அந்தி நிலாச் சதுரங்கம்/தெய்வமாம் தெய்வம்

விக்கிமூலம் இலிருந்து

 
அந்தி நிலாச் சதுரங்கம்

8: தெய்வமாம் தெய்வம்!

தெய்வமாம், தெய்வம்...!

நல்ல வேடிக்கைதான்!

நல்ல விளையாட்டுத்தான்!

பாபுவுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது; அத்திரம் ஆத்திரமாக வந்தது: கோபம் கோபமாக வந்தது! "அம்மா சுத்த மோசம்!- சிருஷ்டியின் ரகசியத்தைத் துப்புக் கண்டுப்பிடிப்பதற்கு லாயக்கு இல்லாத ஒரு வாண்டுப் பயலைத் தெய்வமாக ஆகச் சொல்லுறாங்களே!-சே, தலைவலியாய்ப் போச்சுதே?- இந்த மகேஷ் எப்பத் தான் அவரோட நாட்டுக்குப் போய்த் தொலைவாரோ, தான் ஹாயாக இந்த நந்தினி விலாசத்திலே முன்னேமாதிரி நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் ஆடிப்பாடி விளையாடுவேனோ?’ பாறாங்கல்லைக் கட்டி விட்டமாதிரி, கனத்தது: தெஞ்சு கணக்கும்போது, கண்களும் கணக்கவே செய்யும்: சுடுநீரின் முத்தங்கள் அவனுடைய கதுப்புக் கன்னங்களில் முத்தமிட்டன; ஒரு சொட்டுக் கண்ணீர், அவனது இடது கன்னத்துக்கு அவமானம் கற்பித்துக்கொண்டிருந்த அசிங்கமான கறுப்பு மருவில்-வடுவில்-மச்சத் தழும்பில் தவழவே அவன் நெருப்புச் சுட்டு விட்டமாதிரி பதறினான்; துடித்தான்; சுடுநீர் என்றால், சுடாமல் இருக்க முடியாதுதான்! திரும்பிப் பார்த்த அவனது பிஞ்சு மனத்தின் கூத்தரங்கில் மகேஷ் திரும்பிப் பார்க்கவே, அவன் தன்னுடைய கையிலிருந்த ஊது வத்தியை வீசி எறிந்தான், வீசியெறியப்பட்ட ஊது வத்தி மணக்குமா?- ஒ, அங்கே அம்மாவின் உருவம் நிழலாடுகிறது!-அதனாலேதான் மணம் பரப்புகிறது:

‘ஒமேகா’ பூஞ்சிட்டுக்குக் கடமை ஒன்றில்தான் கண்! இரவு மணி எட்டு ஆகி விட்டதாம்; சொல்கிறது.

மானிடர்களுக்குக் கண்ணெல்லாம் அவரவர்களின் சுய லத்திலேதான் கண் கொத்திப் பாம்பாகக் கட்டுண்டு கிடக்கிறது:

ஊதுவத்தி நெஞ்சுைத் தொட்டு நினைவைத் தொட்டு மணக்கிறது.

பாபுவுக்கு ஊதுவத்தி என்றால், சின்னஞ்சிறு பிராயம் முதலாகவே நிரம்பப் பிடிக்கும். அப்பா சொல்லித் தந்த பாடம் அது: நேற்றுச் சொன்னமாதிரி இருக்கிறது.

பாபு, இங்கே இந்தப் பரிசுத்தமான பூஜை அறையிலே கொலு இருக்கிற மாங்காட்டு ஆத்தாளோட சந்நிதானத்திலே மணம் பரப்பிக்கிணு இருக்கிற இந்த ஊதுவத்தியிலே தான் மனித வாழ்க்கையோட தத்துவமே அடங்கிக் கிடக்குது: மானுடப் பிறப்பு என்கிறது தவஞ் செஞ்சு கிடைக்கக் கூடியது; அப்படிப்பட்ட அபூர்வமான மனிதப் பிறவிக்கு ஒரு அர்த்தம் இருக்க வேணாமா? அதனாலேதான், ஆண்டவன் அன்பு என்கிற அற்புதமான தத்துவத்தையே உண்டாக்கிக் கொடுத்திருக்கான்; அந்த அன்பின் சக்திக்கு அழகான சாட்சியைச் சொல்லத்தான் அதோ, ஊதுவத்தி தன்னை அழிச்சுக்கிட்டு, ஆனந்தமான வாசனையைத் தெய்வத்துக்கு ‘நைவேத்தியம்’பண்ணிக்கிட்டிருக்குதாக்கும்: அன்பின் காலடியிலே சரணாகதி அடைகிற மன்னிக்கக் கூடாத, மன்னிக்க முடியாத எந்தப் பாவமும் கூட விடி மோட்சம் பெறாமல் தப்பவே முடியாது! இதுவேதான் அன்போட சக்தியுமாகும்! தன்னையே அழிச்சுக்கக்கூடிய ஒரு இக்கட்டான நெருக்கடி நிலைமை ஏற்பட்டாலும் சரி. மனிதர்கள் மனிதாபிமானத்தோடே அன்பை வாழ்த்தவும் வணங்கவும் தவறக்கூடாது! இன்னொரு நடப்பையும் முத்தி ஒரு வாட்டி அம்மாகிட்டே நான் சொன்னப்ப, நீயும் இருந்தாய்: திருப்பியும் சொல்றேன்: நான் மற்றவங்க கிட்டே அன்பைக் காட்டினேன்; தெய்வம் என் பேரிலே அன்பைக் காட்டிச்சு! அதனாலேதான் அன்றைக்கு ஆண்டியாக இருந்த உன் அப்பன் இன்றைக்கு பணம் காசோடவும் சீரும் செல்வாக்கோடவும் இந்தச் தமிழ்ச் சமூகத்திலே நல்ல பேரோடு தலைநிமிர்ந்து நடக்கவும் முடியுது! அங்கே பார், பாபு!-அந்த ஊதுவத்தி தன்னையே முழுமையாக எரிச்சுக்கிட்டுது; ஆனாலும், ஊதுவத்தியோட அந்தத் தெய்வ மணம் இன்னமுங் கூட நாலா பக்கத்திலேயும் எத்தனை அற்புதமாய்க் கமழ்ந்துக்கிட்டு இருக்குது, கண்டியா, பாபு?-இது மாதிரி, நாம மற்றவங்ககிட்டே காட்டுற அன்பு நாளும் பொழுதும் உயிர் வாழக்கூடிய அன்பாகவும் இருக்க வேணும்; உண்மையான அன்புக்கு லாப நஷ்டக் கணக்கைப் பார்க்கிறத்துக்கு நேரம் இருக்காது!- ஆமா, அன்பு உடையவங்க எல்லாம் உடையவங்கதான்!- மறந்திடாதே; அதாவது, மற்றவங்ககிட்டே அன்பைக் காட்டுறதுக்கு நீ மறந்திடாதே! நீ நன்றிக்கடன் பட்டவன்: அதனாலே, நீ காட்டக்கூடிய அன்பு பிற்காலத்திலே ஒரு சரித்திரத்தைப் படைக்கக்கூடியதாகவும் அமைஞ்சிடலாமே?”

தந்தையின் அனுபவ ரீதியான பேச்சு பாபுவின் குருத்து மனத்தில் இன்னமும் ஒலித்துக்கொண்டிருக்கிறது: எதிரொலித்துக் கொண்டிருக்கிறது; மேனியின் சிலிர்ப்பு இன்னமும் அடங்கவில்லை; ஒடுங்கவில்லை; ‘அப்பான்னா, அப்பாதான்: அப்பாவேதான்!’ பெருமையான பெருமிதத்தில் மிதந்தான் மணிப்பயல், ‘எத்தனை பெரிய விஷயத்தை எத்தனை எனிமையால் விளங்க வச்சிட்டாங்க அப்பா!’- அவன் பெருமையும் பெருமிதமும் மேலும் ஓங்கின.

அங்கே டி. வி.யில் என்னவோ படம் நடந்து கொண்டிருந்தது.

அக்கா இனிமேல் படம் முடிந்ததும்தான், மூச்சு விடுவாள்; மூச்சுக் காட்டுவாள்!-நல்ல நந்தினி அக்கா!---நாளைக்குப் புருஷன் வீட்டுக்குப் போனால் அடுப்படியிலும் ஒரு டி. வி. பெட்டியை வாங்கி வைத்துக் கொள்வாள் போலிருக்கிறது. விதி எழுதி வைத்த மாதிரி, என் இடது கன்னத்திலேயும் மகேஷ் இடது கன்னத்திலேயும் ஒரே மாதிரியான கறுப்பு வடுக்கள் தென்படும் அதிசயக் கூத்தைப் பற்றிச் சந்தேகம் கேட்டால், என் மனசுக்குச் சமாதானம் உண்டாகிற விதத்திலே ஏதாகிலும் விளக்கமாகச் சொல்ல மாட்டாளோ?-‘அதெல்லாம் ஒண்னும் பெரிய சமாசாரம் இல்லே! நீ போய்ப் பாடத்தைப் படிடா, தம்பி!’ அப்படியென்று என்னைப் படிக்கச் சொல்லி உபதேசம் செய்து விட்டு, அவள் தன் போக்கிலே படத்தைப் பார்க்கத் தொடங்கிவிட்டாளே?- இந்தச் சங்கதி பெரிய சங்கதியாக இருந்திருந்தால், அக்கா என்கிட்டே சொல்லாமல் இருந்திருக்கமாட்டாள்!- மருப் பிரச்னை எக்கேடு கெட்டுப் போகட்டும்! எனக்கும் மகேஷூக்கும் ஏதாகிலும் சொந்த பந்தம் இருந்தாலாவது, நான் மனத்தைப் போட்டுக் குழப்பி கொள்ளலாம்-ஆனால், நான் யாரோ? மகேஷ் யாரோ?---‘சே!பெரிய சனியனாய் போச்சே? சே!’.

மறுபடி, அப்பா ‘சடுகுடு’ ஓடிவந்து மகனது பிஞ்சு நெஞ்சிலே குதித்தார். தன் மீது உயிரையே வைத்திருக்கும் தன் தந்தையைப் பற்றின பல்வேறு அன்பான பசுமை நினைவுகளில் மெய்ம் மறந்தான் அவன்; அவனுடைய விழிகள் கண்ணீரைக் கூட்டுச் சேர்க்க மறக்கவில்லை. அன்பான அப்பாவை அன்பாக நினைத்தவன், அம்மாவை மாத்திரம் அக்கணத்திலே நினைத்திட மறந்துவிடுவானா?---‘அம்மா, எந் தெய்வமே! முந்தித் தவம் கிடந்த உன்னோட அன்பான வயித்திபல முந்நூறு நாள் குடியிருக்கக் கூடிய பெரிய பாக்கியத்தை எனக்குத் தந்து, எனக்கு உசிரையும் உள்ளத்தையும் தந்த உன்னையே இன்னம் ஏழேழு பிறப்புக்கும் என்னோட தாயாக அடையக்கூடிய பாக்கியத்தையும் பொசிப்பையும் எனக்குத் தந்துப்பிடு, தாயே!’ அன்று உண்ட தாய்முலைப் பாலமுதம் இன்று நன்றியின் கண்ணீராகப் பெருக்கெடுத்து ஒடுகிறதோ?- ‘நீயே எனக்குத் தெய்வமாக ஆகிட்ட பிற்பாடு, நான் உனக்கு எப்படித் தெய்வமாக ஆக முடியுமாம், அம்மா?...நல்ல அம்மா...!’

பாபுப் பையனுக்குச் சொந்தமான அறையில் இப்போது பூத்திரை விலக்கி, வானத்துப் பால் நிலவு தவழத் தொடங்குகிறது.

செவகி அக்காவை அம்மா அதிகாரம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்!

“அம்மா!”-தனக்குத் தானாகவும் தன்னில் தானாகவும் அம்மாவை விளித்தான் பாபு!---‘பாபு, நீ என்னோட தெய்வம்; எனக்குத் தெய்வம் நீ; அதனாலேதான், நான் என் உயிரையே உன்கிட்டே பணயம் வச்சிருக்கேன். இப்படிப்பட்ட நிலைமையிலே, என் மனசான மனசை ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் உன்கிட்டே திறந்து காண்பிக்காமல் தப்பிடுவேனா, என்ன? அப்படிக் காண்பிக்கத் தவறினால், பின்னே, அந்தப் பாவத்தையும் பழியையும் சுமந்து போய்க் கரைக்கிறதுக்குப் புதுசாய் ஒரு கங்கையைத் தான் தேடிப் போகவேனணும் நான். எதுக்குமே நேரம் காலம் வரவேணும்; அப்போ, என்னோட இந்த நெஞ்சை--நீ சப்பி சப்பிப் பால் குடிச்சு லூட்டி அடிச்ச இந்த நெஞ்சை ஒரே மூச்சிலே பிளந்து உன்கிட்டே காண்பிக்காமல் இருந்திடுவேனா?... நான் உன் அன்பான அம்மா இல்லையா, பாபு?...”

சிறுகச் சிறுகக் “சன்கள் நனேயத் தலைப்படுகின்றன, இளம் மார்பு ‘டக் டக்’ கென்று அடித்துக் கொள்ளத் தலைப்படுகிறது: “அம்மா என்னென்னமோ பேசிட்டீயே, அம்மா ?- ஐயையோ! வெளியே ஓடிவிடவேண்டும்;இல்லையானால், மண்டை பிளந்து விடும்! ஊகூம்!---வெளியே ஓடிவிடக்கூடாது;என் அம்மாத் தெய்வத்திடம், என் தெய்வ அம்மாவிடம் ஒடிவிட வேண்டும்!-அப்போதுதான் என் தலை தப்பமுடியும்!-நான் தப்பிப் பிழைக்கவும் முடியும்!-நான் தப்பிப் பிறந்தவன் ஆயிற்றே:- அம்மா வாய்க்கு வாய் சொல்லமாட்டார்களா?-'அம்மா! என்னோட தெய்வமே!’

“பாபு.பாபு!”

பெற்றெடுத்க - புண்ணியவதியைத் தவிர, பாபுவை இவ்வளவு பாசத்தோடும் இத்துனே பரிவோடும் இத்தகைய பதற்றத்தோடும் அழைத்திட யாரால் முடியும்?

“நான் கொஞ்சம் முன்னே, “அம்மா, அம்மான்னு: அலட்டினது எப்படிக் கேட்டிருக்கும்? அவங்க அப்ப உள்ளே அடுப்படியிலே இருந்தாங்களே?--சின்னப் பிள்ளைக்குப் பெரிய ஐயம் புறப்பட்டது.

அதே சடுதியில்:

“பாபுவின் பேரிலே நான் வச்சிருக்கிற துல்லிதமான் அன்பும் அயனான பாசமும் உன்னைக்காட்டிலும் மயிரிழயும் குறைஞ்சது கிடையாது!” என்று சொல்லாமல் சொல்வதைப் போன்று, அங்கே பாபுவைப் பெற்ற அப்பாவும் அப்போது பிரசன்னமானார்.

இப்போது

பாபுவுக்குத் திக்குமுக்காடிப் போய்விட்டது. தாய்க்கும் திகப்பனுக்கும் ஊடாக, ஊடும்பாவுமாகச் சேய் அகப்பட்டுக் கொண்டால், நிலைமை இவ்வாறுதான் அமையுமென்பதற்கு யதார்த்தமான உதாரணமாகத் திகழ்ந்தான் பொடியன்.

என்ன?

பொடியனா பாபு:

பாபுவா பொடியன்?..

பாபுவைத் ‘தெய்வமே, தெய்வமே!’ என்று போட்டி போட்டுக்கொண்டு அப்பாவும் அம்மாவும் தலையில் தூக்கி வைத்துக் கூத்தாடுகிறார்கள்.

பாபுவோ, தனக்குப் பரசுராமர் அவதாரம்தான் இஷ்டம் என்கிறமாதிரி பேசிவிட்டான்.

இந்நிலையில்---

மீளவும் அன்பின் போட்டி ஆரம்பமாகிவிட்டது.

அன்பு மீளமுடியாமல் தவிக்கத் துவங்குகிறது.

“இங்கே வாயேன், பாபு:”

இது அப்பா.

‘ஊம், ஜல்தி!’

தூண்டுதலுக்குப் பேர்: ரஞ்சனி.

இருந்திருந்தாற்போன்று, பாபுவுக்கு ஒரு சந்தேகம் கண்சிமிட்டியது. 'சற்றுமுந்தி நான் மாடியிலேயும் கீழேயும் அப்பாவோட அந்தரங்க அறையையும் அம்மாவுக்குச் சொந்தமான கூடத்தையும் ஒரு அலசு அலசினதை இவங்க ரெண்டுபேரும் உளவு அறிஞ்சுதான் வழக்கப்படி என்னைக் கண்டிக்க இப்படி இழுத்துக்கிட்டுப் போறாங்களோ? சின்னப்பிள்ளையின் சின்னமனம் வேண்டாத ஆராய்ச்சியில் வேண்டாவெறுப்புடன் பின்னிக்கிடந்த சூட்டோடு சூடாக, ஒட்டமும் நடையுமாகப் பாய்ந்து சென்ற பெற்றாேர்களோடு உடன் தொடர்ந்து, நின்று நிலைத்த இடத்தை ஏறிட்டுப் பார்த்தபோது, அவன் கண்களில் அடுத்த முறையாகவும் அந்தப் பரசுராமர் ஆட்டகாசமான அமர்த்தலோடு காட்சியளித்தார்!

“எனக்குப் பரசுராமர் அவதாரம்தான் ரொம்ப ரொம்பப் பிடிக்கும், அம்மா! அவன் தன்னையும் அறியாமல் தன்னுடைய இடது கன்னத்தின் வடுவைத் தடவி பார்த்துவிட்டு, பிறகு, தனது இடது பக்கத்து இருதயத் திற்குத் தடவிக் கொடுக்கவும் ஆரம்பித்தான். வடுவின் நினைவு அவனே மகேஷை நினைவுகூரச் செய்யவும், மறக்கவில்லை!- "மகேஷ், நீ யார்?”

என்னவோ, முகப்பில் சத்தம் கேட்டாற்போல இருந்தது.

திரையை நீக்கியும் பார்வையை நீவியும் பார்த்தான் பாபு. நான் தொலைபேசியில் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி, தோழன் அசோகன் ஹாஸ்டலிலிருந்து என்னு டைய பெட்டி படுக்கை எடுத்துக்கொண்டு ராத்திரியே இங்கு வந்து சேர்ந்தால் தேவலாம்!

"பாபு!" அழைத்தாள் அம்மா. கொஞ்சப் பொழுதுக்கு முன்னதாக, எனக்குப் பரசுராமர் அவதாரம்னதான் ரொம்ப ரொம்பப் பிடிக்கும்!” என பாபு. கருத்துத் தெரிவித்தது அவளிடம் மனக்குகை ஓவியமென நின்றது: நிலைத்தது. ‘அதிசயப் பிறவியான, அன்புமிக்க என்ளுேட தெய்வமான பாபு, கிருஷ்ணன், முருகன்னு ஏதோ ஒரு அவதாரம் எடுக்காமல், யாரோ ஒரு முனிவரோட கடைசி மகனான அதிசயப்பிறவியான பரசுராமர் அவதாரத்தை எடுப்பாளுமே?-முன்னேவிட அதிகப்படியான வலியும் வேதனையும் தற்போது அவளது முதுகுப்புறத்திலிருந்து வெளிக்கிளம்பிற்று. இவ்விதமான நினைவுச் சருகுகள், அவளுடைய மனச்சாட்சியின் தீச்சுடரில் வெந்து சாம்பலாகக் காத்திருந்தனவோ, என்னவோ?

"பாபு, நீ உன் அம்மா கையிலே கொடுத்த ரெண்டு லெட்டரையும் வாங்கிக்க: இந்தா!" .

மின்விளக்குகள் ‘சடக்' கென்று நின்றன: நின்ற சுவடு காட்டாமல், ‘சடக்' கென்று எரியவும் செய்தன.

நையாண்டித்தனமான சாகசமும், குறும்புத்தனமான சூட்சுமமும் விழிகளில் விதியாகச் சிரிக்கக் கடிதங்களை வாங்கிக்கொண்டான் பாபு. முனைப்பான யோசனையில் முனைந்தவளுக, பொல்லாத திவினையாகப் பளிச்சிட்ட அந்தக் கன்னங் கறுத்து மருவை-வடுவைச் சீற்றமும் வேதனையும் தாங்காமல் தடவிக்கொண்டே யிருந்தான். “இந்த வடுப் பிரச்னையை, ஆதாகப்பட்டது. எனக்கும் மகேஷுக்கும் ஒரே மாதிரியாக இடது கன்னத்திலே அநாகரிககாக மரு விழுந்திருக்கிற சிருஷ்டி ரகசியம் பத்தின பிரச்னையை இந்த நல்ல சந்தர்ப்பத்திலே அப்பாகிட்டேயும் அம்மாகிட்டேயும் கேட்டா, என்னவாம்?-எண்ணத்தைச் செயலாற்ற எண்ணியவனின் இதயத்தின் இதயத்தில் ஆம்மா பேசிய பேச்செல்லாம் எதிரொலிக்கவே, ஓர் அரைக்கணம் தடுமாறி, மறு அரைக்கணத்தில் சுய உணர்வை மீட்டுக்கொண்டு, பிரச்னையைப் பெற்றவர்களின் சந்நிதியில் முன்னே வைக்க வாயைத் திறந்தனார் பாபு.

அத் தருணத்தில்:

சோமையா வந்து நின்றார், “சின்ன எஜமானரைத் தேடி யாரோ அசோகனம் வந்திருக்குதுங்க," என்றார்,

பாபு கடிதங்களைக் கையிலே ஏந்தியவனாக, முகப்பு மண்டபத்துக்குப் புறப்பட ஆயத்தப்படுகிறான்.

‘பாபு, இந்த ரெண்டு லெட்டரையும் என்ன செய்யப் போறே? என்று விசாரணை செய்தார் நந்தினி விலாசத்தின் பாங்கர் ரஞ்சித்.

“லெட்டர் ரெண்டையும் ஊறுகாயா போடமுடியும்:மூச்சுக்காட்டாமல், இது ரெண்டையும் மிஸ்டர் மகேஷ் கையிலே ராத்திரி விருந்து முடிஞ்சதும் ஒப்படைச்சிடு வேன்.” என்று விவரத்தைத் தெரியப்படுத்திவிட்டுத் தலையை உயர்த்தினான் பாபுப் பயல் அவன் திருஷ்டியில் இப்போதும் பரசுராமரின் சித்திரம் வினையெனப்பட்டுத் தெறித்தது. மின்வெட்டும் நேரம் சில ஆனான்; மறு கணம் சிலைக்கு ஜீவன் வந்தது. “ஒரு செகண்டிலே வந்திட் றேன்.’ என்று சேதி சொல்லிவிட்டு, அங்கிருந்து விரைத்தான்.

ரஞ்சனி ஊமைவலி தாளாமல் திண்டாடுகிறாள்.

ரஞ்சித் நெஞ்சுவலி தாங்காமல் தத்தளிக்கிறார், இந்தப் பாபு, பழனிமை ஆண்டியா, என்ன?

உண்மைதான்! பாபு, பழனிமலையின் ஆண்டியாகத் தான் இருப்பான்!

பின்னே, பரசுராமரின் அவதாரம்தான் தனக்கு மிகவும் இஷ்டப்படுமென்பதாகப் பயங்காட்டவில்யைா இந்தப் பாபு!

ஆமாம்; பாபு அதிசயமான பிறவி, பிறப்பு; தப்பிப் பிறந்தவன்; தப்பிப் பிழைத்தவனும் அவனே!...

ராகங்களிலே, ஆர்வமான ரகம், ஆவன் அபூர்வ ராகம்!

அப்படியென்றால், வாழ்க்கை எனப்படுவது இசை மன்றம் கணக்குத்தானா?...

ரஞ்சனியின் நினவலைகள் ஆர்ப்பரிக்கின்றன: முகம் வேர்வையில் நகிைறது: ஈரப் பதத்தில், பேசும் விழிகளின் பேசாத கண்ணீரும் சேர்த்தி என்றைக்கும் இல்லாத திருநாளாக, இன்றைக்கென்று காலை முதலே இனகபுரிந்த அச்சமும், இனம் புரியாத ஏக்கமும், வாய்விட்டுச் சொல்ல வொண்ணுத தவிப்பும், மனம் விட்டு அழுது தீர்க்க முடியாத உருக்கமும், மனச்சாட்சி குற்று விரும் குலே உயிருமாகத் துடிதுடித்த அடி நெஞ்சை அடியும் முடிவும் இல்லாமல் அரித்து அரித்துத் தின்று கொண்டிருநத அந்தப் பயங்கர மான-மகாப் பயங்கரமான நரக வேதனையையும் அவள் உள்ளுற உணர்ந்து கொள்ளத் தவறி விடவில்லைதான். என்னவோ இடந்துவிட்டது!...இன்னும் என்னவோ நடக்கப் போகிறது!

காக்கை எங்கேயோ, ஏனோ கரைகிறது.

"ஆத்தாளே, மாங்காட்டு ஆத்தாளே!”

ரஞ்சனி விம்முகிறாள்.

சோதனை இல்லையென்றல், வாழ்க்கை இல்லையா?

சோதனை இல்லையென்றால், தெய்வமே இருந்திருக்காதோ?-இருந்திருக்க இயலாதோ?

“தாயே!”

விம்மல், தொடர் கதை; தொடரும் கதை.

'நான் மகாபாவி!... மன்னிக்க முடியாத பாவி நான் மன்னிக்கக் கூடாத துரோகி நான்!... ஐயையோ, அந்தச் சோதனை ஏன் ஏற்பட்டுத் தொலைச்சுது?...ஈஸ்வரா!’

நெஞ்சின் வலி மிஞ்சுகிறது.

மின்காற்று இதம்பதமாக வீசும்,

அந்தச் சடுதியிலும்கூட,ரஞ்சனி அந்த விதிக் கூத்தை-வினைக்கூத்தைத் திரும்பிப் பார்க்கிறாள்; பார்க்க வேண்டியவள் ஆகிறாள்:- விதி ஆடத் தொடங்கிய அந்தி மாலைச் சதுரங்க ஆட்டம், விதியின் எழுத்தைக் கிழித்து வீசியதைப் போன்று ரஞ்சித்-ரஞ்சனி ஜோடி, மோற்கொண்ட புரட்சிச் சவாலின் தார் மிகமான புனித முடிவின் பேரில் தொடர்ந்து பிறகு, அது அந்தி நிலாச் சதுரங்க ஆட்டமாக உருக் கொண்டு, அந்த ஆட்டமும் அந்த விளையாட்டும் கடைசியில் விதிக்குத் தோல்வியை ஏற்படுத்திக் கொடுக்க நேர்ந்த ஆந்தச் சித்திர-விசித்திர நிகழ்ச்சி, இப்போதும் அவள் ரத்தத்தை உறையச் செய்யத் தவறி விடவில்லைதான்: "ஐயையோ!’ - தன் மார்பகத்தை- அன்பு அத்தான் ரஞ்சித்தும் அருமை மகன் பாபுவும் ஆசை தீர விளையாடிய தன் மார்பகத்தை அழுத்தி அழுத்தித் தேய்த்துவிட்டாள்.

அப்படியென்றால், சோதனையின் வெற்றி தோல்வியை நிர்ணயித்து முடிவை வெளியிடுகின்ற ஒரு சதுரங்க ஆட்டம் தான் இந்த உலக வாழ்க்கையா?

இன்றைக்குக் கபாலம் கட்டாயம் வெடித்துச் சிதறி விடும்!...பேஷாக வெடிக்கட்டும்; சிதறட்டும்!

அத்தான் மறுபடி சிரிக்கிறார்: அவருக்கு மட்டிலும் உரியதான அளப்பரிய அன்புடன் சிரிக்கிறார்.

ரஞ்சனி கதறுகிறாள்: அத்தான், என் சுவாமியே! சாக வேண்டிய என்னை உயிர் பிழைக்கப் பண்ணியதோடு நில்லாது. எனக்கும் ஒரு கெளரவத்தையும் மானத்தையும் வாழ்க்கையையும் அருள்பாவித்து, என்னேயும் இந்தச் சமுதாயத்தின் வீதிகளிலே தலை நிமிரிந்து, தலையை திமிர்த்தி நடக்கப் பண்னின உங்களோட. மகத்தான அன்புக்கு என் வரையிலும் ஒரு மகத்தான சரித்திரமே உண்டுங்க!. ஆமாங்க, அத்தான் :- நான் செஞ்ச மன்னிக்க முடியாத மன்னிக்கக் கூடாத அந்த மகாப் பெரிய பாவத்துககுப் பரிகாரமாகவும்-நீங்க செஞ்ச ஈடு எடுப்பில்லாத மகாப் பெரிய புண்ணியத்துககு நன்றிக் கடளுகவும் என்ளுேட இந்தப் பாழும் உயிரை உங்களோட அன்பே வடிவான காலடியிலே காணிககை செலுத்தினல்தான், என்னோட ஆவி வேகுமோ, என்னமோ?-புலம்பல் நிற்கக் காணுேம்! தன் முதற்காதல் தோற்ற விரக்தியில் செத்து மடியவிருந்த தன் உயிரைக காத்து, மானத்தையும் காத்து, தனக்கும் ஒரு வாழ்வை அளிகக அன்போடு முன் வந்து, தன் இழுத்தில் தாலி கட்டிய அத்தான். அப்போதும் வழக்கம் போல நெஞ்செங்கும் நீக்கமற நிறைந்திருக்கக் கண்டாள் அவள்-அத்தான், என் சுவாமியே! இந்தப் பாவியை ரட்சிக்கச் சிலுவையை ஏந்தி. அன்பின் அவதாரம் எடுத்திருககிற என்னோட கர்த்தரே!... -

பாதங்களும் தனகின்றன.

பாவமன்னிப்பில், வாழ்க்கை சீரடைந்துவிடாதா?.

"தெய்வமே"!

பாபு ஓடோடி வந்து, அன்னையின் நெஞ்சகத்திலே "தொபுகடீர்” என்று குதித்தான். பாபு தெய்வமேதான்!.. பழநி ஆண்டித் தெய்வமேதான்!

எதை நினைப்பாள் ரஞ்சனி?

ரஞ்சனி எதைத்தான் மறப்பாள்?

நினைவும் மறதியும்தான் கூட்டிக் கழிக்கையில், வாழ்க்கையாக உருக்காட்டுப்படலம் வாசிக்கிறதோ?

ஆப்படியென்றால்-

மறைப்பதும் வெளிப்படுத்துவதும் வாழ்க்கையாக ஆகாதா? ஆவதும் இல்லேயா?

சே!...

என்ன வாழ்க்கை!

வாழ்க்கையாம், வாழ்க்கை!...

மண்:

வெறும் மண்:

இந்த மண் வாழ்வே மண்!...

மறுபடியும் பாபு, பழனி அப்பன் ஆகிவிட்டானே?பழனி மலையிலே, சுவாமி தரிசனம் முடிந்து, திருநீறு பூசிக்கொண்டதும், அது தன்னுடைய கண்களில் தெறித்து கண்களின் கரிப்பும் எரிச்சலும் மிஞ்சியதைக் கண்ட மகேஷ், பதைத்து நெருங்கித் தன் கண்களை அன்புடன் ஊதிவிட்ட காட்சியைக் கண்ட பாபு உடனே மகேஷை நெட்டிப் பிடித்துத் தள்ளிவிட, இதன் விளைவாக, அத்தான் சினமடைந்து தன் ‘அருமைப் பாபுவை அறைந்த காட்சி படம் காட்டியது. தன்ன அவ்வளவு சுளுவிலே யாருமே ஏமாற்றிவிடவோ, அல்லது விலக்கி வைத்துவிடவோ முடியாதென்று என்ன வெல்லாமோ பேசிய பாபுவின் சொற்கள் ஒலிக்காட்சி ஆயின. பாபு, நீ என்னென்னமோ பேசுறே; ஏதேதோ கேட்கிறே!-இனியும் என்னலே உங்கிட்டேயிருந்து தப்பு முடியாதப்பா!...தப்பவே முடியாதடா!...” பரசுராமர் ஏன் அப்படிக் கபடமாகச் சிரிக்கவேண்டும்?... ‘மாங்காட்டுக் காமாட்சித் தாயே!”

ரஞ்சித்தும்கூட தமது அருமைப் பெண்டாட்டியைப் போலவே அப்போது பழனி மலையிலேதான் இருந்திருக்க வேண்டும்!-"நிஜமாவே, நீங்க என்னோட சொந்த அப்பாவா இருந்திருந்தா, இப்படி வன்மத்தோடே என்னே அறைஞ்சிருக்கவே மாட்டீங்க! தரையில் கடல் அலையால் தூக்கி வீசப்பட்ட கெண்டையின் துடிப்பைக் காட்டிலும் ஒருபடி, கூடுதலாகவே அவர் துடித்தார். அப்பனே பாபு என்னோட தெய்வமே!...எங்களோட தெய்வமே! பாபுவின் அவதாரப் பிரச்னையில், தங்கள் மைந்தன் பரசுராமராகவும் அவதாரம் எடுத்திருக்கலாமே என்பதாக ரஞ்சனியிடம் சொன்ன சொற்களில், அவர் மனச்சான்று நெகிழ்ந்து தவித்தது. திரையிட்ட சுடும் நீரில் பரசுராமரின் படம் மறுபடி திரையிடப்பட்டது. 'ஈஸ்வரா!’

"ரஞ்!...கண்ணேத் துடைச்சுக்க சீக்கிரம்!”

"நீங்களும் மூஞ்சியைத் துடைச்சுக்கங்க. அத்தான்!"

இளவரசுப் பட்டம் தரித்த பாபுப்பயல் சொன்னான், சொன்னதுதான் வந்துவிட்டான்; ஒடி வந்துவிட்டான்: ஹாஸ்டலிலிருந்து கொண்டுவந்து சேர்க்கப்பட்ட பெட்டி படுக்கைச் சாமான்கள் புடைசூழ ஒடோடி வந்துவிட்டான்: அவன் கைகளிலே அந்த இரண்டு கடிதங்களும் வெகு காபந்தாகவே ஊஞ்சலாடின; ஊசலாடின.

இந்த மனிதச் சாதி, கல்தோன்றி மண்தோன்றாக் காலத்திலிருந்து பேசிப்பேசி அப்படி என்னதான் பிரமாக மாகச் சாதித்துவிட்டதாம்?

எனவேதான், இந்த இருபதாம் நூற்றாண்டில், கடிதங்களும் பேசவேண்டியதாகிறது:

ஒன்று:

“என் பிரியமான பாபு!
நீ இல்லாமல் நான் இல்லை!...ஆகவே, நீ என்னோடு கொச்சிக்கு வந்து விடுவாயா? ஏன், தெரியுமோ?

நீ இல்லாமல், நான் இல்லை!...

பிரியமான,
மகேஷ்!”

இரண்டு::

மகேஷ் ஸாரே!
நீங்கள் இல்லாமல் நான் இருப்பேன்.

ஆகவே, நீங்கள் உடனே இங்கிருந்து புறப்படவும்.

பிரியமில்லாத,
ர. பாபு!”

மஹாவிஷ்ணுவின் கைச் சக்கரத்தை நயந்து பெற்று, அதைத் தன் காலில் கட்டிக் கொண்ட பாவனையில்தான் பாபு ஒரிடத்தில் நிற்காமல் நிலைக்காமல் சதா சுற்றிக் கொண்டே இருப்பான். பாபுவுக்கு எப்போதும் அவசரம்; எதிலும் அவசரம்!:-மேலும். இது அவசரயுகம், பாருங்கள்! "அப்பா, அம்மா! மதியம் விருந்து முடிஞ்ச நேரத்திலே நம்ம வீட்டுப் பேஸினுக்குக் கீழே கிடந்த மகேஷோட லெட்டரையும் அதாவது, அந்த மகானுபாவர் எனக்கு வரைஞ்ச இந்த லெட்டரையும், இதுக்கு உண்டான என் பதில் கடிதத்தையும் இப்பவே அவர் கையிலே ஒப்படைச்சிடப் போறேன்; பிரசினைன்ன, அதை அப்பவே தீர்த்துக் கட்டிப்புடவேணும்; இல்லாட்டி, எனக்கு மண்டை வெடிச்சிடும்! அப்படியே, நம்ப பங்களாவை என் சிநேகிதனுக்குச் சுற்றிக் காண்பிச்சிட்டு, நொடியிலே திரும்பிட்றேன்: சாத்திரிக்கு மகேஷ் ரதி ஜோடிக்கு வைக்கிற விருந்திலே, என்னோட அசோகனும் கலந்துக்கிடுவாளுக்கும் பாபு அங்கிருந்து பாய்ந்தோட எண்ணினான்: எட்டிநின்ற சிநேகிதனை எட்டியே நிற்கச் சோன்னான், பாதங்களே நகர்த்தியிருப்பான்.

அதற்குள்:

அங்கேயே வந்துவிட்டார் மகேஷ், தனியாக, அதாவது, ரதித் துணை இல்லாமல், தனியாக வந்திருந்தார். வந்வவர், பாபு நீட்டிய கடிதங்கள் இரண்டையும் கை நடுங்க வாங்கிக்கொண்டார்: வாசித்தார்; கார்கால நீர் மேகம் அவர் முகத்தில் கூடாரம் போடுகிறது:’ கொஞ்சம் வெளியே போயிட்டு வந்திடுறேனுங்க, என்று சொல்லிவிட்டு, மரணதண்டனைக் கைதியின் குலை நடுக்கத்துடன் அங்கிருந்து பிரிந்தார்.

ரதிதேவி உள்ளே நந்தினிதேவியோடு படம் பார்த்துக் கொண்டிருக்கலாம்! பொய் அல்ல!-நாளை நமதே!

மேலே: நிலா!

அந்தி நிலாவா?

கீழே: ரஞ்சித்-ரஞ்சனி தம்பதி!

அதோ, சூன்யம் அவ்விருவரையும் பார்த்துச் சிரிக்கிறது; கைகொட்டிச் சிரிக்கிறது: விதியாகச் சிரிக்கிறது: ஏன், வினையாகவும் சிரிக்கிறது!

ஏன்?...

ஏன்?

ஏன்?

"ரஞ், அழாதேம்மா அழப்படாது; இனிமே அழுது என்ன புண்ணியம், ரஞ்...?" -ஆறுதல்;சொல்லி, ஆருயிர்த் துணைவியின் அன்புக் கண்ணிரை அன்பின் நெகிழ்வுடன் விலக்கினார் பாங்கர் ரஞ்சித்.

"நீங்களும் அழறீங்களே?... அழாதீங்க, அத்தான்!... ஆண்டவன் அழுதால், இந்த மண் பொறுக்காதுங்க!” செருமிப் பொருமியலளாக, இன்னுயிர்த் துணைவரின் அன்புக்கு ஆதர்ச வடிவம் அமைத்த விழி நீரை வழித்தாள் ரஞ்சனி-திருமதி ரஞ்சனி ரஞ்சித்.

எதுவுமே நடக்காததுமாதிரி. அவர்கள் இரண்டுபேரும் ஒரு மாற்றம் வேண்டி முகப்புக்கு வந்து, தனிமையில் ஒதுங்கினார்கள்.

அவர்கள்: ரஞ்சித்--ரஞ்சனி!

அவள் தன்னுடைய மார்பைத் திரும்பத் திரும்பத் தடவிவிட்டான்: தடவிக்கொடுத்தாள்.

வலி பொறுக்காமல் தடுமாறி, தத்தளித்து, தவித்துக் கொண்டேயிருந்த அருமைமிகு மனைவியைப் பார்க்கப் பார்க்க, அவனது பெருமைமிகு கணவருக்கு உயிர்மூச்சு நின்றுவிடும் போலிருந்தது: ரஞ்சித் தமது பங்குப் பணிக்காகத் தம்முடைய நெஞ்சகத்தை வருடிவிடலாஞர். தொட்டடுத்த வினாடியில், கைவிரல்கள் இடுப்பைத் துழாவின.

"என்ன தேடுறீங்க, அத்தான்?" என்று கேட்டாள் உரியவள்.

“மாடியிலே என்னோட காத்ரெஜ் மேஜை டிராயர் சாவியைத் தேடினேன்," என்றார் உடையவர்.

*அங்கேயே விட்டுட்டு வந்திட்டிங்க போலிருக்கு”

“ஆமா; ஆமா; நினைப்பு வந்தாச்சு; அங்கே மேஜை மேலேதான் போட்டுட்டு வந்தேன்!”

"நம்ப ஸி, ஐ. டி. பாபு அங்கே போகையிலே, மேஜையைத் திறந்து உங்க பெர்ஸனல் டயரியைப் படிச்சிட்டான்ன, என்ன ஆகிறதாம்?”

"நம்ம பாபு அந்தரங்கமான அந்த டைரியைப் படிக்க வேணும்னுதான், அப்படி மேஜைமேலே சாவியைப் போட்டுப்பிட்டு வந்திருக்கேளுக்கும்!”

"அத்தான்..." என்று பதறிவிட்டாள் ரஞ்சனி.

"எடுத்ததுக்கெல்லாம் உணர்ச்சி வசப்பட்டு அவதிப் பட்டது போதாதா?-பத்து வருஷமாகத் தெரிஞ்சுக்காமல் இருந்த தன் கதையை இனியாகிலும் நம்ப பாபு தெரிஞ்சுக்கிட வேணுமா, என்ன? குரலைத் தாழ்த்தியும், அன்பை உயர்த்தியும், நெஞ்சை ஒளித்தொரு வஞ்சகம் இல்லாமல், சூழ்நிலையை எடுத்துக்காட்டிஞர் பாங்கர்.

அவள் 'ஜடம்' ஆனாள். இருதயத்தின் இடப்பக்கநோவு அதிகரித்தது: வழக்கத்தைவிடவும் அதிகப்படின அழுத்தத்தோடு நெஞ்சிற்குத் தடவிக் கொடுத்தான்; வளையல்கள் முகப்பு ஒளியில் வைரம் கக்கின; ஜாதி ரோஜாப்பூவின் இதழ் ஒன்று இடதுபுறக் காலடியில் தஞ்சம் அடைந்தது. பாபு தன்னோட பயங்கரக்கதை காரணத்தை அறிய நேர்ந்தால், என்னோட கதி என்ன ஆகுமோ? பாபு, என் தெய்வமே!-பரசுராமரி அவதாரம் எடுத்துவிடுவானே பாபு? அயர்வோடும் களைப்போடும் மார்பகத்தைத் தடவிக் கொண்டேயிருந்தாள்.

‘ரஞ், நான் வேணும்னு உன் நெஞ்சைத் தடவி விடட்டா?”

*நீங்களா?” மிகப் புதிதான வெட்கத்துடன் விழிகன் இறக்குகிறாள் ரஞ்சனி.

மெளனம்,

“ஆச்சரியமாயிருக்கே உங்க பேச்சு? திருநீலகண்டரோட வைராக்கிய நோன்பு பத்து வருஷம் கழிச்சு இப்பத்தான் பூர்த்தி ஆகிறதுக்கு வேளை பார்த்திருக்குப் போலே!”

‘எதுக்கும் வேளை கூடிவர வேணாமா, ரஞ்சனி’

காற்றில் சிக்கி அணயத்துடிக்கும் விளக்கு தப்பி விடும் போது, விளக்கின் ஒளி பிரகாசமாகவே அமைவதற்குசி சரியாக, ரஞ்சினியின் சோகம் சூழ்ந்த வதனம் பளிச் சென்று மலர்ச்சியை அடைந்திட, ‘அப்படீங்களா? சரி, சரி: விருந்துமுடிஞ்சானதும், பத்து வருஷம் கழிச்சுத் திறக்கப் போற நம்மோட பள்ளி அறையிலே நீங்க எனக்குத் தடவிக் கொடுங்க, போதும்; இப்ப வேனாங்க; உடம்பை என்னமோ செய்யுதங்க, அத்தான். நான் போறேனுங்க!” என்று சொல்லி அங்கிருந்து நகர்ந்தாள் தலைவி.

பதற்றம் மேலிட, ‘போட்டுவாரேன்னு சொல்லேன், ரஞ்!” என்று கேட்டுக் கொண்டார் தலைவர்.

அழகான மூரல் சிந்துகிறாள் பேரழகி: "ஊம்... போயிட்டு வாரேனுங்க, அத்தான்!"

“ஆமா. உடம்பை என்ன செய்யுதாம்!”

"என்னமோ செய்யுதுங்க!”

"உன்னைப் பார்த்தால், என்னமோ எனக்குப் பயமாய் இருக்குது. அசந்தும் மறந்தும்கூட மூணுவது தடவையாகவும் செத்து மடிஞ்சிட பிரயத்தனம் செஞ்சிடாதே, ரஞ், என்ன, சரிதானே?" தரும தேவதையின் முகத்தை நிமிர்த்திக் கெஞ்சினார் தருமப்பிரபு.

ரஞ்சனி இப்போது அழகாக, வெகு அழகாகவே கடு நீரையும் சிந்துகிறாள்: “'என்னோட அன்புக் கடவுளேத் தனிமையிலே தவிக்கச் செஞ்சிட்டு, தான் இனிமே அப்படியெல்லாம் செஞ்சு வைக்கமாட்டேனுங்க, அத்தான். நான் போய்வரட்டுங்களா? தலைக்குமேலே வே& ரொம்பக் கிடக்குதுங்க, அத்தான்!” இடதுகை மோதிரத்திலும் ஈரம் சொட்டுகிறது.

மெளனம் சம்மதம் தந்தது.

“அத்தான் அத்தான்! பரசுராமர் கதையைக் கொஞ்சம் சொல்லுங்களேன்!”

‘உனக்குத் தெரியுமே? நம்ம கூட மதியத்திலே சொன்னனே ?

‘உங்க வாயாலே கேட்கணும்னு ஆசையாஇருக்குதுங்க, அத்தான்!”

எங்கோ இடித்த இடி இங்கே தலையிலே விழுந்துவிட்ட மரண வேதனையில், நாடித் துடிப்பு நின்றுவிட்டமாதிரி உணர்ந்தார் பாங்கர்: “ஜமதக்னி முனிவரோட சம்சாரம் ரேனுகாதேவி; அவள் வழக்கப்படி மண் பிடிச்சுப் பானே செஞ்சு'தண்ணீ கொண்டார ஆற்றங்கரைக்குப் போனப்ப, வானத்திலே யாரோ கார்த்த வீர்ய அர்ச்சுனன் என்கிற கந்தர்வன் ஒருத்தனைப் பார்த்த மாத்திரத்திலே, மனசு மோகத்தாலே தடுமாறிப் போயிட்டதாலே, பானை செஞ்சு தண்ணீயைக் கொண்டுபோக முடியாமல் போயிடுச்சு: கற்புநிலை தவறின மனைவியை முனிவரி மன்னிக்கத் தயாராக இல்லை. ஆகச்சே, அவர் தம்மோட கடைசிமகனை பரசுராமரைக் கூப்பிட்டார். அவனைப்பெற்ற தாயை அவனோட கோடரியினலே வெட்டிச் சாய்க்கும்படி ஆணையிட்டார். பரசுராமர் தந்தையின் உத்தரவை நிறை வேற்றிட்டான்:- சலனத்தின் உணர்ச்சிகளைக் கட்டுப் அடுத்திக்கொண்டு கதையை முடித்துவிட்டு, வெகு எச்சரிக்கையோடு முகத்தை நிமர்த்திப் பார்த்தபோது அருகை ரஞ்சனி அதற்குள் அங்கிருந்து போய்விட்டது தெரிந்தது. மனச்சாட்சி விம்ம, மனம் விம்மியது: மனம் விம்ம, மனக் கண்களும் விம்முகின்றன.

பசி வந்திடப் பற்றும் பறந்துவிடுமாமே?

'ஒமேகா' பூஞ்சிட்டுக்கு கடமைப்பசிதவிர,வேறு எந்தப் பசியும் வராது. அது, இரவு மணி ஒன்பது என்றுகூவி முடித்ததும். விருந்தை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தது.

வாக்குத் தவறமாட்டாள் நந்தினி விலாசத்தின் ஜீவன் ரஞ்சினி; உயிரான-உயர்வான அத்தானோடு, கூடவே அமர்ந்தாள்.

ரதி, மகேஷ் ஜோடியை இனி யாராலும் பிரித்துவிட முடியாது.

எதிரும்புதிருமான ஆசனங்களில் நந்தினியும் பாபுவும்.

பாபுவுக்குப் பக்கத்து நாற்காலியில் அவன் தோழன். அசோகச்சக்கரவர்த்தி, பங்களாவுக்குப் புதிது!

செவகி வெறும் பொம்மை.

மற்றப்படி, அவரவர்கள் வேண்டியதை வேண்டிக: மட்டும் எடுத்துப் போட்டுச் சாப்பிடவேண்டும்.

இங்கே திருவாளர் ரஞ்சித்தான் விதி:

முட்டை ஆம்லெட், தந்துரி ரோஸ்ட், விரால் மீன். குழம்பு, செம்மீன் இல்லாமலா? புஹாரி நல்ல மனிதர்

தொலேபேசி விளித்தது.

விரைந்தார் ரஞ்சித். கவியரசோடு அன்பில்பின்னிப் பிணந்து உரையாடுவவதென்றால், அவருக்குச் சாப்பாடு கூட மறந்து போய்விடுவது வழக்கம். ஆனாலும், இப்போது இவர் மறந்துவிடாமல், சாப்பாட்டுக்குத் திரும்பினார்:விருத்தினர்களை மதிக்கவேண்டும்!

மகேஷ் பெரிதாகவே ஏப்பம் விட்டா. ,

ரஞ்சனி மட்டிலும் மகேஷ-க்குச் சளைத்து விடுபவளா?

ரஞ்சித் அனுசரணையாக ரசித்து, அமரிக்களமாகச் சிரித்தார்.

மகேஷ் கைகழுவி முகம் துடைத்தார்.

பாம்பைக் கண்டு பயந்து ஒதுங்கின பாவனையில், மகேஷை விலக்கி வைத்து நடந்தான் பாபு.

மகேஷை உற்றுப் பார்த்தான் அசோகன். பாபுவிடம் மெதுவான குரலில், "டேய்! இந்த ஆள்தானே உன் அப்பா?" என்று விசாரனை செய்வான்.

நாவினால் சுட்ட சொல்லத் தாங்கும் இதயம் பாபுவுக்கு இல்லை; துணுக்குற்றான் துடிதுடித்தான். *ஏண்டா அப்படிக் கேட்டே?” என்று ஆத்திரம் புழுதி எழுப்பக் கோபாவேசமாகக் கேட்டான் பாபு.

“உனக்கு இருக்கிறதாட்டமே அந்த ஆளுக்கும் மூஞ்சி கயிலே கறுப்பான மறு இருக்குதே, அதை வச்சுக் கேட்டேன். இப்படிப்பட்ட அதிசயமான ஒற்றுமை, அப்பா-பிள்ளைக் குத்தான் வாய்க்கும்னு சொல்லி விக்கிடுவாங்க! . . ஆதான் கேட்டேன்!"

"போடா, போடா, முட்டாள் ராஜா! அந்த ஆள் யாரோ? அவர் எங்க குடும்பத்துக்கு வேண்டப்பட்டவர்: மலையாள நாட்டிலே கொச்சிலே இருக்கார் வந்த உனக்கு தானும் என் தாயார் தகப்பளுரைக் காண்பிக்கல்லே, நீயும் கேட்டுக்கிடல்லே!- சரி. தொலையட்டும். அங்கே பார், யாதொரு விஷமோ விஷமமோ இல்லாம அன்பு என்கிற சக்திக்கும் தத்துவத்துக்கும் உயிரும் உடம்புமா அமைஞ்ச ஒரு சாட்சி மாதிரி, பேசிக்கிட்டு இருக்கிறது தான் என் அப்பா. தன்னோட அன்பான உசிரைத் தன் அன்பான அத்தான் கையிலே- ஆமாண்டா, என் அப்பா கையிலே ஒப்படைச்சிட்டு நிம்மதியாய், பூவும் பொட்டுமாக இருக்காங்களே, அந்தச் சீதேவியேதான் என்னைப் பெற்ற புண்யவதி!"

பாபுவிடம் மன்னிப்புக் கோரிய சக்கரவர்த்தி, கைகளைக் குவித்துப் பாபுவின் பெற்றாேர் அமர்ந்திருந்த திசைக்கு “ஒரு கும்பிடு கொடுத்தான். "நான் புறப்படறேன், பாபு" என்று பயணம் சொல்லிக் கொண்டான்.

“வண்டியிலே போறீயா, அசோக்?” ‘இண்ணைக்குப் போயிடலம்:நாளைக்குதான் வண்டிக்கும் வாசிக்கும் எங்கே போவேன்?” -

“சரி, நீ புறப்படு: நான் எங்க அம்மாவுக்காக டாக்டரை வரவழைக்கணும்’, என்று கூறி, நண்பனுக்கு டாடா சொன்னான்.

‘அம்மாவைப் பத்திரமாய்ப் பார்த்துக்கிடு, பாபு:’

‘ரொம்பத் தாங்க்ஸ்!’’

திரும்பும் போதும், பாபுவைப் பரசுராமர் சந்தித்தார்:

இந்தினி விலாசம்,

அடுக்கு: மூன்று

மேல்நாட்டுப் பாணியில் திட்டமிட்டு நிர்மாணிக்கப்பட்டது அந்தக் கூடம்.

ரஞ்சித், நாட்டுப் பணிகள் மற்றும் பொதுநலப் பணிகளிலும் அன்போடும் பற்றுதலோடும் அக்கறையுடனும் உண்மையாகவும் விசுவாசமாகவும் ஈடுபட்டிருப்பதால், இத்தகைய பணிமுறைத் தொடர்புகளில் அவ்வப்போது இங்கே வருகை தரும் முக்கியமான அந்நியர்களுக்கு மட்டிலுமே இக்கூடத்தில் விருந்து கொடுப்பார் ரஞ்சித்.

டக்..டிக்.டக்!

ஒமேகா பூஞ்சிட்டுக்கு இதயம் உண்டு; மணி, இரவு ஒன்பது, ஐம்பது.

ரஞ்சித் என்றும் இல்லாத புது நாளாக இப்போது, அந்த விருந்தறையில் மிகத் தீவிரமான சிந்தனைக் கடலில் அகப்பட்டுக்கொண்டு கரையேற வழி தெரியாமல் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருந்தார். அருமை ரஞ்சனி மாத்திரம் பத்து விடிைக்கு முன்னர் ஓடோடி வந்து கதவுகளைத் தட்டியிருக்காமல் போயிருந்தால், அவர் எப்போதோ சாசுவதமாகவே கரை சேர்ந்திருப்பார், வளைகுடா நாடுகளில் விருந்தினர்களுக்குச் சமூக அந்தஸ்தைப் பிரதிபலிக்கும் வகையில் வழங்கப்படுகிற ‘கா வா’ எனப்படும் ஏலக்காய்க் காப்பியை ஏலக்காய் வாரியத்தின் செய்முறைக் குறிப்புப்படி தயாரித்துக் கொண்டிருப்பதாக முன்னறிவிப்புச் செய்ய ஒடோடி வந்திருக்கிருள் மகராஜி!- அபாய அறிவிப்பு திசை மாறிவிட்டது!- பழனியப்பா!... காமாட்சி!.

ஊதுவத்தியின் தியாகத்தில் பிறந்த மனம் தெய்வ மணமாகத்தானே இருக்கமுடியும்?

பாங்கருக்கு இப்போது தல்ல மூச்சுத் திரும்பியது, மேய்யாகவே அதிசயம்தான். தன்னுணர்வோடு சுடுநீர்ப் படுதா விரித்த கண்களைத் திறந்தார்.

அதே, வள்ளுவர்;

காந்தி மகாத்மாவும் இருந்தார்!

இருவரும் இங்கே நிரந்தரமான பிரதம விருந்தினர் களாக்கும்: -

ரஞ்சித் வியாபார ரீதியிலே, லட்சக்கணக்கில் புழங்குபவர்: அன்பு முறையிலே கோடிக்கணக்கில் புழங்குவார். அப்படிப்பட்ட புள்ளி இப்போது தனிமையில், தன்னந்தனிமையில் அழுதார்; அழுதார்: அழுதுகொண்டேயிருந்தார்:-ரஞ். . கண்ணே ரஞ்சனி அன்பே ரஞ்சனி! ஆருயிரே ரஞ்சனி! இனி தான் என்ன செய்வேன்?-பாவம் நீ என்ன செய்யப் போறே, ரஞ்? -அந்தரங்கமான மேஜை டிராயர்ச் சாவி கையில் விதியாகச் சிரிக்கவே, அவர் திடுக்கிட்டார்! விதியாவது, வினேயாவது, மண்ணாங்கட்டியாவது:- “எங்க வி. ஐ. டி. பாபு, மேஜையிலே நான் விட்டுட்டு வந்த சாவியை உபயோகப்படுத்தி, என்னோட அந்த ஊதா டயரியைப் புரட்டித் தன்னோட கதைகாரணத் தைப் பத்து வருஷம் கழிச்சு இன்னேக்காகிலும் தெரிஞ்சக் கிடுவானு: தான் மனப்பூர்வமப் நம்பினேன்; அவன் அதிசயமான பிறப்பு இல்லையா?- என் சாவிக்கொத்தைத் தொடவே கிடையாது. அவன் மானஸ்தன், ரோஷக்காரன் சின்னப்பிள்ளையா அவன்?-இல்லே இல்லவே இல்லை:பழனிமலை ஆண்டி. மட்டும் பெரிய பிள்ளையா, என்ன?... ஆளு, பாவுக்கு பரசுராமரோட அவதாரம்தான் பிடிக்கு மாமே?...ஈஸ்வரா இன்றையப் பொழுது எப்படி விடியப் போகுதோ, தெரியலேயே?... பாபுவின் நினவுகளில் மகேஷ் ஒன்றிக் கலக்காமல் இருக்க முடியுமா?- முடியாது: முடியவே முடியாதுதான்!...மகேஷ் இந்நேரம் ரதியின் துணை இல்லாமலே, நிம்மதியாக உறங்கிக் கொண்டிருப்பார்: பாவம் சுயப் பிரக்ஞை சிலிர்த்தெழுந்தது. ரஞ்சனியை இன்னமும் காளுேம்!- ‘ரஞ்.ரஞ் சத்தம் கொடுக்காமலே, சத்தம் போட்டு அழைத்தார் பாங்கர் ரஞ்சித்.

என்னவோ ஒரு குருவி அபசகுனம் பிடித்த முறையில் கத்தியது.

"ரஞ்...ரஞ்!”

இருட்டறையில் உலகம் இருக்கிறதோ?-இல்லை, காதல் இருக்கிறதோ?

ரஞ்சனி அப்போது ஒளிமயமான பள்ளி அறையில் தான் இருந்தாள். “ரஞ் , ரஞ்!-அத்தான் அவசரமாகக் கூப்பிடவே, அவள் அந்த ஏலக்காய்க் காப்பிக் கோப்பையை கைநடுங்க அவசரமாகத் தனியே பிரித்து எடுத்துக் கொண்டாள் !-அவளுக்கு அந்தக் கோப்பை நன்முக அடையாளம் புரியும்:- சற்று முன்னே, என்னவோ ஓசை கேட்டது, இப்போது கேட்கவில்லை; திறந்திருந்த கதவைச் சாத்தக் கூட நினைவின்றி, வேர்வையையும் கண்ணீரையும் துடைத்துக்கொண்டே இடது கைக் கோப்பையை அழுத்தமாகவும் வலது கைக் கோப்பையை மிருதுவாகவும் பிடித்தவாறு, வெளியேறினுள். பாபு: பாபு: அல்லும் பகலும் அவளுக்குப் பாபுவின் ஞாபகம்தான்! பெற்றவளுக்குப் பிள்ளை நினைவு, ஊனும் உயிருமாக ஊடுருவித் துளைத்து, ரத்தத்தின் ரத்தமாகப் பரவிப் பாய்வதுதானே வாழ்க்கையில் பாசத்தின் வரலாறு ஆகிறது. மேனி அல்லாடித் தள்ளாட, அங்கிருந்து வெளியேறுகிருள்: தெய்வத்தைத் தேடி ஓடி வருகிறாள்: முகூர்த்தப் பட்டும், பட்டுச் சரிகைச் சோளியும் இன்னும் கூட, ரஞ்சனிக்கு எவ்வளவு பொருத்தமாகவும் எடுப்பாகவும் அமைந்திருக்கின்றன!

“அ. . . த்!"

"ரஞ்...!”

“இன்னம் பாபு வரல்லீங்களா?" ...

"இல்லேம்மா!’ - இதயத்தின் புயல் விழிகளில் சங்கமமாகிச் சுடுநீர் உருவாகிக் கொண்டிருக்கவே, ரஞ்சித் தடுமாறினார். இன்னுயிர் நேசக்கிழத்தி ரஞ்சனி கோப்பைகளை நகர்த்தியும் பிரித்தும் வைப்பதை, அவர் ஊன்றிக் கவனிக்கவும் செய்தார்: “ரஞ்!’

ரஞ்சனி அந்தப் பரசுராமரின் படத்தை எதிர்ப் பக்கத்தில் தொங்க விட்டாள். அவளுடைய நீல நயனங்கள் இப்போது துலாம்பரமாகவே-பரிசுத்தமாகவே காணப்படுகின்றன:

மறுபடி, முன்னை மாதிரி, சத்தம் கேட்டது.

பாபு!...

"அம்மா! நான் யார்?" என்று விதியாகிக் கேள்விக்சணே ஒன்றை அன்பான அன்னையின் அடிவயிற்றிலே-அவன் பத்து மாதம் குடியிருந்த அடிவயிற்றிலே வீசி எறிந்தான் பாபு.

ரஞ்சனி துளிகூட திடுக்கிடவில்லை. பூவும் பொட்டும் சிரித்தன!

ரஞ்சித் திடுக்கிட்டார்: அன்றாெரு நாள் பழனிமலையில், “நிஜமாகவே நீங்க என்னோட சொந்த அப்பாவாக இருந்திருந்தால், இப்படி வன்மத்தோட என்னை அறைஞ்சிருக்கவே மாட்டீங்க!” என்று பாபு வினையாக மாறிக் கேட்ட சுடுசொற்கள் மீண்டும் எதிரொலித்தன. சுட்டன.

"சொல்லு, அம்மா, தான் யார், அம்மா?"

‘'நீ பாபு!” என்றாள் அன்னை.


“அது தெரியும்; ஆனா, நான் யார்னுதான் தெரியல்லே!"

"பாபு.நீ என் பிள்ளை:எங்க பிள்ளையாக்கும்!"மகத்தான அன்பையும் பாசத்தையும், ஊசலாடிக்கொண்டேயிருந்த தன்னுடைய உயிரில் குழைத்துப் பதில் சொன்னாள் ரஞ்சனி!'நீங்க நிஜமாகவே என் சொந்த அப்பாவாக இருந்திருந்தால், இப்படி என்னே வன்மத்தோடே அறைஞ்சிருக்கவே மாட்டீங்க! என்று அன்று பழனியில் விதியாகக் கேட்ட பாபுவின் கேள்வி, அந்நேரத்தில் அவளது பெற்ற மனத்திலும் ஒலித்தது.

“தாயே, சத்தியம் பேசவேண்டிய நேரம் இது; என்னோட சொந்த அப்பா யாராம்? சொல்லு, அம்மா!".

ரஞ்சனி விதியின் நாயகி ஆனாள்; சிரித்தாள்; விதியாகச் சிரித்தாள்; வினையாகவும் சிரித்தாள்: டக்கென்று எழுந்தாள்: கவனமாக நடந்து, அந்த ஏலக்காய்க் காப்பிக் கோப்பையை எடுத்தாள்; அந்தக் காப்பியைப் பருக முனைந்தாள்.

பாபு, ‘ என்னோட கேள்விக்குப் பதிலைச் சொல்லிட்டு, நீ அந்தக் காப்பியைக் குடிக்கலாம்!’ என்று ஆணையிட்டு, அந்தக் காப்பிக் கோப்பியைப் பறித்துக்கொண்டான்:

‘உன் சொந்த அப்பா மிஸ்டர் மகேஷ்தான், பாபு: அலறிக் கதறினாள் ரஞ்சனி!-பாபுவைப் பெற்ற அன்னை ரஞ்சனி!...

‘ஐயையோ...தெய்வமே!-பாபு தலையில் அடித்துக் கொண்டு ஓலமிட்டான். தாயிடமிருந்து பறித்துக்கொண்ட அந்தக் காப்பியை இப்போது அவன் குடிகக முனைந்தான்.

‘பாபு, அந்தக் காப்பியிலே விஷம் கலந்திருக்கேன்! ஐயையோ!...குடிச்சிடாதேப்பா!...பாபு...இந்த ஒரேயொரு வரத்தைமட்டும். நீ தந்திடு, போதும்! பாபு...பாபு ஒல மிட்டுப் பாய்ந்து அந்தக் கோப்பையை இப்போது அன்னை கைப்பற்றினாள்:"பாபு, பத்து வருஷத்துச் சோகக் கதையை என் வா யாலேயே சொல்விட்றேன்; அதுதான் நியாயம், தருமம்: சத்தியம் பேசவேண்டிய நேரம் இல்லையா, பாபு?— சொல்றேன்: நானும் தேஷாம் உயிருக்குயிராய் ஒருத்தரை ஒருத்தர் நேசிக்சோம்; ஆனா, எங்க முதல் காதல் நிறை வேறல்லே அந்த ஏக்கத்திலே, நான் செத்துப்போயிடப் பிரயத்தனப்பட்டப்பு. இவர்-என் அன்பு அத்தான் என்னைக் காப்பாற்றி. என் கழுத்திலே மஞ்சள் தாவியையும் கட்டி இங்க: எங்களேத் தேடிச் சீதேவி வந்தா; எங்க நந்தினி பிறந்தாள் :- அப்பறம்...அப்பறம், ஒரு சமயம் சாகப் பிழைக்கக் கிடந்தேன்: டாக்டருங்களெல்லாம் என்னைக் கைவிடப்பட்ட நெருக்கடியான அந்தச் சோதனை நேரத்திலே, இந்தப் பாவியாலே என்னோட முதல்காதலேக் கைவிடமுடியல்லே, மகேஷைக் கடைசியாக ஒரு தரம் பார்த்திடவேணும்னு ஆசைப்பட்டேன்; என் அத்தான் கிட்டே சொன்னேன்; மகேஷ் ஒரு அந்திப்பொழுதிலே வந்து சேர்ந்தார்; அப்போ, விதி இப்படியான சதுரங்க விளையாட்டை ஆடிப்பிடும்னு நாளுே, இல்லே, மகேஷோ கடவுள் சத்தியமாய் நினைக்கவே கிடையாது: மகேஷைக் கண்டடியும், எனக்குப் புது உயிர் வந்திட்டமாதிரி இருந் ‘திச்சு; நாங்க ரெண்டுபேரும் என் அத்தான் ஒப்புதலோடே, மாடியிலே தனி அறையிலே பேசிக்கிட்டிருந்தோம்; எங்களே யும் மீறி, எங்களையும் அறியாமல், நாங்க...நாங்க... ஐயையோ...’ ரஞ்சனிக்குத் தொண்டையை அடைத்தது.

“ஐயையோ, அம்மா!" மறுபடியும் பாபு தன் மண்டையைப் பிய்த்துக்கொண்டான்: தன்னுடைய அழகான இடது கன்னத்திற்குத் திருஷ்டி சுற்றிப் போட்டுக் கொண்டிருந்த அந்தக் கறுப்பு நிற மறுவை-தழும்பு மக்சத்தை வடுவைப் பிய்த்தெறியமுற்பட்டவனைப்போலவே, அந்தத் தோல்பகுதியைச் சுரண்டிவிடத் தொடங்கினான்.

"பாபு!"

இப்போது ரஞ்சித்தின் அன்புப்பிடிக்குள் சிக்கிக் கொண்டான் பாபு!...

ரஞ்சித் பேசலானார்: “பாபு: உன் அம்மா-என் மனைவி ரஞ்சனி, தான் செஞ்சிட்ட மன்னிக்கமுடியாத-மன்னிக்கக் கூடாத அந்தப் பாவத்துக்கு ஈடுசெஞ்சிட, மறுமுறையும் செத்துப்போயிடத் துணிஞ்சிட்டா; அப்போதும் நான்தான் அவளைத் தடுத்தேன். ஏன், தெரியுமாப்பா?-நான் வள்ளுவத்தை நம்புகிறவன்; என்னோட உயிரை நான் காப்பாற்றாமல் இருக்கமுடியுமா?-அன்பு இல்லாமல், வெறும் எலும்பைத் தோலினலே போர்த்திக்கிட்ட வெறும் உடம்போடே நான் நடமாட ஒப்பல்லேப்பா!- எனக்கு வள்ளுவருக்கு அடுத்தபடியான ஆசான் மகாத்மா!--நீதி, நியாயங்களை எதிர்பாராமல், நான் அன்பின் சட்டத்தின் பாதங்களிலே அன்போடவும், இரக்கத்தோடவும் மனிதாபிமானத்தோடவும் சரண் அடைஞ்சேன்!---என் ஆருயிர் ரஞ்சனியின் பாவத்துக்குப் பாவ மன்னிப்புக் கொடுக்கவும் முன்வந்தேன்!...நீ உருவான அந்த முதல்காதலின் சின்னமான கருவைக் கட்டிக் காப்பாற்றிடவும் துணிஞ்சேன்!-அந்தி மாலையிலே விதி ஆடத் தொடங்கின சதுரங்க விளையாட்டு நல்லபடியாகவே-என் விதிப்பிரகாரமே நல்லபடியாகவே முடிஞ்ச நேரத்திலே, அந்திநிலா உதயமாகிடுச்சு, பாபு! -ஆனா, பத்து வருஷத்திலே இந்த ரகசியத்தை நாங்களே உன்கிட்ட சொல்லிப்பிடத்தான் நித்த நித்தம் தவிச்சோம் ஆனா, அந்தப் பாழும் விதி, இந்தக் கருப்பு மரு-வடுமூலம் இப்பத்தான் அந்த ரகசியத்தை உடைச்செறிய வேளை பார்த்திருக்குது!...பாபு: பாபு!... என்னோட அன்பான ஆருயிர் ரஞ்சனி-உன்னோட அன்பான தாய் ரஞ்சனி, என் வரைக்கும். எப்போதுமே தீக்குளித்த சீதாப்பிராட்டியே தான்! ஆமாப்பா, பாபு!...ஆமாம்!’ கட்டுமீறிய உணர்ச்சிகளால் கட்டுண்டிருந்த பாங்கர் ரஞ்சித், சின்னப்பிள்ளை மாதிரி விம்மிக்கொண்டேயிருக்கிறார்!

பாபு இப்போது பழனிமலை ஆண்டியாகக் கல்லாய்ச் சமைந்தான்; மறு இமைப்பில், தாயிடம் ஓடி, அவள் கைப்பற்றியிருந்த அந்த நச்சுக் கோப்பையை வல்லமையோடு பறித்துப் பருகத் தொடங்கினான்.

“ஐயையோ, பாபு!... பரசுராமராக மாறத் தவறிட்ட நீ. இனிமேல் தெய்வமாகவும் மாறவேண்டாம், அப்பனே பாபு! என் அப்பனே பாபு...!”

பாபு சிரிக்கிறான்: “இப்பத்தான் எனக்கு நல்ல ஞாபகம் வருது! தாயே! நீங்க இந்தக் காப்பியிலே கலந்தது விஷப்பொடி இல்லே!-அந்த விஷத்தூளை நீங்க எடுத்து வச்சப்ப, நான் துப்பறிஞ்சு, மேஜைக்கு அடியிலே ஒளிஞ்சிருந்து, அதை மாற்றிப்பிட்டேன், அம்மா...!”

“பாபு!” கதறிணாஆள் ரஞ்சனி.

பாபு அன்னையின் அன்புமிகுந்த அணைப்பில் கதறுகிறான்.

“அம்மா, நான் அவமானச் சின்னமா. தாயே?...” என்று உயிர் ஒடுங்க, உள்ளம் ஒடுங்கக் கேட்டான்; கதறினான்; புலம்பினான் பாபு!

ரஞ்சனியின் அன்பான மார்பகம் கதறியது; அலறியது; கசிந்தது; வழிந்தது;

“பாபு, என் மகனே! நீ அவமானச் சின்னம் இல்லேப்பா!-இல்லவே இல்லே, பாபு!... நீ என்னோட புனிதமான பாசத்தின் அன்புச் சின்னம்!... இந்தப் பாவியை ரட்சித்துச் சிலுவை சுமந்த என் ஏசுநாதரான அன்பு அத்தானோட விலைமதிக்க முடியாத தெய்வீகமான தியாகத்துக்கு வாய்ச்சிட்ட அன்போட அடையாளம் நீ, பாபு!...”

“தாயே, என் தெய்வமே! நீ பெற்றெடுத்த பாபுவாகவே நான் இனி இருந்திடுறேன், அம்மா...!”

“பாபு!”-ரஞ்சனி விம்மினாள்.

ரஞ்சித் அலறினார்: “பாபு...! பாபு!”

பரசுராமருக்கு அழத்தெரியவில்லே!-பாவும்!...

ஊதுவத்தி அற்புதமாகவே மணம் பரப்பிக்கொண்டிருக்கிறது!

ஏலக்காய் காப்பிக்கு ஈடு ஏது?

அப்போது:

கீழே, கூக்குரல்:

ஒடினார்கள். “ அய்யோ!... என்டே, பர்த்தான மகேஷ் மறிச்சுப் போயி....!”

ரதி-மகேஷின் ரதி, கூக்குரலிட்டுப் புலம்புகிறாள்: நெற்றிச் சந்தனக் கீற்றும் புலம்புகிறது!..

மகேஷ் இனிமேல் பேசமாட்டார்?—அவருடைய அந்தப் பாழும் கறுப்பு மச்சம்-மரு-வடு எதுவுமே இனிப் பேசாது: பேசவே பேசாது!...

தோழி கலாவோடு நின்றாள் தந்தினி.

ரஞ்சனி, விதியின் தலைவியான ரஞ்சனி தன்னுடைய கூந்தல் பூக்களைப் பிய்த்து வீசி எறிந்தாள்.

“அப்...! பாபு” ஒலம் பரப்பினுன்: கைகள் குவிகின்றன!..

“ரஞ்...என்னோட அருமை ரஞ்!”—விம்மி வெடித்தார் ரஞ்சித்-ரஞ்சனிக்கே உரித்தான ரஞ்சித். காலடியில் தஞ்சமடைந்து கிடந்த அந்த ஜாதி மல்லிகைப் பூக்களை தனக்கே உரிய ரஞ்சனியின் கூந்தலில் மறுபடியும் குட்டினர்.

“அத்தான், என்னோட அன்புத் தெய்வமே! என்னோட அன்பான கர்த்தரே!”—ரஞ்சனி விம்மினாள்; விம்மினாள்; விம்மிக்கொண்டேயிருந்தாள்!...

“அ....ப்...பா!... எங்களோட கண்கண்ட தெய்வமே!...” —விம்மி வெடித்தவனாக, திருவாளர் ரஞ்சித் அவர்களின் அன்புக் கழலடியில் தஞ்சம் அடைகிறான் மணிப்பயல் பாபு!

அதோ, பார்க்கிறீர்களா?

ஊதாப்பூ வானத்திலே, அன்பின் ஆதரிச வடிவமாகத் தரிசனம் தந்த அந்தி நிலா, இப்போது பூரணமான அன்பின் நிதர்சனமான வடிவெடுத்துப் புதிதானதும் புனிதமானது மான ஒரு சதுரங்க ஆட்டத்தை விளையாடத் தொடங்குகின்றது!...

வாழிய செந்தமிழ்!

⚫⚫⚫