இருவகை இலக்கியம் தொகுத்து வழங்குகிறோம், இவற்றிலே இரண்டு இயல்பு களைக் காணலாம். அவ்விரண்டு இயல்புகளும் கலந்து தோன்றுதல் காணப்படினும், தனித்தனியாகப் பிரித்து உணர்தற்கும் இவை இடந்தருகின்றன. ஏனென்றால், இவற்றில் ஒன்று மற்றொன்றோடு சிறிதும் இணங்காதபடி அதனைத் தூரத்தே அகற்றி நிறுத்த முயல்கிறது. இவற்றுள் ஒன்றை அறிவிலக்கியம் (Literature of Knowledge) என்றும், மற்றொன்றை ஆற்றல் - இலக்கியம் (Literature -of Power) என்றும் வழங்கலாம். அறிவிலக்கியம் அறிவுப் பொருள்களைத் தர முயல்கிறது ; ஆற்றல் - இலக்கியம் உள்ளத்தை ஊக்குவிக்க முயல்கிறது. முன்னது புலனறிவை விருத்தி செய்வது; பின்னது, உணர்ச்சியின் மூலமாக, 'போதத்தைத் துணையாகக் கொண்டு, ஆன்மாவையே இயக்குகிறது. அறிவிலக்கியத்தை மதிப்பிடுவதற்கு, அதிற் கூறப் பட்டன சரியா? உண்மையா ? தருக்க நெறியோடு பொருந்துமா?" என்று கோக்குதல் வேண்டும். ஆற்றல் - இலக்கியத்தை மதிப்பிடுவதற்கு, கலை யுணர்ச்சியைத் திருப்தி செய்கிறதா? அழகுணர்ச்சி இருக்கிறதா ? இன்பம் விளைவிக்கிறதா ?" என நோக்குதல் வேண்டும். அனால் இருவகை இலக்கிய இயல்புகளும் ஒரு சேரக் கலந்துவரும் சிறந்த இலக்கியங்களும் உள்ளன. திருவள்ளு வரது திருக்குறள் இவ்வகைக் கலப்பு இலக்கியங்களுக்கு ஒரு சிறந்த உதாரணமாம்.
பக்கம்:இலக்கிய தீபம்.pdf/12
Appearance