பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

77


டாக்டர் லட்சுமணசாமி மருத்துவத்திலும், கல்வியிலும் சிறந்தவர். மருத்துவம் மனித உடலைப் பாதுகாக்க--கல்வி மனித மனத்தைப் பாதுகாக்க என்ற வகையில் அவரது பணி பயன்பட்டு வருகிறது. உறுதியான உடலில் தூய்மையானதொரு மனம்--இந்த அவசியத்தை பல்லாயிரவர் உள்ளங்களில் பதிய வைத்தவர் அவர்.

அரசியற் புயலில் அவர் சிக்கிக் கொள்ளவில்லையென்றாலும் தூரத்தே நின்று அரசியலைக் கவனித்து அதை அமைதிப்படுத்துவதில் அவர் ஈடுபட்டார்.

இவ்விரட்டையர் தங்கள் அலுவல் யாவிலும் கடைப்பிடித்த பண்பாடும் நாகரிகமும் தனிச் சிறப்பானவை.

அந் நாட்களில் நடந்த அரசியல் விவாதங்கள் மிக நேர்த்தியானவை. பிரச்சினைகளும்--சாதனைகளுமே விவாதிக்கப்படும். அந்த விவாதத்துக்கப்பால் தோழமை உணர்வே அங்கு மிகுந்திருக்கும்.

இந்நாட்களில் அத்தகைய விவாதங்கள் நிகழ்த்தப்படுகின்றனவா? பிரச்சினைகளைப் பற்றிப் பேச்சு எழுகின்ற நாமே பிரச்சினைகளாக மாறி விடுகிறோம். அந்த அளவுக்கு நாம் குன்றி விட்டோம்.

இத்துணைக் கண்டம் அதன் ஜனநாயக வாழ்வின் இருபதாம் வயதினைக் கடந்து கொண்டிருக்கிறது. சர். ராமசாமி போன்ற பெரியவர்கள் இந்த ஜனநாயக வாழ்வை முறைப்படுத்திட முன் வந்தால்தான் ஜனநாயகம் தழைத்தோங்கும். இல்லையேல் அழிவுப் பாதையை நோக்கி இட்டுச் செல்வதாகவே இருக்கும்.

ஜனநாயகம் என்பதால் சாதாரணத் திறமையுடையவர்கள் அரசியலை வழி நடத்திச் சென்றால் போதுமென்று எண்ணுவதோதோ கூடாது. உரம் மிக்க வல்லவர்கள் தேவை. நடத்தும் ஆற்றல் உள்ளவர்கள் தேவை. எனவே 81 வயதிலும் வலிமையுள்ளவர்களாக 81