நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்/கண்ணிநுண்சிறுத்தாம்பு
Appearance
ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
கண்ணிநுண்சிறுத்தாம்புத் தனியன்கள்
[தொகு]ஸ்ரீமந் நாதமுனிகள் அருளிச்செய்தவை
- அவிதிதவிஷயாந்தரச்சடாரே
- ருபநிஷதாமுபகாநமாத்ரபோக:
- அபிசகுணவஸாத் ததேகஸேஷீ
- மதுரகவிர் ஹ்ருதயே மமாவிரஸ்து.
- வேறொன்றும் நானறியேன் வேதம் தமிழ்செய்த,
- மாறன் சடகோபன் வண்குருகூர்- ஏறு,எங்கள்
- வாழ்வாமென் றேத்தும் மதுரகவி யார்எம்மை
- ஆள்வார் அவரே யரண்.
கண்ணிநுண்சிறுத்தாம்பு
[தொகு]- கண்ணி நுண்சிறுத் தாம்பினால் கட்டுண்ணப்
- பண்ணி யபெரு மாயன்,என் னப்பனில்,
- நண்ணித் தென்குரு கூர்நம்பி யென்றக்கால்,
- அண்ணிக் கும்அமு தூறுமென் நாவுக்கே. 1
- நாவி னால்நவிற் றின்ப மெய்தினேன்,
- மேவி னேனவன் பொன்னடி மெய்ம்மையே,
- தேவு மற்றறி யேன்குரு கூர்நம்பி,
- பாவி னின்னிசை பாடித் திரிவனே. 2
- திரிதந் தாகிலும் தேவ பிரானுடை,
- கரிய கோலத் திருவுருக் காண்பன்நான்,
- பெரிய வண்குரு கூர்நகர் நம்பிக்காள்
- உரிய னாய்,அடி யேன்பெற்ற நன்மையே. 3
- நன்மை யால்மிக்க நான்மறை யாளர்கள்,
- புன்மை யாகக் கருதுவ ராதலின்,
- அன்னை யாயத்த னாயென்னை யாண்டிடும்
- தன்மை யான்,சட கோபனென் நம்பியே. 4
- நம்பி னேன்பிறர் நன்பொருள் தன்னையும்,
- நம்பி னேன்மட வாரையும் முன்னெல்லாம்,
- செம்பொன் மாடத் திருக்குரு கூர்நம்பிக்
- கன்ப னாய்,அடி யேஞ்சதிர்த் தேனின்றே.
- இன்று தொட்டு மெழுமையு மெம்பிரான்,
- நின்று தன்புக ழேத்த வருளினான்,
- குன்ற மாடத் திருக்கு கூர்நம்பி,
- என்று மென்னை யிகழ்விலன் காண்மினே. 6
- கண்டு கொண்டென்னைக் காரிமா றப்பிரான்,
- பண்டை வல்வினை பாற்றி யருளினான்,
- எண்டி சையு மறிய இயம்புகேன்,
- ஒண்ட மிழ்ச்சட கோப னருளையே. 7
- அருள்கொண் டாடு மடியவ ரின்புற,
- அருளி னானவ் வருமறை யின்பொருள்,
- அருள்கொண் டாயிர மின்தமிழ் பாடினான்,
- அருள்கண் டீரிவ் வுலகினில் மிக்கதே. 8
- மிக்க வேதியர் வேதத்தி னுட்பொருள்
- நிற்கப் பாடியென் நெஞ்சுள் நிறுத்தினான்,
- தக்க சீர்ச்சட கோபனென் நம்பிக்கு,ஆட்
- புக்க காத லடிமைப் பயனன்றே? 9
- பயனன் றாகிலும் பாங்கல ராகிலும்
- செயல்நன் றாகத் திருத்திப் பணிகொள்வான்,
- குயில்நின் றார்ப்பொழில் சூழ்குரு கூர்நம்பி,
- முயல்கின் றேனுன்றன் மொய்கழற் கன்பையே.
- அன்பன் தன்னை யடைந்தவர் கட்கெல்லாம்
- அன்பன், தென்குரு கூர்நகர் நம்பிக்கு,
- அன்ப னாய்மது ரகவி சொன்னசொல்
- நம்பு வார்ப்பதி, வைகுந்தம் காண்மினே. 11
ஸ்ரீ மதுகவியாழ்வார் திருவடிகளே சரணம்.