உ
சிவமயம்
சிவசண்முக மெய்ஞ்ஞான தேசிகன் றிருவடிவாழ்க.
முகவுரை.
உலகத்தில் மக்களாகப் பிறந்தார் அடைய வேண்டிய பொருள்களுள் சிறந்தது வீடு. அவ்வீடு ஞானம் ஒன்றானே எய்தற்பாலது. ஞானத்தை வருவிப்பனவற்றுள் நூல் ஒன்று. நூல்கள் பல் வகைய. அவற்றுள் சிறந்தன மூன்று. தலைவன் ஒருவன் தன் அடிமைக்குணர்த்துமாறு விதிமுகத்தானுணர்த்துவது ஒன்று. நண்பன் ஒருவன் தனது நண்பனொருவனுக்குணர்த்துமாறு அன்பு முகத்தானுணர்த்துவது ஒன்று. விளங்கிழை மெல்லிய லொருத்தி தன் மகிணனுக் குணர்த்துமாறு காதன் முகத்தரனுணர்த்துவது மற்றொன்று. இம்மூன்று வகையுள் நடு நின்றதே இக்காலத்தில் மேலானதெனக்கருதத்தக்கது. இக்காலத்திற் பெரும்பாலார் தலைவர்களால் இடுக்கண் எய்துதல் கூடுமோ என்றெண்ணம் வருங்காலத்தும் ஊதியமில்லாதுபோமோ என்றெண்ணம் வருங்காலத்துமே தலைவர்கள் விதிக்குட்பட்டு நடக்கிறார்களென்பது நமதெண்ணம். தம் நிலையும் பிறர் நிலையுமுணர்ந்து கடமை அறிந்து ஒழுகுபவர்கள் சிலரே. காதல் முகத்தானுணர்த்துங்கால் அடங்கி நடப்பவர்கள் உண்டெனினும் அம் முறை உலக சிறு இன்பநுகர்ச்சிக்குக்கருவியே அன்றி வீடு அடைதற்குக்கருவியாகாது. இக்கலிநாளிலும் இருந்து வீடுபெறல் வேண்டுமெனும் நோக்கங்கொண்டயாம் அன்பு முகத்தானுணர்த்தும் புராண நூல்களைத்துணை கொள்ளவேண்டுவது இன்றி யமை யாததொன்றே. புராண நூல்கள் பழய கதைகளை யுணர்த்தும். இடம் பற்றியும் காலம் பற்றியும தெய்வம் பெரியார் ஆம் இவர் பற்றியும் பழய கதைகளைச் சொல்லும். இடம் பற்றிச்சொல்வனவற்றை ஸ்தல புராணம் என்பர். ஸ்தல புராணங்களுள் கூறப்படும் கதைகள் பாவம் செய்தார் பட்ட துன்பத்தை யுணர்த்து முகத்தால் பாவம் செய்யாமலிருத்தல் வேண்டும் என்பதனையும், புண்ணியம் செய்தார் பெற்ற இன்பத்தை யுணர்த்து முகத்தால் புண்ணியத்தைச் செய்தல் வேண்டும் என்ப தனையும், புண்ணியஞ்செய்தாரும் பாவஞ்செய்தாரும் இன்ப துன்பங்களைத்துய்த்துப் பிறந்திறந்துழல்வார் என்பதுணர்த்து முகத்தால் பாவஞ்செய்யாது, புண்ணியத்தைச்செய்து, அப்புண்ணி யத்தையும் இறைவனிடஞ்சேர்ப்பிப்பதானே பத்தியைப்பெறல் வேண்டுமென்பதனையும், அப்பத்தியையும் குருலிங்க ஜங்கமங்-