உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிலையும் நினைப்பும், மூன்றாம்பதிப்பு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நிலையும் நினைப்பும்

24



இத்தாலிய நாட்டு எழிலரசிகள் தங்கங்களைக் கொடுத்து வாங்கினார்கள்; தமிழ் நாட்டு மன்னன் ஒருவன் ஈழநாடு சென்று வெற்றி பெற்றான்; இமயத்தில் சேர சோழ பாண்டியர்களது இலச்சினைகள் பொறிக்கப்பட்டது: தமிழர்களை எதிர்ப்பவர்கள் கிடையாது; எட்டுத்திக்கும் வெற்றிமுரசு கொட்டினார்கள்; போரும் காதலும் அவர்கள் போற்றிய பொருள்கள்' என்றெல்லாம் பண்டைத் தமிழ்நாட்டின் நிலையைப்பற்றி எடுத்துக் கூறினால்தான், பாமர மக்களும் நாம் ஆசைப்படுவதுபோல மீண்டும் தமிழ் நாட்டில் செல்வம் தழைக்கவேண்டும், நல்லெண்ணங்கள் நினைக்கவேண்டும் என்ற நினைப்பைப் பெற முடியும்,

ஆனால் அரசாங்கம் இப்படித் தமிழனின் பண்டைப் பெருமையை எடுத்துக்கூறி இன்று மனதில் படர்ந்துள்ள மூட நம்பிக்கைகளை அகற்றுமாறு பகுத்தறிவுப் பிரசாரம் செய்வதை ஆபத்து என்று கருதுகிறது. பல்கலைக் கழகத்தில் பாடப் புத்தகங்களில் பகுத்தறிவு புகுத்தப்படுவதைத் தடை செய்கிறார் கல்வி மந்திரியார். மறைந்த வரலாற்றை மக்களுக்குக் கூறுவது சர்க்காருக்கு வகுப்புத் துவேஷமாம். நான் நிச்சயமாகச் சொல்லுகிறேன். மாணவர்களை எங்களுடைய பிரச்சாரங்களைக் கேட்கவேண்டாம் என்று தடுத்தாலும், பல்கலைக் கழகத்தை மூடினாலும், பகுத்தறிவுக்குத் தடைவிதித்தாலும் பிரச்சாரத்தைச் சட்ட விரோதமாக்கினாலும், அறிவுப் பஞ்சமே உண்டாக அரசாங்கம் ஏற்பாடு செய்தாலும், மண்டபங்களிலே