சங்க இலக்கியத் தாவரங்கள்/077-150
Appearance
ஊசி முல்லை
ஜாஸ்மினம் கஸ்பிடேட்டம்
(Jasminum cuspidatum,Rottl.)
ஊசிமுல்லைப் பூ என்பது முல்லைப் பூவைப் போன்றதாயினும் இதன் அரும்பு மெல்லியதாகவும் நீண்டும் இருக்கும். ஏனைய இயல்புகள் எல்லாம் முல்லைக் கொடியைப் பெரிதும் ஒத்தவை. சங்க இலக்கியத்தில் ஊசி முல்லை என்ற பெயர் இல்லையாயினும் உலக வழக்கில் ‘ஊசி முல்லைப்பூ’ உள்ளது.
உலக வழக்குப் பெயர் | : | ஊசி முல்லை |
தாவரக் குடும்பம் | : | ஒலியேசி |
தாவரப் பேரினப் பெயர் | : | ஜாஸ்மினம் |
தாவரச்சிற்றினப்பெயர் | : | கஸ்பிடேட்டம் |
தாவரப் பெயர் | : | ஜாஸ்மினம் கஸ்பிடேட்டம் (Jasminum cuspidatum,Rottl.) |
ஊசி முல்லை தாவர அறிவியல்
இது முல்லையினக் குடும்பத்தைச் சார்ந்தது. இதனுடைய அரும்பைக் கொண்டுதான் இதனை முல்லையினின்றும் வேறு படுத்தி அறியக் கூடும். ஏனைய இயல்புகள் எல்லாம் முல்லையைப் போன்றுள்ளன. ஆகவே, இது முல்லையின் வகை எனப்படும்.
இயல்பு | : | ஏறு கொடி, மெல்லிய கம்பி போன்ற தண்டினை உடையது. |
இலை | : | கூட்டிலை, எதிரடுக்கில் சிற்றிலைகள் நீள முடடை வடிவானவை. |
ஊசி முல்லை
(Jasminum cuspidatum)
சிற்றிலை | : | அடியில் உள்ள இரண்டும் நீள அகலம் 20 X 10 மி. மீ. நுனியில் உள்ள சிற்றிலை, 55-60 X 28-30 மி. மீ. |
வடிவம் | : | நடுவில் முட்டை வடிவம். அடியும், நுனியும் வர, வரக் குறுகியிருக்கும். |
அரும்பு | : | :3-4 செ. மீ. நீளம். 1-2.5 மி. மீ. பருமன; மெல்லியது; நீண்டது. |
மலர் | : | முல்லை போன்று அடியில் குழல் வடிவாயும், மேலே 4-5 இதழ்கள் விரிந்தும் இருக்கும். |
ஏனைய இயல்புகள் முல்லையைப் போன்றவை.
ஊசி முல்லை
(Jasminum cuspidatum)