இணையற்ற வீரன் 19 னோ? அங்கு அவனுக்கு என்ன இன்னல் உண் டாகிறதோ! என் நெஞ்சம் தாளவில்லையே! எந்தப் பகை அரசன் அவனுக்கு தேடுகிறானோ! இன்னல் வனசஞ்சாரம் செய்யும்பொழுது கள்ளர் முதலியவர்களால் ஏதாவது இடையூறு ஏற் வடுகிறதோ! சில சமயம் எந்தப் பெண் மாயவலை யிற் சிக்கி அதனால் துன்பத்தை அடைகிறானோ! துஷ்ட விலங்குகளால் என்ன ஆபத்தோ! பூகம்பம், இடி, கானாறு, மலையின் சரிவு, எரிமலை, கடல் முதலியவற்றால் ஏற்படும் உற்பாதங்கட்கு ஆளாகின் றானோ! அந்தோ! நாதா! என் இதயம் பிளந்து விடும்போ லிருக்கிறதே! ரணியன்:-- பெண்ணரசியே ! நீ இப்போது கூறிய வற்றால் கலங்காத என் மனமும் சற்றுக் கலங்கு கிறது. என் மைந்தனைப்பற்றிய கவலையைத் தூண்டி விட்டது. பூமி அதிர்ந்தாலும் நம் குமா ரன் அதிலிருந்து தப்பக்கூடும். எரிமலைக்கிடையி லிருந்தும் வீர மைந்தன் தப்பக்கூடும். கானாறு களின் சுழியலிற்கிடையிலிருந்தும் இளங்காளை மீள முடியும். எந் நாட்டுத் தமிழர்கள் பகையும் அவனுக்குப் பெரிதன்று. ஆயினும், கண்மணி ! எங்கேயோ இருந்து இங்குப் பிழைக்கவந்த ஆரியர் களின் சூழ்ச்சிக்கு நம் மைந்தன் ஆளாகாதிருந்தால் போதும்.- யாகமென்று சாக்குச் சொல்லி விலங்கு களையும் பறவைகளையும் நெருப்பிற் பொசுக்கி உண்ணும் ஆரியர்கள் - ஒரு பெண்ணைப் பலர் புணர்ச்சி செய்து மகிழும் ஆரியர்கள் - சோமரசம் என்னும் ஒருவகைக் கள்ளைக் குடித்து வெறிக்கும்
பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/38
Appearance