பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15


படச் செய்யவும் சுருங்கச் சொன்னால் மனிதனுக்கு உரியது எதுவோ அதைக் கொடுக்க ஒரு மனிதன் என்ற கௌரவத்தைக் கொடுக்கும் பொதுவான--சிறப்பான பணிக்காகப் பல்வேறு நாடுகளின் தனிப்பட்ட ஆற்றலை ஒன்று சேர்க்கும் பொருட்டுப் போரை ஒழித்து அமைதியை நிலைநாட்டி, நட்பையும் தோழமையையும் உருவாக்கி வளர்த்து ஒருவருக்கொருவர் உணர்ந்து மதித்து, நடக்கக்கூடிய வகையில் உலகையே மேலும் சிறப்புறச் செய்யும் புனிதமான பணியில் பங்கு வகிப்பவை என்று உலகுக்குப் பறைசாற்றுகின்றன. மனிதனை மிருகமாக்குவதும், சோலை வளங்களைப் பாலைவனங்களாக்குவதும், நகரங்களைச் சிதைவுகளாக்குவதும், சுபிட்சத்தை வறுமையாக்குவதும் ஆக்கிரமிப்பாளரைத் தவிர வேறு யாராகத்தான் இருக்க முடியும்? இத்தகையதொரு ஆக்கிரமிப்பாளரைக் கண்டுபிடிப்பதுதான் ஐ. நா. வின் நோக்கம். ஏனென்றால், அவன் தனது உருவத்தையும், சொல்லையும் மாற்றக் கூடிய கபடமானவன்; அவனைக் கண்டுபிடித்து, வெளிக் கொணர்ந்து மற்றவர்களின் நல்லெண்ணத்தால் கிடைக்கும் ஆற்றலைச் சேர்ந்து அவனை இந்த முயற்சியிலிருந்து தடுக்கும் பொருட்டு ஐ. நா. விழிப்புடன் இருக்க வேண்டும். இது எளிதான காரியமல்ல. அபாயங்கள் பல நிறைந்த ஒரு வேலை. ஆற்றலும் தியாகமும் தேவைப்படும் ஒரு வேலை இது. தோல்விகளும். கண்டனமும், குற்றச்சாட்டுகளும் இருந்தும்கூட இந்தப் போராட்டத்தை ஏற்று நடத்த வேண்டிய படைவீரர்கள் இருக்கிறார்கள் என்பதை இதன் 22 ஆண்டுக்கால வாழ்க்கை தெளிவாக்குகிறது. நல்லுள்ளங்களுக்கு இது நம்பிக்கை அளித்திருக்கிறது. காலஞ்சென்ற போப் ஜான், உள்ளத்தில் உவகையுடன் கூறியிருக்கிறார். ஐ. நா. ஸ்தாபனத்தின் பணிகளில் பிரம்மாண்டமான அளவுக்கும் அவற்றின் புனிதத் தன்மைக்கும் ஏற்ப இந்த ஸ்தாபனத்தின் அமைப்பும் அது பின்பற்றும் வழிமுறைகளும் வளர வேண்டும் என்பது தான் நமது மனப்பூர்வமான விருப்பம். ஒவ்வொரு மனிதனும் மனிதன் என்ற முறையில் தனக்குள்ள கௌரவத்தி-