பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

85


தினார்! எங்கோ தீவில் எவனோ ஒருவன்படும் அவதியைக் துடைக்கத் தீட்டினார். இரவு இரண்டு--ஓயவில்லை; மூன்று--முடியவில்லை; நான்குபேனா வேலை செய்தவண்ணமிருக்கிறது. ஜோலாவின் மனைவி, விடியற்காலை பார்க்கும்போது, அறையில் விளக்கு எரிகிறது; ஜோலா எழுதுகிறார். மேஜை எல்லாம் தாள்கள். ஆவேசம் கொண்டவர்போல் ஜோலா இருந்தார்; "நீதி" தயாராகிவிட்டது.

🞸🞸🞸

"அரோரி" பத்திரிகைக் கூடத்திலே, நண்பர்களை வரச்சொல்லிவிட்டு, ஜோலா கிளம்பினார் அவர்களைக் காண.

பரட்டைத் தலையுடன், கசங்கிய உடையில், வேகமாக கடைவீதியில் ஜோலா சென்றபொழுது கோச்சு வண்டியில் இருந்த நீதிபதிக்கு ஜோலாவின் வேகம் கலக்கததை உண்டாக்கியது, விலைகூறிகொண்டிருந்த கடைக்காரன் ஜோலாவையே பார்த்தான். சிற்றுண்டி அருந்திகொண்டிருந்தவர்கள் ஜோலாவைக் கண்டதும் வாசற்படியில் வந்து நின்றனர். பத்திரிகைக்கூடத்தில் நுழையும்பொழுது அவரால் அழைக்கப்பட்ட அனைவரும் காத்திருந்தனர். எரிமலை வெடிக்கபோகிறதா?

டிரைபசினுடைய மனைவியின் கண்கள் நம்பிக்கையால் ஒளிவிட்டன. வழக்கறிஞர் லபோரிக்கு ஒவ்வொரு வினாடியும் யுகம்போலத் தோன்றியது. அனதேல்பிரான்சுக்கு உட்கார முடியவில்லை. எல்லோருக்கும் வணக்கம் செலுத்திவிட்டு ஜோலா தன் கையெழுத்துக் கட்டைப்புரட்டினார்.

"பிரெஞ்சுக் குடியரசின் தலைவரே...டிரைபஸ்வழக்கு பிரெஞ்சு நீதியின்மீது அழியாத களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது..."