பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - மொழிமரபு இ-ள் :- நெட்டெழுத்து இம்பரும் நெட்டெழுத்தினது பின்னும், தொடர் மொழி ஈற்றும் தொடர்மொழியது இறுதியிலும், குற்றியலுகரம் வல்லாறு கார் ந்து (நிற்றல் வேண்டும்)-குற்றிய லுகரம் வல்லெழுத்து ஆறினையும் ஊர்ந்து விற் தலை வேண்டும் ஆசிரியன்). " தந்து புணர்ந்துரைத்தல் ) (மரபு-ாய) என்னும் தந்திரீவுத்தியான், முன்னி ன்ற நிற்றல் வேண்டும்' என்பது ஈண்டும் புணர்க்கப்பட்டது. உ-ம். நாகு, வாகு என வரும். நெட்டெழுத்திம்பரும் தொடர்மொழியீறும் இடம். வல்லெழுத்துப் பற்றுக் கோடு. இவ்வாறு இடமும் பற்றுக்கோடும் கூறவே, மொழிக்கு ஈறாலும் கூறி யவா முயிற்று. 6. இடைப்படிற் குதுகு மிடறு மாருண்டே கடப்பா டறிந்த புணரிய லான, இது, குற்றியலுகரம் புணர்மொழியுள்ளும் வருமென்பது உணர்த்துதல் ஆ விற்று . இ-ள் :--இடைப்படினும் குறுகும் இடன் உண்டு-(அவ்வகரம்) புணர்மொழி இடைப்படினும் குறுகும் இடமுண்டு. (அதன் இடமும் பற்றுக்கோடும் யாண்டோ பெறுவதெனின்) கடப்பாடு அறிர்த புணரியலான்-அதன் புணர்ச்சிமுறைமை அறி யும் குற்றியலுகரப்புணரியலின்கண்ணே . "இடைப்படினும் குறுகும்' என மொழிமாற்றி உமைக்க, அக்குற்றியலுகரம் புணரியலுள் " வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வருவழித், தொல்லை யியற்கை நிலையலு முரித்தே (குற்றியலுகரப் புணரியல்-ச) என்பதனுள் வல் லொற்றுத்தொடர்மொழியும் வல்லெழுத்து வருவழியும் இடம். அவ்வல்லொற் றுத்தொடர்மொழியீற்று வல்லெழுத்துப் பற்றுக்கோடு, உ-ம். செக்குக்கணை, சுக்குக்கோடு என வரும், 'இடன்' என்றதனான், இக்குறுக்கம் சிறுபான்மை என் றுணர்க. (ஆர், ஏ என்ப ன அசைகள், 'புணரியலான்' என்பது வேற்றுமை மயக்கம். அகரம் சாரியை.) (ச) கூஅ, குறிய தன் முன்ன 'சாய்தப் புள்ளி உயிரொடு புணர்ந் தலல் லாறன் மிசைத்தே, . இஃது, ஒருமொழி ஆய்தம் வருமாறு உணர்த்து ஓல் துரலிற்று. இ-ள் :- ஆய்தப் புள்ளி-ஆய்தமாகிய புள்ளி, குறியதன் முன்னர் குற்றெழுத் இன் முன்னர், உயிரொடு புணர்ந்த வல் ஆறன் மிசைத்து-உயிரொடு புணர்ந்த வல் லெழுத்து ஆதன் மேலது. உ-ம். எஃகு, கஃசு என வரும். குறியதன் முன்னரும் வல்லெழுத்துமிசையும் இடம். இஃது உயிரன்மையின், இதற்குப் பற்றுக்கோடு என்பதில்லை. கஃறீது என்பதனை மெய்பிறிதாகிய புணர் ச்சி (புணரியல்-எ) என்ப வாகவின், ' புள்ளி' என்றதனான் ஆய்தத்தை மெய்ப் பாற்படுத்துக்கொள்க, ஈண்டும் உயிரென்றது, மேல் 'ஆய்தத்தொடர் மொழி' (குற்றியலுகரப் புணரியல்-க) என்பேதலின் பெரும்பான்மையும் குற்றியலுகரத் தினை, வெஃகாமை முதலிய பிற உயிர் வாவு சிறுபான்மை யெனக்கொன்க, (5)