மேலாண்மை பொன்னுச்சாமி 211 கடைகளில் - மடங்களில்- வேலைத் தளங்களில்- டீக் கடையில் எங்கும் இதே பேச்சுத்தான். எல்லாச் சாதியி லேயும் இதே ரகப் பேச்சுகள். சாதி...சாதி... சாதி வெறி... பேச்சு பூராவும் ரத்தமாய் ஓடிப் பரவுகிற சாதிவெறி. ஒவ்வொரு சாதியிலும் வேலை மெனக்கெட்டு சாதி வெறியைத் தூண்டிவிடுகிற ஆட்கள். டென்சன் தணிந் தால்... அவதூறுகளைப் பரப்பி பரப்பி முறுக்கேற்றி விடுகிற விஷமிகள். துரும்புகளை தூணாக்குகிற குசும்புகள். ஆங்காங்கே தெருக்களில் வாய்ச்சத்தம். தேவமார்- நாடாக்கமார்களிடையே குதர்க்கமும் வெறுப்புமான வாயாடல்கள். வெக்கையான சத்தங்கள். உள்பதுங்கிக் கிடந்த சாதி வெறி, நாகரீக உடைகளைக் களைந்தெறிந்துவிட்டு... அம்மணமாக ஆட்டம் போட்டன. அன்பு, கருணை, பாசம், மனிதநேயம், தாட்சண்யம் எல்லாம் ஒதுக்கி வைக்கப்பட்டு...விஷமம், பகைமை, வெறுப்பு, குரோதம், ராட்சஸம் எல்லாம் முன்னுக்கு வந்தன. சகஜ வாழ்க்கை ஸ்தம்பித்தது. நாளுக்கு நாளாக மாறிவந்த மோசமான உணர்வுகள். விபரீதச் சம்பவங்கள்... ஒப்பந்தத்தை மீறிவிட்ட நாடார்களின் மீது, தேவர் களுக்குத் தார்மீகக் கோபம். 'நரித்தனம் செய்கிறார்கள்' என்கிற குற்றச்சாட்டு. கோபமும் குரோதமும் மனித முகங்களின் புன்னகைகளை அடகு வாங்கிக் கொண்டன. சாதி கடந்த நட்புகள், சோதனைக் களமாயிற்று. கிராமம், வளர்ந்து வந்த ஜனநாயகப் பண்புகளின் பல ஆண்டுகளை விழுங்கிப் பொய்யாக்கிவிட்டு... கட உந்த கால அநாகரீகங் களுக்குள் முகம் புதைத்து சுகம் கண்டது.
பக்கம்:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf/211
Appearance