பக்கம்:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நினைப்பும் காரியசித்தியும்.

ஒரு மனிதன் செய்து முடிப்பனவும், செய்து மூடிக்கத் தவறுவனவும், அவனது நினைப்பின் நேரான பலன்கள். சமநிலை இழத்தலே சர்வநாசம் எனக் கொள்ளத்தக்கதாக நியாயமான நியதியேற்பட்டு நடக்கும் பிரபஞ்சத்தில், அவனவன் செய்கைக்கு அவனவன் பொறுப்பாளி யென்பது தீர்மானம். ஒருவனது பலஹீனமும் பலமும், சுத்தமும் அசுத்தமும், அவனால் உண்டானவையே ; மற்றொருவனால்யல்ல. ஆகவே அவைகளை மாற்றக்கூடியவன் அவனே ; மற்றொருவனல்லன். அவனது நிலைமையும் அவன் தேடிக்கொண்டதே; மற்றொருவன் தேடியதன்று. அவனது துன்பமும் இன்பமும் அகத்திலிருந்தே வெளி வந்துத்தவை. அவன் எங்ஙனம் நினைக்கிறானோ அங்ஙனமே இருக்கிறான் ; அவன் எங்ஙனம் நினைத்துவருகிறானோ அங்ஙனமே இருந்துகொண்டிருக்கிறான்.

ஒரு பலஹீனன் ஒரு பலவானிடத்தில் உதவிபெற விரும்பினாலன்றி, பலவான் அவனுக்கு உதவிசெய்தல் முடியாது. அப்படி உதவி பெற்றாலும், பலஹீனன் தானாகவே பலவானாதல் வேண்டும். அவன் மற்றொருவனிடத்தில் கண்டதிசயிக்கும் பலத்தைத்தன் சொந்த முயற்சியால் அடையவேண்டும் : தன்னிலைமையைத்தானே மாற்றிக்கொள்வதன்றி வேறெவனும் மாற்றுவது முடியாது.

51