உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

நிலையும் நினைப்பும்


குணப்படுத்த முடியாது. பின் யாரால் அந்த நோயைப் போக்கமுடியும். வாலிபப் பருவத்திலுள்ள மாணவர்களால்த்தான் முடியும். பகுத்தறிவு என்னும் ஒரே மருந்தால் வைதீகம் என்னும் நோயைப் போக்கமுடியுமே தவிற வேறு எந்த மருந்தாலும் போக்க முடியாது. பகுத்தறிவுப் பிரச்சாரம் கடினமானதுதான். ஆனால் வாலிபப் பருவத்திலுள்ள மாணவர்களைவிட வேறு யாரும் லாயக்கானவர்கள் (அந்தப் பணிக்கு) இல்லை. மாணவர்களே கிராமாந்திரத்திலுள்ள மக்களிடம் அறிவு எடுத்துச் செல்லுகிற தூதுவர்களாக அனுப்பப்படவேண்டும். B.A., M.A. பட்டம் பெறும் முன்னோ பின்னோ ஓர் ஆண்டு மாணவர்கள் சமூகத்திற்குச் சேவை செய்யவேண்டும் என்று சில மாகாணங்களில் சர்க்கார் கொண்டுவரும் திட்டத்தை நான் பாராட்டுகிறேன். மாணவர்கள் உண்மையிலேயே சமூகச் சேவை செய்ய வேண்டும்; மாணவர்கள் கிராமங்களுக்குச் செல்லவேண்டும். கிராமங்களுக்குச் சென்று மக்களுடைய நிலையையும் நினைப்பையும் நேரில் காணவேண்டும். சென்று பார்த்தால்தான் தெரிந்துகொள்ள முடியும். அங்கு சீர்திருத்தத்தைப்பற்றி தேமதுர கீதம் கேட்கப்படவில்லை; பேதம் போக்கப்படவில்லை. எந்த தீங்கும் தீமையும் தீய்க்கப்பட்டதாகக் கருதப்பட்டதோ, அந்த தீங்கும், தீமையும் தீய்க்கப்படாமலிருப்பதைக் காண்பார்கள். எந்த நிலையும் நினைப்பும் நாட்டு மக்களிடம் இருக்கும் என்று கருதினார்களோ அந்த நிலையும் நினைப்பும் அவர்களிடம் நிலவியில்லாததைக் காணுவார்கள். எந்த சமூகப்