உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அப்பாத்துரையம் - 10

374) || – – ஆர்வமும் மட்டுமன்றி, அவர்கள் கூட்டமைதியும் நல்வாழ்வு வசதிகளும், திட்ட முதல்வர்களின் திறமை மட்டுமன்றிச் சாதனக் கருவிகல நிறைவும், முன்னேற்பாடுகளும் அதற்கு இன்றியமை யாதவை என்பதை அவர்கள் உணர்ந்து செயலாற்றினர்.

வேலை தொடங்குவதற்கு முன்பே பல்வேறு தொழில்களுக்கும் உரிய பணியாளர்கள் தொகுதி தொகுதியாகத் திரட்டப் பெற்றனர். அவர்கள் அனைவருக்கும் வேண்டிய குடியிருப்பு மனை வசதி, குடிநீர் முதலிய வாய்ப்பு நலங்கள், உடல் நல மருத்துவப்பணி யுதவிகள் ஆகியவை முன் கருதலுடன் வகுக்கப்பட்டன. திட்டப் பகுதியின் ஆட்சி முறைகள் ஒழுங்கு படுத்தப்பட்டிருந் தன.இயந்திர சாதனங்கள் தருவிக்கப்பட்டன. இவையனைத்துக்கும் மேலாக, முன்பே அமைக்கப்பட்டிருந்த பனாமா இருப்புப்பாதை திட்ட காலப் போக்கு வரவுக்கு உறுதுணை தரும்படி, புது முறையில் செப்பஞ் செய்யப்பட்டது.

அமெரிக்க இணையரசில் மீண்டும் மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படும் பீடும் பெருமையும் பெரியார் தியோடோர் ரூஸ்வெல்ட் பெற்றிருந்தார். பனாமாத் திட்டத்தை அவர் அமெரிக்காவின் வெற்றிச் சாதனைகளிடையே மிகப் பெரிய வெற்றிச்சாதனை என்று கருதினார். அமெரிக்காவின் வினை முனைப்பு,அறிவூக்கம், உயரிய நோக்கம், பொருளியல் சிக்கனம் ஆகிய அனைத்துக்கும் பனாமாத் திட்டம் ஓர் அரிய நற்சான்று என்று அவர் குறிப்பிட்டார். அதனை அவ்வாறு ஆக்கிய பெருமை திட்டத்தின் உயிர் முக்கியத்துவமுடைய அரங்கங்களுக்குப் பொறுப்பு வகித்து ஒழுங்கமைத்த வல்லுநர்களைச் சார்ந்ததாகும்.

பனாமாத்திட்டத்தில் வெற்றி நாட்டுவதற்கு உதவிய உயிர் முக்கியத்துவமுடைய அரங்கங்கள் அமைப்பாண்மை, பொறி வலாண்மை, உடல் நலத்துறை ஆகிய மூன்றுமே என்னலாம். அமைப்பாண்மை,முழுவதற்கும் பொறுப்பேற்ற ஆட்சித் தலைவர்களுள் குறிப்பிடத் தக்கவர் தியோடோர் ரூஸ்வெல்ட்டேயாவர். அவருக்கு உற்ற அருதுணைவராக வில்லியம் ஹோவர்டு டாப்ட் அமைந்தனர். பொறிவலாண்மைத் துறையிலும், இயக்கும் திறத்திலும் ஜான், எப். வாலஸ், ஜான் எப். ஸ்டீவென்ஸ், தியோடோர் பி.ஷான்ட்ஸ், கர்னல் ஜார்ஜ் டபள்யூ. கெதால்ஸ் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். உடல் நல மருத்துவ