பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96


அறையிலே--தொட்டிலோ, ஏணையோ இருக்கும். அங்குத் தூங்கும் குழந்தையை வேறோர் தொல்லைப்படுத்தும்--அதைவிடப் பெரிய குழந்தை, இதனைச் சமையறையிலுள்ள தன் தாயிடம் சென்று கூறும். பூஜை அறையில் அப்பர் இருப்பார் போய்ச்சொல் என்று தாய் கூறுவாள், அங்கு அவர் இருக்கமாட்டார். மாட்டுத் தொழுவத்துக்குப் பக்கத்திலுள்ள திண்ணையில் படுத்துக் கொண்டிருப்பார். நாம் வீடு ஏறக்குறைய இதுபோலிருக்கும். கூடம் பாதுகாப்பான அறை--படுக்கை அறை சமையலறை--பூஜையறை--இவை எல்லாம் இருக்கும்--புத்தகம் உள்ள இடம், படிப்பதற்கென்று ஒரு அறை தேடிப்பாருங்கள் மிகமிகக் கஷ்டம். பல வீடுகளிலே தூண்கனின் மீது சாளரங்களின் இடுக்கில், பிள்ளையார் மாடத்தில் சில புத்தகங்கள் இருக்கும். ஆனால் புத்தகசாலை உண்டா? என்று கேளுங்கள்--பதில் கூறமாட்டாக்கள்; ஒரு புன்னகைத் தோன்றும். பைத்தியக்காரா! இது வீடு நீ என்ன இங்கு வந்து புத்தகசாலை கேட்கிறாயே, என்று பொருள் அந்தப் புன்னகைக்கு.

வீடுகளில் மேஜை நாற்காலி சோபாக்கள் இருக்கும்; பீரோக்கள் இருக்கும்; அவைகளில் வெள்ளித் தரம்பாளமும், விதவிதமான வட்டில்களும், பன்னீர் சொம்பும் இருக்கும்; பித்தளைப் பாத்திரங்கள் இருக்கும்; உடைகள் சிறு கடை அளவுக்கு இருக்கும்; மருந்து வகைகள் சிறு வைத்தியசாலை அளவுக்கு இருக்கும், அப்படிப்பட்ட வசதியுள்ள வீடுகளிலேயுங்கூட புத்தகசாலை இராது--இருக்க வேண்டுமென்று எண்ணம் வருவதே இல்லை--அவசியமும் தோன்றுவது இல்லை.

இந்தச் செப்புக்குடம் சீரங்கத்தில் வாங்கியது. தேவர் கவியாணத்தின்போது திருப்பதியில் வாங்கினோம் இந்தத் தாம்பாளத்தை. பெல்லாரிக்குச் சென்றோமே பெண்