உள்ளடக்கத்துக்குச் செல்

அறிவியல் திருவள்ளுவம்/அணிந்துரை

விக்கிமூலம் இலிருந்து
சென்னைப் பல்கலைக்கழகத்
துணைவேந்தர்
மாண்பமை முனைவர் ப.க. பொன்னுசாமி அவர்களின்
அணிந்துரை

காலத்தை வென்று வாழ்வன நல்ல இலக்கியங்கள். அந்தச் சிறப்பிற்கு ஓர் இலக்கியம் தகுதிபெற வேண்டுமானால் அது உண்மையைப் பேச வேண்டும். வளரும் அறிவியல் அந்த உண்மையைப் பகுதிகளாக அறிந்து நமக்குத் தெளிவுபடுத்தும். அப்படி அறிவியலால் அடையாளம் காணப்படும் உண்மையின் பகுதிகள், ஏற்கனமே உருவாக்கப் பட்டுள்ள இலக்கியங்களுள் பொதிந்துள்ளன என்பதை உணர்ந்து, அந்தவாழும் இலக்கியங்களை ஆய்ந்தும், போற்றியும், பின்பற்றியும் மனித இன நன்மை பெறுகின்றது. அப்படிப் பெருமைபெறு இலக்கியங்களில், திருக்குறள் முதன்மையானது.

நல்லறிஞர்கள் பலரால், திருக்குறள் - திருவள்ளுவம் - நயம், சுவை, பொருள், இலக்கப்கோப்பு உள்ளிட்ட - பலவித ஆய்வுகளுக்குத் தொடர்ந்து உட்படுத்தப்பட்டு வருகின்றது. இருப்பினும், இலக்கியத்தின் இலக்கும் "உண்மை" என்பதாலும், அவ்வுண்மை அறிவியல் பகுதிகளாக அவ்வப்போது வெளிக்கொணரப் பட்டுக் கொண்டிருப்பதாலும், வாழும் இலக்கியத்தையும் வளரும் அறிவியலையும் இணைந்து ஆராய்வதும், ஆராய்ந்து இணைப்பதும் தேவையாகின்றது.

அந்தத் தேவையை உணர்ந்து, கவிஞர்கோ கோவை, இளஞ்சேரனார் நூல்கள் படைக்க முனைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கின்றது. அவருடைய முனைப்பில் இப்போது உருபெற்றிருக்கும் அறிவியல் திருவள்ளுவம்' என்கிற ஆய்வு நூலைப் படித்து மிக மகிழ்ந்தேன். அரசாண்மை யில், வானவியல், மருத்துவம், உளப்பகுப் பாய்வியல், பொருளாதாரம், வேளாண்மை யியல் உள்ளிட்ட பல்வேறுதுறைச் செயற்பாடுகளில் இன்றைய மனித இனம் கண்டறிந்துள்ளஸனவற்றைக் திருக்குறள் குறிப்புகளுடன் தக்கவாறு பொருத்தி ஆய்ந்திருப்பதைக் கண்டு வியக்கிறேன்.

தமிழர்தம் வளர்ச்சியின் தேவையறிந்து இந்நூலின் வாயிலாக, கவிஞர் இளஞ்சேரனார் திருக்குறளை ஒர் அறிவிய நூலாக அடையாளம் காட்டியுள்ளார். இந்தப் புதிய பார்வையின் அடிப்படையில் அவருடைல் ஆய்வுப்பணியும், எழுத்துப்பணியும் தொடர பயில்பவர் உலகம் அவருக்கு ஊக்கமளிக்க வேண்டும். அவருக்கு என் வாழ்த்துக்கள்.


சென்னை-600005
திசம்பர்-23, 1994

அன்பன்,
ப. க. பொன்னுசாமி