உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணாதுரை

37

செய்யாவிட்டால், இமையவனை மணந்தவளுக்கு இழுக்கு மேரிடும் என்று புராணப் புளுகர்கள் கருதினர் போலும்!

அழுக்கன், பார்வதியின் வீட்டு வாயலிலே நிற்கையில், பரமசிவனார் உள்ளே நுழைய வந்தாராம் அவருக்கு என்ன அவசரமோ பாவம்! தனயன் தந்தையைத் தடுக்க, தந்தை கோபித்து வாள்கொண்டு பிள்ளையின் தலையை வீசிவிட்டு, உள்ளே நுழைந்தார். மகனின் கழுத்து பனங்காய் போலும்! ஒரே வெட்டு மகன் தலை உருண்டது.

கருணாமூர்த்தியின் காரியத்தைப் பாரீர்! மகன், மாதா நீராடுகிறாள் சற்றுப்பொறும் என்று கூறிய தைக்கேட்டுக் கோபம் பொங்கிக் கொடுவாள் கொண்டு சிரச்சேதம் செய்கிறார் சிவனார். எவ்வளவு நீதி, எத்தகையநாகரிகம். விஷயமறிந்த பார்வதி, “ஐயோ மகனே! அழுக்கனே, பாலகா?" என்று அலறி அழ, அரன்கண்டு, செத்தால் என்ன, இதோ பிழைக்க வைக்கிறேன் என்று தேற்றி வெளியே வந்து பார்க்க, உடல் மட்டும் இருந்ததாம். தலையைக் காணோமாம்! செத்தவனை மீட்கும் சக்திபெற்ற சிவனாருக்கு மறைந்த தலையைக் கண்டுப்பிடிக்க முடியாது போன காரணம் என்னவோ? வழியே ஒரு யானை சென்றதாம். அதன் தலையை வெட்டி, உருண்டு கிடந்த உடலிலே ஒட்ட வைத்து பிள்ளையாரைப் பிழைக்கச் செய்ய, யானை முகத்தோடு கணபதி எழுந்தாராம்.

இந்த வரலாற்று மூலமாகலாவது ஏதேனும்கடவுட் தன்மை கடவுட் கொள்கை, மனிதத்தன்மை, தூய்மை