உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

204 ஆழ்வார்கள் கால நிலை என்று இப்பல்லவரையே பேரரசர்களாக இப்பெரியார் வேறிடங்களிற் பாடுதலுங் காண்க. இங்ஙனம் பெருவேந்தரன்றி அவர்க்கடங்கியிருந்த சிற்றரசரும் ஆழ்வார்காலத்தில் திருமாலடியராவிருந்தவரென்றே தெரிகின்றனர். மலையமான்கள் தம் திருநெடுந்தாண்டகத்து 7-ஆம் பாசுரத்தில்" விந்தமேய, கற்புடைய மடக்கன்னி காவல் பூண்ட கடிபொழில்சூழ் நெடுமறுகிற் கமலவேலிப் பொற்புடைய மலையரையன் பணியநின்ற பூங்கோவ லூர்தொழுதும் போது நெஞ்சே " எனத் திருக்கோவலூர்த் திருமாலிடம் அந்நகரத் தலைவனாகிய மலையமான் கொண்டிருந்த பத்திமையை இவ்வாழ்வார் சிறப்பித்துக் கூறுதல் காண்க. இப்பாசுரத்துள் 'மலையரையன்' என்பது மலைய மான்களைக் குறிக்கும் சாதியொருமை என்று ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை பொருளெழுதியிருத்தல் அறியத்தக்கது. திருமுடிக்காரி முதலாய பழைய மலைய மான்களுக்குத் திருக்கோவலூர் தலைமைநகரமாக விளங் கிய செய்தி சங்க நூல்களால் அறிஞர் நன்கறிந்ததே. 7, 8-ம் நூற்றாண்டுகளில் இம்மலையமான்கள் பல்லவர் கீழ்ச் சிற்றரசராயிருந்தவர், வைணவ பக்தர்கள் இவ்வாறு பல்லவர்க்குக் கீழ்ப்பட்டவர்களும் படாத களுமாள தமிழரச ரெல்லாம், தங்காலமொன்றில் 1. மலையமானவர்க்கு' என்று அச்சுப்பதிப்பிதல் வறாகக் காணப்படுவது, 'மலையமான்களுக்கு' என்று திருத்திக் கொள்ளுதற் குரியது.