2
இலக்கிய தீபம்
இலக்கிய தீபம் பட்டதே. இதனோடு முற்றும் வேறுபட்டது சாஸ்திரம். இது தோன்றும் முறையும், வெளியாகும் முறையும், இதன் நோக்கமும் கலைக்குரியவற்றினின்றும் பெரிதும் வேறு பட்டவையாகும். 'கலை' என்று கூறப்படுவதற்கு அழகு - உணர்ச்சியும் இன்புறுத்தும் நோக்கமும் இன்றியமையாதவை. சாஸ்திரம்' என்று கூறப்படுவதற்கு இவ்விரண்டும் இன்றியமையாதன வல்ல, அறிவிற்குரிய விஷயங்களைத் தருதலே முக்கிய நோக்கமாகும். ஒரு மாளிகைக்கு இரண்டுவகையான படங்களை வரைதல் கூடும். ஒன்று ஓவியப் புலவன் தீட்டும் மாளிகைச் சித்திரம் ; இன்னொன்று மாளிகையமைக்கும் கொற்றன் (Architect) வரைந்து கொள்ளும் அமைப்புப் படம் (Plan). சித்திரத்திற்கும் அமைப்புப் படத்திற்கும் உள்ள வேறுபாடு கலைக்கும் சாஸ்திரத்திற்கும் உண்டு. கம்ப ராமாயணத்தை எடுத்துக்கொள்வோம். இது ஒரு கலைக்காவியம். இதிலே, அழகு - உணர்ச்சி ததும்பு கிறதா ? காவிய இன்பம் சிறந்தோங்குகிறதா? என்ற கேள்விகளே எழும். இதனோடு தொல்காப்பியத்தை ஒப் பிடுவோம். இப் பெரு நூல் பற்றி, தமிழ் மொழியின் உண்மையியல்பை இது சரியாகத் தவறின்றித் தெரிவிக் கிறதா? என்ற கேள்விதான் உண்டாகும். இது ஒரு சாஸ்திரம். உள்ளத்தை உணர்ச்சி வழியில் இயக்குவது கலை என்றும், மக்களுக்கு அறிவுப் பொருள்களைக் கற்பிப்பது சாஸ்திரம் என்றும் ஆசிரியர் டிக்வின்ஸி கூறியுள்ளார். இவர் கூறியுள்ள தன் திரண்ட கருத்து வருமாறு : இலக்கியம் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது (கலை) உள்ளத்தை இயக்கும் ஆற்றல் படைத்துள்ளது. பிற எல்லாம் (சாஸ்திரம்) அறிவுப் பொருள்களைப் பரப்புவது. எழுதப்படுவன எல்லாம் இலக்கியம் என்று பொதுவாகத்