16
தாழ்வு மனப்பான்மை
திலிருந்தும் வேறு இயற்கைத் துன்பங்களிலிருந்தும் மனித இனம் தன்னைக் காத்துக்கொள்ளவும் சிறந்த வழியேற்பட்டது. இங்கு ஒரு விஷயத்தை நாம் தெரிந்து கொள்ளவேண்டும். சமூகம் என்பதை ஆட்லர் மக்கட்கூட்டம் என்ற பெயரால் குறிப்பிடுகிறார். இந்த மக்கட்கூட்டந்தான் பிரதானமானது என்றும் அவர் கூறுகிறார். ஆனால் அவர் அவ்வாறு கூறும்போது மக்கட் கூட்டம் என்பதற்கு அரசியலிலே சில நாடுகளில் வழங்கும் பொருளைத் தருவதில்லை. "மக்கட் கூட்டம் என்று குறிப்பிடும் போது நான் இன்றைய சமூகத்தை மனத்தில் வைத்துக் கொள்ளுவதில்லை; மத சம்பந்தமாக ஒன்று சேர்ந்த ஒரு மக்கள் தொகுதியையோ அல்லது அரசியல் சம்பந்தமாக ஒன்று சேர்ந்த ஒரு மக்கள் தொகுதியையோ நான் எண்ணுவதில்லை.நான் நினைக்கும் இலட்சிய மக்கட் கூட்டத்தில் மக்களினம் அனைத்தும் அடங்கியிருக்கும்; அதுவே பரிணாமத்தின் கடைசி வளர்ச்சி நிலையாகவு மிருக்கும்" என்று ஆட்லர் கூறுகிறார்.
இவ்விதமான மக்கட்கூட்டத்தின் ஒருமைப்பாட்டிலே ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இயல்பாகவே ஆர்வமிருக்கிறது என்பது ஆட்லர் கொள்கை. அவனுக்குள்ளே மக்கட் கூட்டத்தின் ஒருமையைப் பேணும் ஒரு வலிமையான உந்தல் இருக்கிறது. இந்த வகையில் அவன் பிறருடைய நலத்தைப் பேணும் இயல்பு உள்ளவனாகிறான். உளவியல் அறிஞர்களிற் பலர் கருதுவதுபோல மனிதன் தன்னலமே பேணுகிறவன் என்பதை ஆட்லர் ஏற்றுக் கொள்ளுவதில்லை.
ஆனால் மனிதன் தன்னிடமுள்ள குறைபாட்டை உணர ஆரம்பிக்கும்போது, மக்கட் கூட்டத்தின் ஒருமைப்