உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரு கடற்கால்கள்

317

லெஸெப்ஸின் இந்தப்பிரசாரம் பெரும் பயன் தந்தது. ஆயினும் அது கருதிய விளைவை அளிக்கவில்லை.

பிரிட்டனில் மக்கள் எங்கும் ஆதரவு காட்டினர். தனிப்பட்ட முறையில் 1856இலே விக்டோரியா அரசியே அவரை வரவேற்றுத் திட்டத்தில் அக்கரை காட்டினார்.மன்னுரிமை நில நூற்கழகம் (Royal Geographical Society) அவருக்கு நன்மதிப்புத் தந்தது. அறிஞர் பலர் கேள்விகள் கேட்டு விளக்கம் பெற்று மனநிறைவு தெரிவித்தனர் வணிகர், கப்பல் கழகத்தினர், அறிஞர் பேராதரவு காட்டினர். இதற்குச் சான்றாக, லெஸெப்ஸ் அவர்கள் ஆதரவுக் கையொப்பங்களையே ஆயிரக்கணக்கில் திரட்டி அச்சிட்டு வெளியிட்டார். ஆனால் இத்தனைக்குப் பின்னும் பாராளும் மன்றத்தில் பிரிட்டனின் அமைச்சர்கள் தம் அரசியல் வாதங்களால் மக்கள் எதிர்ப்பை மழுப்பிச் சமாளிக்கவே முயன்றனர்.

பிரிட்டிஷ் அரசியலார் இச்சமயம் துருக்கியின் நலம் பற்றியும் பாதுகாப்புப் பற்றியும் மிகுந்த கவலை தெரிவித்தனர். துருக்கியின் கடற்படைப் போக்குவரவைப் போர்க்காலங்களில் தடுப்பதற்கே பிரான்சின் தூண்டுதலால் எகிப்து சூயஸ் திட்டத்தை ஆதரிக்கிறது என்று பிரிட்டிஷ் அமைச்சர்கள் கூறினர்.

துருக்கிக்கும் எகிப்துக்கும் இடையே மனக்கசப்பை உண்டு பண்ண இது பயன்பட்டது.ஆனால் பின்னாளய வரலாறும், போக்கும் பிரிட்டனின் இவ்வாதத்தைப் பொய்ப்பிக்கின்றன.

ன்

னனில் அடுத்த நூற்றாண்டில் துருக்கியிடமிருந்து எகிப்தைப் பாதுகாக்கத்தான் அது பெரும்பாடுபட்டு வந்தது.அதனுடன் பிரிட்டனின் அனுபவத்திலேயே சூயஸின் பயன் நன்கு தெரிய இடமிருந்தது. இந்தியாவில் 1857ஆம் ஆண்டுப் புரட்சியை அடக்கப் படைகளை நன்னம்பிக்கைமுனை வழியாக

விரைந்தனுப்ப முடியாமல் பிரிட்டன் திணறிற்று.

முதலில் துருக்கி நலனிலும், பின்னால் எகிப்து நலனிலும் பிரிட்டன் கொண்ட அக்கரை உண்மையில் நடுவுலகில் தானே ஆதிக்கம் கொள்வதற்கான அரசியல்வாதமேயன்றி வேறன்று. அதன் உண்மை நோக்கம் எகிப்து மீது துருக்கிக்கு இருந்த மேலுரிமையைத் தனதாக்கிக் கொள்வதேயாகும்.