உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

நிலையும் நினைப்பும்


விமானம் பறக்கிறது என்று வைத்துக்கொள்வோம். சாலை ஓரத்திலுள்ள பெரியவர் அண்ணாந்து பார்ப்பார். கண்ணில் ஒருவித மிரட்சி தோன்றும். இந்த மாறுதலுடன் அவர் நினைப்புக்கும், ஆகாய விமானத்திற்குமுள்ள தொடர்பு அறுந்துவிடும். அவர் உடனே விமானத்திற்குப் பக்கத்தில் பறக்கும் கருடனைப் பார்ப்பார். பார்ப்பதற்குக் கொடுத்துவைத்தோமே என்று சந்தோஷப்படுவார்: கன்னத்தில் போட்டுக்கொள்வார். அத்துடன் நிற்கமாட்டார். தன் பக்கத்திலுள்ள சிறுவனையும் கருடனைப் பார்க்கச்சொல்லி கன்னத்தில் போட்டுக்கொள்ளச் சொல்லுவார். விமானத்தையும் பார்க்கிறார், கருடனையும் பார்க்கிறார், கருடனிடம் கவனம் செலுத்துகிற அளவுக்கு விமானத்தினிடம் காட்டமாட்டார். விமானம் இந்த நாட்டில் ஒரு விஞ்ஞான கருவியாக இருந்து என்ன பயன்? மேல்நாட்டில் ஒரு சிறுவன் ஆகாயவிமானம் பறக்கிறதைப் பார்க்கிறான் என்று வைத்துக் கொள்வோம், அவன் என்ன நினைப்பான்? அதன் வால்த் தட்டைப் பார், புது மாதிரியாக இருக்கிறது. அதில் போட்டிருக்கும் கொடியைப் பார், நம்முடைய தேசத்துக் கொடி, அது என்னுடைய அப்பா கட்டிய விமானம். அதை ஓட்டுபவன் விமானப் படையில் சேர்ந்த என் அண்ணனாயிருப்பானோ என்றெல்லாம் யோசிப்பான். ஏன்? அவன் நாட்டு நிலையும் நினைப்பும் ஒன்றாய் உயர்ந்திருக்கிறது. இங்கோ நிலை உயர்ந்திருந்தும் நினைப்பு உயர வில்லை. மூன்றடுக்கு மாடியில் படிக்கட்டுக்களைக்