரிப்பு ஜோடியாக வெடித்து, ஜோடியாகவே சிதறியது.

அவ்வளவுதான்.

நந்தினியின் முகம் தொடாமலே சுருங்கிவிட்டது. காரணம் இல்லாமலா? அப்பா-அம்மாவின் பேச்சில் இழைந்திருந்த அந்நியோன்யத்தை உணர்ந்தறித்து, நான் ரசித்துச் சிரிப்பதற்குள்ளாக, அவர்கள் ஏன் முந்திக் கொண்டார்களாம்?-நல்ல கேள்விதான்!

ரஞ்சித்-ரஞ்சனி தம்பதிக்கு நந்தினியைப் பற்றித் துல்லியமாகத் தெரியும். இருவரும் அர்த்தச் செறிவோடு பார்த்துக்கொண்டனர்; பிறகு, அருமைத் திருமகளைப் பார்த்தனர்; “புறப்படம்மா, நந்தினி, பூஜைக்கு டைம் ஆச்சு.” என்று இருவரும் ஒரே குரலில் பாசத்தோடும் பரிவோடும் சொன்னார்கள்,

போதாதா?

நந்தினிக்குப் பெருமை வந்துவிட்டது, பெருமை! ஐம்பொன் விக்கிரகம், உயிர் பெற்ற மாதிரி நடை பயின்றாள்; மலர்ந்த சிரிப்பு: மலராத குறும்பு; அம்மாவின் இஷ்டப்படி பூஜையில் கலந்து கொள்ளவேண்டும். இம்மாதிரியான சம்பிரதாயங்களில் அம்மாவுக்குக் கண்டிப்பு அதிகம்: ஈடுபாடும் கூடுதல். ஆர்வத் தூண்டுதலுடன் கால்களை எட்டிப்போட்டாள் நந்தினி.

அலைகள் இல்லாமல், கடல் இல்லை.

மனமும் அப்படித்தான்.

சிந்தனையின் வசப்பட்டு நின்றார் ரஞ்சித்.

ரஞ்சனியின் மனத்தில் ஏனோ சலனம் கண்டது. சதா சர்வகாலமும் அத்தானுக்கு என்னதான் மாளாத சிந்தனையோ? பெருமூச்சு கூனிக்குறுகிப் பூநாகமென நெளிந்தது. கைத்தலம் பற்றியவரின் கைகளைப் பற்றுதலோடு தொட்டாள். அவளுக்கும் சிலிரித்தது. “அத்தான், கிளம்புங்க; பூஜைக்குத் தாமதமானால், அம்மன் கோபிச்சுக்கிட மாட்டா: ஆனா, நம்ப பொண்ணு கோவிச்சுக்கும்,” என்று சொன்னதும் சொல்லாததுமாக, நடையைத் தாண்டி, நடை தொடர்ந்து உள் பக்கம் சென்றாள்.

மகேஷ் பேசியதை ஆருயிர் ரஞ்சனியிடம் சொல்லிவிட வேண்டுமென்றுதான் துடித்துக்கொண்டிருந்தார் ரஞ்சித்; முடியாமல் போய்விட்டது: ஒரிடத்திலே, ஒரு நிமிஷம், இரண்டு நிமிஷமென்று நின்றால்தானே? அவளுக்கு அம்மன் கவலை. ஆகவே, உடனடியாகப் பூஜைக்கு ஆஜராகிவிட வேண்டும். ‘ரஞ்சனியும்கூட தொட்டால் கருங்கிதான்!’ பரபரப்படைந்தார் பாங்கர்.

பூஜை மணி முழங்குகிறது.

ஸ்ரீ மாங்காட்டுக் காமாட்சிக்குக் கற்பூர ஆராதனை என்றால், ரொம்பவும் பிடிக்கும் அல்லவா? கொழுந்து விட்டெரிந்த கற்பூரத்தின் ஒளியில் அம்மனின் அருட்பெருஞ் சிரிப்பு ஜோதிமயமாகப் பளிச்சிட்டது.

ரஞ்சனி மெய்ம்மறத்தாள்.

மூடியிருந்த ரஞ்சித்தின் கண்கள் இன்னமும் திறக்கவில்லை; திறந்திருந்த இதயத்தை இன்னமும் அவர் மூடவில்லை. பக்தியின் பரவசத்தில், முத்துக்கள் தோன்றின; உதிர்ந்தன; அன்பின் நெகிழ்ச்சியில் நெஞ்சம் உருகியது: கரைந்தது. கைகளின் அஞ்சலி முத்திரை தொடர்ந்தது: தொடர் சேர்த்தது.

வேடிக்கையாகப் பார்த்துக்கொண்டிருக்கிறாள் நந்தினிப் பெண்,

“அ..த்..தான்!...”

மேனியின் சிலிர்ப்பை உணர்ந்தவராக, மெள்ள மெள்ளக் கண்களைத் திறக்கின்றார் ரஞ்சித்.

அம்பிகையான மஹாலக்ஷமி திரு அவதாரம் எடுத்த பாவனையில், கற்பூரத் தட்டும் கையுமாக வந்து நின்றாள் ரஞ்சனி. அவளுடைய கவர்ச்சி கனிந்து விழிகளும், உணர்ச்சி நிரம்பின உதடுகளும் சுடரொளியில் ஏற்றம் கூடின; ஏற்றத்தைக் கூட்டின.

ரஞ்சித் பார்த்த அந்தப் பார்வையில் இப்பொழுது ரஞ்சனியா தரிசனம் தந்தாள்?-ஊகூம்!-மஹாலக்ஷமி!... இரண்டு கைகளாலும் நிவேதனத் தீபத்தைப் பக்திப் பரவசத்துடன் ஒற்றிக் கண்களிலே ஒற்றிக்கொண்டார் அவர். பிறகு, தாம்பாளத்தில் இருந்த குங்குமத்தில் துளி எடுத்து நெற்றியில் இட்டுக்கொண்டு நிமிர்ந்தபோது, தம்முன்னே உணர்ச்சிகள் சுழித்திட்ட நிலையிலே ரஞ்சனி---ஆருயிர் ரஞ்சனி தலையை நீட்டிக்கொண்டிருந்ததைக் கண்டார். உடல் புல்லரித்தது; உள்ளம் சிலிர்த்தது. ரஞ்சனியை அவருக்குப் புரியாதா, என்ன? நெஞ்சு நுங்கும் நுரையுமாகப் பொங்கிப் புரள, அவளை ஏற இறங்கப் பார்த்தார். கண் மூடிக் கண் திறக்கும் நேரத்திற்குள், அவர் நிதானம் அடைந்தார். பான்மையோடு புன்னகை செய்தவராக, தமது நுனி விரலால் மிளகுஅளவுக்குக் குங்குமத்தை எடுத்து, அவளுடைய செக்கக் சிவந்த நெற்றியில் இட்டார் ரஞ்சித். கைவிரல்கள் இப்பொழுது கொஞ்சங்கூட நடுங்கவில்லை!-எத்தனையோ நாட்களுக்கு முந்திய அந்த ஒரு மாலைப்பொழுதிலே, மிஸ்டர் மகேஷ் முன்னிலையிலே, அவர் தம்முடைய இன்னுயிர்த் துணையான ரஞ்சனியின் அழகான நெற்றியில் இதுபோலவே அம்மன் குங்குமத்தை இட்டபோது, அவரது கைவிரல்கள் என்னமாய் நடுங்கின!-அன்றும் சரி, இன்றும் சரி, ரஞ்சனி மனம் திறந்து கேட்ட எதைத்தான் ரஞ்சித் மறுத்திருக்கின்றார்? நெடுமூச்சு சூறைக்காற்றாக மோதி நெளிந்து வெளியேறிக் கொண்டிருக்கிறது; இனம் பிரித்துக் காண்பித்த வெண்ணிற முடிகள், இனம் பிரிந்துவிடாமல் பளபளக்கின்றன. நெஞ்சக் கடலில் நினைவலைகளின் ஆரவாரமே தெரியவில்லை!

குனிந்திருந்த தலையை உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டவளாக நிமிர்த்தினாள் ரஞ்சனி, உயிரில் நிறைந்தவரை உயிரால் நிறைத்துக் கொள்பவளாகப் பார்த்தாள். தயவுடன் தாயைப் பார்க்கும் சிறுமியின் பார்வையாக அது அமைந்திருந்தது.

பேசும் கண்களைப் பேசாமல் துடைத்து விட்டார், ரஞ்சனிக்கு உடையவர்.

பூங்காற்றுக்கு இடம், பொருள், ஏவல் என்கிற மந்திர தந்திரமெல்லாம் அத்துபடி..

வேடிக்கை பார்க்க அப்பாவும் அம்மாவும் மீண்டும் ஜோடியாகக் கிடைத்ததில், நந்தினிக் குட்டிக்குப் பரம திருப்தி!---எப்போதாகிலும் அபூர்வமாக இங்கே நந்தினி விலாசம் பங்களாவிற்கு வருகை தருகின்ற போதெல்லாம், “நந்தினிக் குட்டி!...நந்தினிக் குட்டி!” என்றேதான் வாய் கொள்ளாமலும், வாய் ஓயாமலும் அழைப்பார் மகேஷ்! இவ்வாறு அழைக்கப்படும் போதெல்லாம், நந்தினியின் மனத்திலே இனம் விளங்காத மகிழ்ச்சிப் பாசம் பனித் தூறலாகப் பட்டுத் தெறிப்பதும் சகஜம். அது ஒரு காலம்! ஆனால், ஒரு சிதம்பர ரகசியம்!-பாபுப் பயல் சுட்டித்தனமான பாசத்தோடு, “ஏ, நத்தினிக் குட்டியே!” என்று மகேஷை நினைவு படுத்துகிற மாதிரி, ஒரு தடவை, ஒரேயொரு தடவை கூப்பிட்டுவிட்டால் போதும்; அக்காளுக்குக் கோபமான கோபம் ‘ஜெட்’ பாய்ச்சலில் வந்து தொலைத்து விடும். அதுவும் ஒரு காலம்தானோ?

“அத்தான்,” என்றாள் ரஞ்சனி.

“என்ன, ரஞ்...?” என்றார் ரஞ்சித். அவர் தமது வாழ்வின் ஜீவனை ‘ரஞ்’ என்றே செல்லமாகக் கூப்பிடுவார். ‘ரஞ்’ என்றால், ரஞ்சனி என்பதாக அவர் அகராதியில் பொருள்; பொருள் பொதிந்த பொருள் அல்லவா அவள்!

அவள் என்னவோ சொல்ல, அல்லது, என்னவோ பேச நினைத்திருக்க வேண்டும்.

அவர், அதற்காகவே காத்திருந்தார். மரத்துப் போயிருந்த பாதங்களைச் சற்றே அவசரமாக நகர்த்த எத்தனம் செய்த நேரத்தில், மயில்கண் ஜரிகை வேட்டியின் கரை இழைகளில் வலது கால் பெருவிரல் சிக்கிக் கொண்டது; தட்டித் தடுமாறினார் சமாளித்துக் கொண்டு வேட்டியைச் சீராக்கிக் கொண்ட வேளையில்தான், தொலைபேசிக் கருவி அவர் பார்வையில் சுழன்றது; அவரும் சுழன்றார். நினைவுகள் தோல் உரித்துக் கொண்டன: இதயத்தின் இதயத்தில் மெளனமானதொரு சோகம் உள் வட்டமாகத் திமிறிக்கொண்டே யிருக்கிறதே?---பாவம்! ... எதை நினைப்பார்? எதை மறப்பார்? நினைவும் மறதியும்தான் வாழ்க்கையா?--சரி, சரி!-- மிஸ்டர் மகேஷ் கொச்சியிலிருந்து இங்கே பட்டணத்துக்கு வந்ததும் வராததுமாக, அன்போடும் ஆசையோடும் விசாரணை செய்ததை இப்போதாவது ரஞ்சனியிடம் ஞாபகமாகத் தெரிவித்துவிட வேண்டும்!-ரஞ்சனி மிரண்டால், காடு கொள்ளும்; ஆனால், இந்த வீடு கொள்ளாது: கொள்ளவே கொள்ளாது! ஊமைத்தனமான புன்னகையில், சோகத்தின் கனம் கரைந்து கொண்டிருக்கலாம்.

எதிர்ப் புறத்துப் பூந்தோட்ட வெளியில் மொய்த்திருந்த கண் விரிப்பை இழுத்துப் பக்கவாட்டில் திருப்பினரி பாங்கர் ரஞ்சித்.

நல்ல காலம். ‘மாக்ஸி’ தளதளக்க, மாடிக்கு ஓடிக் கொண்டிருந்தாள் நந்தினி. பாதித் தூக்கத்தில் வந்தவள் ஆயிற்றே இனிமேல், காலைச் சிற்றுண்டிக்கும், பிறகு, டி.வி. பார்க்கவும்தான் கீழே வருவாள்!

ரஞ்சித்துக்கு நல்ல மூச்சு வந்தது: “ரஞ்...” என்று விளித்தார்; பாசம் துடிக்க, நேசம் துள்ள விளித்தார்.

அப்பொழுதுதான் ‘மைனர்’ நீங்கிய பிள்ளையாண்டான் மாதிரி, தன் மார்பிலே உரசிக் கொண்டு வந்து நின்ற அத்தானை நாணம் விழி பிதுங்க ஏறிட்டு நோக்கினாள் ரஞ்சனி. பேசும் அந்தக் கண்கள், தனக்குத் திருப்பூட்டின. இந்தப் புண்ணியவானின் ‘ராசலீலை’க் காட்சிகளைப் பேசினபோலும்!-நாணிக் கண் புதைக்கிறாள்.

ரஞ்சித் மகா ரசிகர். ஆசையான மனைவியின் கண்கள் ஆசையாகச் சொன்ன அந்தக் கதைகளில் அவரும்தான் மயங்கி விட்டிருக்க வேண்டும். சுயப் பிரக்ஞை உறைத்தது. பொட்டிட்டு அழகு பார்த்த பொன் முகத்தைப் பூ விரல் நீக்கி, ஒரு பொன் சிரிப்புடன் அவர் நிமிர்த்திவிட்ட கோணமும் பாவனையும் நுட்பமான கலைச் செறிவோடு அமைந்திட, அருமையான ரஞ்சனியைப் பெருமையாக ஊடுருருவினார்.

அப்போது:

நாணம் மேலிட்ட முதலிரவுப் பதுமையெனவே இன்னமும் நின்று கொண்டிருந்தாள் ரஞ்சனி. நிமிர்ந்திருந்த முகத்தில், நெற்றித் திலகம் கம்பீரமாக உயர்ந்திருக்க, கண்கள் மட்டிலும் கலக்கம் அடைந்து, ஏன் அப்படித் தாழ்ந்திருக்கின்றன?

ரஞ்சித் மீண்டும் சலனம் அடைய நேரிட்டது. கண்ணீர்த் துளிகள் அவரைக் காட்டிக் கொடுத்து விடுவதாகப் பயங்காட்டின. சுதாரித்துக் கொண்டார்; அவருடைய நயமான சமர்த்து யாருக்கு வரும்? கண்ணீரை நாகரிகமாகக் கட்டுப் படுத்திக் கொள்ளவும் செய்தார். பேஷ்! ரஞ்சனி கவனித்திருக்க மாட்டாள்!- “ரஞ்!”

ரஞ்சனியின் விழிகள் சலனத்தைக் கடந்து இப்பொழுது கம்பீரமாகவே உயர்ந்தன.

ரஞ்சனியின் ரஞ்சித்துக்கு இப்போது தான் நல்ல மூச்சுத் திரும்பியிருக்க வேண்டும்.

“கூப்பிட்டீங்களே?”

“ஆமாம்.”

“சொல்லுங்களேன்.”

“ஊம்!”

“புதுசாஏதாச்சும் சொல்லப்போறீங்களா, அத்தான்?”

கண்களை உயர்த்தியபடி, “ஆமாம்” என்றார் ரஞ்சித் , “ரஞ்சனி, கொஞ்சம் முந்தி, மிஸ்டர் மகேஷ் டெலிஃபோன்லே உன்னை ரொம்பவும் விசாரிச்சாராக்கும்!” என்று தொடர்ந்த அன்புடன் தொடர்ந்தார். அமைதி கனிந்த மனேவியின் அழகான கண்கள் அவளையும் அறியாமலோ, அல்லது, அவளையும் மீறிய விதத்திலோ, மின் அதிர்ச்சி அடைந்து, சலனமும் அடைந்து, மீண்டும் தாழ்ந்து விட்ட துர்ப்பாக்கியத்தை அவர் நுட்பமாகவும் கவனமாகவும் கண்டு உணர்ந்த மாத்திரத்தில், அவரது மனிதாபிமான உணர்ச்சிகளிலே ரத்தம் கசியத் தொடங்கியது. நெஞ்சு வலிக்கு நேரம், காலம் தெரியும். வலிக்கட்டுமே?---‘டொலாஜின்’ மாத்திரை இருக்கவே இருக்கிறது, “ரஞ்!...” ஒரு சுண்டு சுண்டி விட்டுப் பேசலானார்: “நம்ம மகேஷ் காலம்பறத்தான் இங்கே வந்து சேர்ந்திருக்கணும்னு தோணுது: நம்ப எல்லாருடைய க்ஷேமலாபத்தையும் வழக்கமான பாசத்தோடவும் அன்போடவும் விசாரிச்சார்; உன்னோட நெஞ்சுவலி இப்போ தேவலாம்ன்னு சொன்னடியும், சந்தோஷப்பட்டார்; பாபுவைப் பற்றியும் அக்கறையோடு கேட்டார். ஆனால், பேச்சு நட்டநடுவிலே ‘கட்’ ஆகிப் போச்சு மறுபடி பேசுவார்னு நம்பிக்கையோட எதிர்ப்பார்த்தேன்; மகேஷ் இதுவரையிலும் பேசவே இல்லனி!...”

ரஞ்சனி சிலையாகவே ஆகிவிட மாட்டாள்!

உண்மைதான்.

“ரஞ்...”

“....”

ரஞ்சித் தண்ணீராய் உருகினார்!-மெளனத்துக்குப் பாஷை ஒரு கேடா, என்ன?-அப்படி நினைத்துத்தான் ரஞ்சனி இப்படிப் பேசாமல் இருக்கிறாளா?-இருப்புக் கொள்ளவில்லை; ஏக்கத்தின் இருப்பும் கொள்ளவில்லை. சோதித்த மெளனத்தைச் சோதிக்க அவருக்குத் தெரியும், கருணையும் அன்பும், பாசமும் நேசமும் புன்னகையின் அவதாரம் எடுத்தன: “ரஞ்சனி!” மெளனத்தைத் தூள் பரப்பிக் கூப்பிடலானார் அவர்.

ரஞ்சனி சில்லிட்டுப் போயிருப்பாளோ? சிலிர்த்தெழுந்தவள் புதிய கம்பீரத்துடன் விழிகளை உயர்த்தினாள். அள்ள அள்ளக் குறைந்திடாத பாசத்தோடு, “அத்தான்!” என்றாள். இதழ்கள் பிறந்த மேனியாகப் புன்னகை கூட்டின. சலனத்தின் சுவடே தெரியவில்லையே?

பாங்கருக்குக் கொள்ளை கொண்ட குதூகலம் கொள்ளை கொள்ளையாக வரவு ஆயிற்று.

முற்றத்தில் வெயில் கண் சிமிட்டுகிறது

“ரஞ், எங்கே இருக்கிறாய்?”

“உங்க பக்கத்திலே!”

“எங்கே இருந்தாய், ரஞ்?”

“உங்க பக்கத்திலேயேதான்!”

“வெளி குட், மை டியர்!”

“தாங்க் யூ, அத்தான்!”

“உன்கிட்டே மிஸ்டர் மகேஷைப் பற்றிச் சொல்லிக்கிட்டிருத்தேன்.”

“ஓ! புரிஞ்சுதுங்களே!”

“பேஷ்!” என்று புன்னகையை மாற்றாமல் சொன்னார், ரஞ்சித்.

காலைச் செய்திப் பத்திரிகை சூடான காற்றில் சூடு பறக்கப் படபடத்துக் கொண்டிருக்கிறது!---பாரதத்தின் புதிய பிரதமமந்திரியாகப் பதவியேற்றிருந்த இந்திராகாந்தி தலைநகரிலே ஜனதா ஆட்சியின் அவலங்களைச் சாடியிருந்தார்!

தோட்டக்காரக் கிழவர் சோமையா எடுத்து வந்து போடும் பத்திரிகையைப் புத்தம் புதிதான ஆர்வத்துடிப்புடன் கூந்தல் நீர் சொட்டச் சொட்ட மேலோட்டமாகப் பார்த்தால்தான் ரஞ்சனிக்கு நிம்மதியாக இருக்கும்; காப்பியும் கையுமாக விரைந்து மாடிக்குச் சென்று, கணவரை எழுப்பி, வாய் கொப்புளிக்கச் செய்து, காப்பியை ஆற்றிக் கொடுத்துக் கொண்டே அன்றைய முக்கியச் சேதிகளை அவள் வாயாலேயே ஒரு தனி லாகவத்துடன் தெரியப்படுத்துவதில் அவளுக்கு என்றுமே ஓர் ஈடுபாடு உண்டு. அப்புறம் தான், மற்றக் காரியங்களில் மனம் செலுத்த அவளுக்கு மனம் வரும்.

செய்திகள் காற்றில் பறக்கலாம்; செய்தித்தாள் காற்றில் பறக்கலாமா?

கிடைத்ததை எடுத்துப் பத்திரிகையின் தலையிலே போட்டார் ரஞ்சித்; போட்டது, ரஞ்சனிக்குச் சொந்தமான சிகப்புடைரி என்ற துப்பு அப்புறம்தான் அவருக்குத் தெரிந்தது. ‘நெற்றிக் கண்ணைத் திறந்து விடாதே, தாயே!’ என்று பச்சைப் பிள்ளை மாதிரி கண்களால் கெஞ்சினார்.

‘ஓ.கே!’ கிடைத்தது.

“ரஞ், நம்ப மகேஷ் போன தடவை. இங்கே எப்போது வந்தார்னு நினைப்பு இருக்குதா?”

“ஏன், உங்களுக்கு நினைப்பு இல்லையா, என்ன?”

“எனக்கு இருக்கு!”

“என்ன இருக்கு உங்களுக்கு?”

“நினைப்பு.”

“பின்னே, என்னவாம்?”

“பின்னே, ஒண்ணுமில்லே; சும்மா ஒரு பேச்சுக்குக் கேட்டேன்; ப்ளீஸ்...சொல்லேன், ரஞ்!”

“ஒஹோ!...” என்று அழகு காட்டினாள்; அழகு கூட்டினுள் ரஞ்சனி. காற்றில் தவழ்ந்து வந்த பவளமல்லிப் பூக்களின் சுகந்தத்தை அவளும் அனுபவிக்கத் தப்பவில்லை. இந்தப் பொங்கலுக்குத்தான் வந்து சேர்த்தது. ரூபியா வாய்ல்! அதற்குள் குறும்பு வந்துவிட்டது: சரிந்து நழுவத் துடித்தது. ரஞ்சனியிடமா ஜம்பம் சாயும்?-இப்போது: “கப்சிப்!”-“அத்தான்” என்று நினைவுக் குரல் கொடுத்தாள். பிறகு, “நீங்க அநேகமா இங்கே மெட்ராஸிலேயேதான் இருந்துகிட்டு இருப்பீங்கண்ணு நம்புகிறேன்”, என்று ‘டக்’கென்று சொல்லி, ‘டக்’கென்று நிறுத்திவிட்டு, மறுபடி தொடரலானாள்; “மிஸ்டர் மகேஷ் முந்தின தடவை இதே ஜனவரியிலே கொஞ்சம் முன்னதாக, அதாவது, தைப் பொங்கல் போகிப் பண்டிகைச் சமயத்திலே இங்கே வந்திருந்தார். சரிதானே, அத்தான்?” என்று கேட்டாள்.

“ரஞ், நீ சொல்வது சரியில்லாமல் இருக்குமா?”

“அத்தான், உங்களை எனக்குத் தெரியாதாக்கும்!”

“ரஞ்...!”

“....”

மெளனத்தில் மெளனம் சிரிக்கிறது.

“சாதாரணமாகத்தான் சொன்னேனுங்க, அத்தான். அப்புறம், என்னாங்க விசேஷம், அத்தான்?” என்று புதிய பேச்சுக்கு அவரைத் துாண்டினாள் தலைவி.

“ஓ!-என்னை உனக்குத் தெரியாதா, என்ன? பேஷாகத் தெரியும்!-அது போகட்டும். ரொம்ப நாளைக்கு ரொம்ப நாளாய், அத்தி பூத்த மாதிரி, இங்கே, பட்டணத்துக்கு வந்திருக்கிற நம்ப குடும்ப நண்பர் மகேஷ் இந்தத் தடவையும் நம்ம பங்களாவிலே ஒரு ராத்திரியாகிலும் டின்னர் சாப்பிடாமல் திரும்பமாட்டார்னு நான் நினைக்கிறேன்; நீ என்ன நினைக்கிறாய்?” என்று வினவினார், ரஞ்சனிக்கு உடையவர்.

மனத்தின் உள் வட்டத்தில் சுழித்த அதிர்ச்சி, முகத்தின் வெளிவட்டத்திலும் சுழிக்க, கன்னங்களிலும் தாழ்வாயிலுமாக வேர்வை தெறித்தது. இமைகளின் விளிம்புகளை மோதிர விரல் நீவி விட்டது. என்னவெல்லாமோ கேள்வி கேட்கிறாரே அத்தான்காரர்?-“நீங்க என்ன நினைப்பீங்களோ, அதையேதானே நானும் நினைப்பேன்? உங்களுக்குத் தெரியாதுங்களா, அத்...அத்தான்?” என்றாள் ரஞ்சனி. இப்பொழுதுதான் புன்னகை பிறக்கிறது: மணக்கிறது.

“சபாஷ்!” என்று வெகு அட்டகாசமாகச் சிரித்தார் ரஞ்சித். “அப்படிச் சொல்லடி, ரஞ்சனிக் குட்டி!”

ரஞ்சனி வலது கன்னத்தைத் தடவி விட்டுக் கொள்ள நேர்ந்தது.

பயம் ஒன்றும் இல்லை.

கிள்ளி விட்டார்.

செல்லக் கிள்ளல்.

அவ்வளவுதான்!

“கோபமா?”

“இல்லே, சந்தோஷம்!”

அவளுடைய மனப்பூர்வமான சிரிப்பை இப்போதும் அவர் மனப்பூர்வமாக நம்பினார்!...