இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
38
[எழுத்ததிகாரம்
களோடும் பன்னிரண்டுயிர்களும் தனித்தனி கூடிவர உயிர்மெய் எழுத்துக்கள் இருநூற்றுப்பதினாறாகின்றன.
இவ்வுயிர்மெய்யெழுத்துக்கள் க,கா என உச்சரிக்கப்படும்.இவற்றுள் உயிர் மெய்க்குற்றெழுத்துக்கள் மட்டும் உயிர்க் குற்றெழுத்துக்கள்போலக் கரம், காரம் என்ற சாரியை பெற்றுக் ககரம், ககாரம் என்றும் உச்சரிக்கப்படும்.உயிர்மெய்நெட்டெழுத்துக்கள் சாரியை பெறு; ஆதலால் கா, கீ என்பன போல உச்சரிக்க வேண்டுமேயன்றிக் காகாரம்; கீகாரம் என்பன போல உச்சரிக்கக்கூடாது. தனி மெய்யும் தனிநெடிலும் சாரியை பெறுமாதலினால் உயிர்மெய் நெடிலைச் சில வேளைகளில் தனித்தனிபிரித்துக் ககர ஆகாரம், ககர ஈகாரம் என்பனபோல உச்சரிக்கலாம்.
12. குற்றியலுகரம்.-குற்றியலுகரம் தனி நெட்டெழுத்தையாவது தனிக்கு-