பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19


இப்போது உணர்ந்துள்ளன. மற்ற நாடுகளுடன்தான் வாழ முடியும்; மனித சகோதர உணர்வு எனும் நன்னெறியை ஏற்று அதன்படி நடந்தால்தான் இது சாத்தியமாகும்.

ஐ. நா. ஸ்தாபனம் பலவீனமாக இருந்துங்கூடப் பல பகுதிகளில் போரைத் தடுத்திருக்கிறது. தகராறுகளைப் பரவவிடாமல் தடுத்திருக்கிறது. அமைதியைத் துரிதமாக நிலை நாட்டியிருக்கிறது. ஆத்திரமடைந்த நாடுகளுக்கு ஆறுதல் சொல்லி அமைதியூட்டுவதற்காகக் காவல் நிலைகளையும், திட்டங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையேயும்; ஸீரியாவுக்கும் ஜார்டனுக்கும் இடையேயும் ஐ.நா. அனுமதிக் கண்காணிப்பு ஸ்தாபனம் 1949 ஆம் ஆண்டிலிருந்து கண்தாணித்து. வருகிறது. சைப்ரஸ். வாழ் கிரேக்கர்களுக்கும், சைப்ரஸ் வாழ் துருக்கியர்களுக்கும் இடையே 1964 ஆம் ஆண்டிலிருந்தே 4,000 பேர் கொண்ட அனுமதிப் பராமரிப்புப்படை சமாதானத்தை நிலைநாட்டி வருகிறது. காஷ்மீரில் போர் நிறுத்தத்தோடு நெடுகிலும் ராணுவப் பார்வையாளர் குழு இருக்கிறது.

இவ்வாறாக இந்த ஸ்தாபனம் படிப்படியாகத் தனது மதிப்பை நிரூபித்து வருவதையும், விவேகமுள்ள எல்லாருடைய விசுவாசத்தை ஈர்த்து வருவதையும் காணலாம். உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் இயங்கிவரும் ஐ. நா.ஸ்தாபனம் சமாதான லட்சியத்துக்காகத் தனது அளவற்ற திறமைகளையும் ஆதார வசதிகளையும் பயன்படுத்துவதற்கு மனிதன் வகுத்துள்ள மிகச் சிறந்த சர்வ தேச--ஒத்துழைப்பு ஸ்தாபனமாகும் என்பதைக் காலம் எடுத்துக் காட்டியிருக்கிறது.

இந்த ஸ்தாபனத்தின் தடுப்புச் சக்தியானது நமது ஆதரவைப் பெற்றுவிட்டிருக்கிறது. சுகாதாரம், கல்வி, மனித உரிமைகள், சுதந்திரம், ஆகியவற்றுக்கான பல்வேறு பிரிவுகள் மூலம் இந்த ஸ்தாபனத்துக்குள்ள குணப்படுத்தும் சக்தியானது நமது அன்புக்குப் பாத்திரமாகி விட்டிருக்கிறது.