உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109

________________

ஐந்தாண்டுகள் சென்றன. பாரத நாட்டிலுள்ள பல - சிறு தேயத்தாரும் சோழ நாட்டுக்கு வந்து, ஏகாதி பதியாகிய கரிகாற் பெருவளத்தானுக்குத் திறை யளந்து சென்றனர். காவிரியாறு தன் வெள்ளப் பெருக்கால் நிலங்கட்குக் கேடு விளைக்கா வண்ணம், மலை நிகராக இரு. புறமும் கரையமைக்கப் பெற்று, அவற்றுள் அடங்கி ஒடுவதாயிற்று. நதி பாயும் வழியில் உள்ள ஒவ்வொரு கிராமத்தாரும் காவிரிக் கரை யமைக்கும் முயற்சியில் தங்கள் தங்களால் இயன்ற உதவி புரிந்தனர். பணியா ளர் தம் பணியை நிறைவேற்றி விடை பெறும் காலம் வரையிற் குடும்பத்தோடு அரசினரால் ஆதரிக்கப் பட்ட னர். புகார் நகரமும் பெரியார்கள் வேண்டிக்கொண்ட வாறு அமைக்கப் பெற்றது. அங்குப் பழமையும் புது மையும் ஒன்றோடொன்றிணைந்து அழகொடு விளங்கின. தெய்வச் சிற்பிகளால் இயன்றவையோ என்று உலகத் தார் மதிக்கத் தக்க உன்ன தமான கோபுரங்களையுடைய ஆலயங்கள் பல அமைந்தன. மருவூர்ப்பாக்கத்திலே நடு நாயகமாய் அரசர் பிரானுக்கென ஒரு பெரிய அரண்மனை அமைந்தது. அதனைச் சுற்றிச் சூரியனைச் சுற்றிய கிரகங் கள்போன்று பலநாட்டரசரும் தத்தமக்கெனச் சிறு சிறு மாளிகைகள் அமைத்துக்கொண்டனர். கடற்கரை