76
தற்கு முன்பு டிரைபஸ் பாரிஸ் பட்டணத்தில் அதிகாரியாய் அந்தஸ்துடன் வாழ்ந்தான் நாதியற்றவனாகி தீவிலே நலிகிறான் டிரைபஸ் பாரிஸ் நகைமுகம் காட்டும் நங்கையாகவே திகழ்ந்தது. டிரைபசின் கண்ணீர் கடல் நீருடன் நான் குற்றமற்றவன்! டிரைபஸ் கூறுகிறான் தீவில் ஆதாரம் எங்கே? நீ நிரபராதி என்பதற்கு ருஜூ எங்கே? என்று சட்டம் கேட்கிறது டிரைபஸ் தன் இருதயத்தின் தூய்மையை எடுத்துக்காட்டுகிறான். சட்டம் சிரித்துவிட்டு வேறு வேலையைக்கவனிக்கிறது நான் குற்றமற்றவன் என்று டிரைபஸ் கூறிக்கொண்டிருந்தான் தீவில் நாட்கள் மாதங்களாயின ஆண்டுகள் உருளத் தொடங்கின. டிரைபஸ் கந்தலாடையில் இருக்கிறான். கண்கள் குளமாகிப் பிறகு வறண்டுபோயின; கைகால்கள் எலும்புருவாயின; டிரைபஸ், நடைப் பிணமானான், ஈனக் குரலில் அப்போதும் கேட்ட வண்ணம் இருந்தான். 'நான் செய்த குற்றம் என்ன? என்று.
டிரைபஸ் செய்த குற்றம் என்ன? அவன் நன்றாகப் படித்தவன்--குற்றம்.
சலியாத உழைப்பாளி--குற்றம்.
உண்மையான சாட்சியங்கள் அவனுக்கெதிராகக் கிடைக்கவில்லை-- குற்றம்.
அவன் கலங்காதவன்--குற்றம்.
பாரிஸ் பட்டணத்திலே, ஒரு மாவீரன் கிளம்பினான், டிரைபஸ் செய்த குற்றங்களைக் கூற! இராணுவ இரகசியத்தை வெளியிட்டான் என்று குற்றம் சாட்டினார்களே. அது அல்ல அவன் செய்த குற்றம்; படித்தான், உழைத்தான், வஞ்சகருக்கு எதிராக வழக்கு மன்றத்திலே வலிவு