உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்ணாதுரை

19

"ஐயையோ! அடுக்காதுங்க இந்தப் பாவம்! நீங்க பூலோகச் சாமி குலம் நான் பூலோக பாவி குலம். என் மேலே இச்சை வைப்பது கேவலம்"

"எவன் சொன்னான் இந்தப் பிச்சைப் பேச்சை! குலமும் கோத்திரமும் குப்பை! குலாவிட ஏற்றவளே எனக்குத் தேவை"

“நான் பு.........."

ஆம்! காட்டிலே கண்டான் ஒரு மாதை! அவள் இழிகுலம் என்று மதவாதிகளால் ஒதுக்கி வைக்கப் பட்ட வகுப்பு. அவளை அழைத்தான்; மறுத்தால் விடவா செய்வான்? அவனோ காமுகன். இடமோ அடவி, அணைத்தான்; அணுச்சஞ்சலமேலும் இல்லாத இடம் சென்றான். புலைச்சி புலைச்சியாமே இப்போது .......... என்று பிறகு கொஞ்சிடாமல் அவன்தான் இருந்திருப்பானா? அவனுடைய அணைப்பைப் பெற்ற பிறகு அந்த மாதுதான் "நீயும் நானும் ஜோடி விளையாடுவோம் வா கூடி" என்று பாடாமல் இருந்திருப்பாளா? நாட்டிலே அவன் காமுகனாக இருக்கவே காடு போ என்றான் காவலன்! காடு அவனுக்கு விபச்சார வீடாயிற்று. விட்டானில்லை தன் பழைய வேலையை. பரமன் என்ன செய்தார்? என்ன செய்தாரா? என்ன செய்ய முடியும்.

"எப்படியோ நம்மிருவருக்குள் சம்பந்தம் ஏற்பட்டு விட்டது. இன்பமாக இருந்தோம். கண்ணாளா! இந்த வாழ்வு இதோ முடிகிறது! நான் சாகிறேன்...... ஆம்! இனி நான் பிழைக்க முடியாது" என்று மரணப் படுக்கையில் கிடந்து குளறினாள். காட்டிலே கிடைத்த